காலத்தை அளவிட்ட
நினைவுச் சுவடுகளவை
நிச்சயம் தெரியும்
நித்தியம் வாழ்பவையென்று … !
இருட்டில் சிரிக்கும் அல்லியாய்
இனிய அந்த
மாலைப் பொழுதுகள் !
தெளிவற்ற இருள்சூழ்
தருணங்கள் !
இதமான இசையில்
இதயம் நகர்ந்த நாட்கள் !
என,
அத்தனையும்
துணிச்சலாய் வரவேற்ற
அந்த இரவுப் பொழுதுகள் !
இன்னும்
நினைவிருக்கிறது …
மீண்டும் ஒருமுறை,
இதயத்தில்
கனன்றுகொண்டிருக்கும்
இந்த
இரகசிய ரணங்களை
இனிதே மறைக்க
இதமான மெல்லிசை
இதயத்தில் மருந்தாக ….. !
நீண்டகால
தேய்பிறையினின்று
மீண்டுமென்
வாழ்வியற் படலத்தை
மீளாரம்பம் செய்தபோது
திடீரென தீப்பொறியொன்று-என்
சிந்தையில் : சிரித்து சென்றது ….
“ஆம்,
நெருக்கியமிழ்த்தும்
வலிகளை
நெருங்கிச்சென்று
சொல்லி விட
உறங்கும் உன்னிரவில்
உனக்கென்றோர்
உறவு வேண்டுமென்று…….”
பெருகு இராமகிருஷ்ணா
தமிழாக்கம்:
மிதுஷா செல்வராஜா
மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறை
யாழ் பல்கலைக்கழகம்.