நெற்றிக்கண்
“நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ” என்று கூறிய நக்கீரரின் வழியில் வந்தவர்கள் கூட நெற்றிக்கண் என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.அதுவும் இன்றைய விஞ்ஞான யுகத்தில் கடவுளின் இருப்பையே கேள்விக் கேட்கும் மக்கள் அவரின் அங்கமாக குறிப்பிட்ட நெற்றிக்கண்ணை மட்டும் ஏற்றுக்கொள்வார்களா? என்றால் விடை கண்கூடு.
சரி விஷயத்துக்கு வருவோம் நாம் நெற்றிக்கண் என்று கூறுவதைப் போல எகிப்தியர்கள் சுமார் 3500 வருடங்களுக்கு மேலாக உடலில் ஒரு அங்கத்திற்கு மூன்றாவது கண் என்று பெயர் வழங்கி வருகிறார்கள்.உண்மையில் அவர்களும் நம்மைப்போல கண்ணைத்தான் குறிக்கின்றார்களா என்றால் அதுதான் இல்லை. அவர்கள் மூன்றாவது கண் என்று குறிப்பிடும் பகுதி மூளைக்குள் அமையப்பெற்ற ஒருவித கூம்புச்சுரப்பி.Halen என்ற அறிஞர் இதை ஆன்மாவின் இருப்பிடம் என்று வர்ணித்திருக்கின்றார்.இச்சுரப்பியின் ஆற்றல் அதிகரிக்க மனிதனுள் அபரிமிதமான சக்தி உண்டாகும் என்றும் எகிப்தியர்கள் நம்பினார்கள்.
இதைப்பற்றி அறிவியல்பூர்வமாக Lucy என்கின்ற ஆங்கிலப்படத்தில் அருமையாக விளக்கியிருப்பார்கள். சாதாரணமாக மனிதர்களாகிய நாம் மூளையின் சிறுபங்கையே பயன்படுத்துகின்றோம்.ஆனால் நாம் நமது மூளையை முழுமையாக பயன்படுத்தினால் எம்மால் கற்பனை கூட செய்ய முடியாத ஆற்றலகளை வெளிப்படுத்த முடியும் என்பது எத்தனையோ ஆராய்ச்சிகள் வாயிலா நிரூபணமாகிவிட்டது..அவ்வாறு விசித்திர ஆற்றல்களைப் பெற்றவர்களை நாம் யோகிகளாகவும் சித்தர்களாகவும் வரையறுத்து விடுகின்றோம்.மூளையை நாமும் அவர்களும் பாவிக்கும் அளவிலுள்ள வித்தியாசம் தான் அத்தகைய விசித்திர ஆற்றல்களுக்கு அச்சாணி.
எனவே முன்னோர்களால் ஆதியோகியாக வர்ணிக்கப்படுகின்ற சிவன் என்ற கதாப்பாத்திரம் உண்மையில் இருந்து இருந்தால் அவரது அதீத ஆற்றலுக்கு உவமையாய் முக்கண் சித்தரிக்கப்பட்டிருக்கலாம்.அது காலப்போக்கில் மூன்றாவது கண்ணாக புராணம் மற்றும் இதிகாசங்களில் புனையப்பட்டிருக்கலாம்.இவ்வாறு மூன்றாவது கண்ணை பற்றி பல்லாயிரம் கதைகள் எழுந்திருந்தாலும் எகிப்தியர்களைப் போன்று மூன்றாவது கண்ணை மூளைக்குள் தேடாமல் வெளியில் தேடியது தான் எம்மை அறிவியலில் இருந்து தூர நிற்க வைத்துவிட்டது.
இவ்வாறு புளிய மரத்தில் பேய் உலாவுவது தொடங்கி கடவுளின் படங்களில் பின்னால் சித்தரிக்கப்படும் ஒளிவட்டம் வரை ஒவ்வொன்றுக்கும் விஞ்ஞான ரீதியாக எதோ ஒரு காரணம் இருக்கத்தான் செய்கின்றது.என்ன வாய்வழியாக கதைகள் பரிமாறிய காலத்தில் ஒவ்வொருவரும் மிகைப்படுத்தப்போய் இன்று அக்கதைகள் யாவும் கற்பனையே என்ற மாய வலைக்குள் சிக்கிவிட்டன.ஆனால் ஒவ்வொன்றையும் தோண்டியெடுத்து அறிவியல் ரீதியாக ஆராயமுற்படும்போது அந்த புனைவுகளுக்கான தகுந்த பதில் நிச்சயம் கிடைக்கும்.
ஏனெனில் “எமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை