இதழ் 20

ஈர நிலங்களின் மீது ஈரம் வேண்டும் – 02

உலக அளவில்

உலகின் அனைத்துப்பகுதிகளிலும் ஈரநிலங்கள் காணப்பட்டாலும் ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும், அமேசன் அண்டிய பிரேசில் பகுதிகளில் முக்கியமான ஈரநிலங்கள் காணப்படுகின்றது, உலகில் ஏறக்குறைய 1112 ஈரநிலப்பகுதிகள் காணப்படுவதுடன் அவை மொத்தமாக 89.37 மில்லியன் ஹெக்டயர் நிலப்பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. இந்தியா, தென்அமெரிக்காவின் அமேசான் வடி நில பகுதி, ஆப்பிரிக்காவின் விக்டோரியா ஏரி, காங்கோ நதி முகத்துவார பகுதிகளிலும், ரஷியாவின் வோல்கா நதி பாயும் மத்திய சமவெளி பகுதிகளிலும் உள்ளன.

இந்தியா அளவில்

இந்தியாவில் 27403 சதுப்பு நிலங்கள் உள்ளன இதில் 23444 சதுப்பு நிலங்கள் உள்பகுதியில் அமைந்துள்ளன. 3959 சதுப்பு நிலங்கள் மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கோவா, மகாரா~;டிரம், அந்தமான் – நிகோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோரங்களில் அமைந்துள்ளன. இதன் பரப்பு 6750 சதுர கிலோ மீட்டர். இதில் 80 சதவீத சதுப்பு நிலங்கள் அலையாத்திக் காடுகளாக உள்ளன.

இந்தியாவில் பிச்சாவரம் சதுப்புநிலம் உலகின் இரண்டாவது பாரிய சதுப்பு நிலம். இவை தமிழில் அலையாத்தி காடு எனவும், ஆங்கிலத்தில் மாங்குரோவ் காடுகள் என்றும் அழைக்கப்படும். பிச்சாவரம் சதுப்பு நிலத்தில் மான்கள், உடும்பு, காட்டுபன்றி, முதலியன 30 வகையான விலங்குகளும், ஊர்வனவற்றில் சிறுத்தை, தவளை, அரியவகை தவளை, தண்ணீர் பாம்பு, நண்டு, வளைநண்டு, ஆமை முதலிய உயிரினங்களும், பறவைகளில் கூழைகடா, கொக்கு, நாரை, நாமக்கோழி, நீர் ஆள்காட்டிகுருவி, முக்குளிப்பான் ஆகிய 200 வகை உண்டு.

ஆசிய சதுப்பு நில இயக்ககத்தின் அறிக்கையில், இந்தியாவில் மொத்தம் உள்ள நிலத்தில் 18.4 சதவீதம் சதுப்பு நிலங்களாக உள்ளன. 70 சதவீத சதுப்பு நிலங்கள் நெல் வயல்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியைக் காரணங்காட்டி விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதே சதுப்பு நிலங்கள் குறைய முக்கியக் காரணமாக உள்ளது. 19 இடங்களில் சதுப்பு நிலங்கள் பறவைகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு, மேம்பாட்டுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மொத்த சதுப்பு நிலங்களில் 50 சதவீதம் மட்டுமே தற்போது உள்ளது. இவையும் ஆண்டுக்கு 4இ000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வீதம் குறைந்து வருகின்றன. இதன் மூலம் மொத்த சதுப்பு நிலங்களில் ஆண்டுக்கு 3 சதவீதம் இல்லாமற் செய்யப்படுகின்றது என ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் ஈரநிலங்களின் பரம்பல்

இலங்கையில் பலவகையான ஈரநிலங்கள் காணப்படுகின்றன. அதாவது ஆழமற்ற குடாக்களையும், நீரிணைகளையும் கொண்டவை மற்றும் கடனீரேரிகள், சிறுதீவுகள், பாறைகடற்கரை, உப்பளங்கள், நீர்தேக்கப்பகுதிகள், பொங்குமுகங்கள், வில்லுகள் போன்ற வடிவில் இவை வியாபித்து உள்ளன. இவ்வாறான ஈரநிலங்கள் பின்வருமாறு:

1.         ஆனைவிழுந்தான் குளம்

2.         அனுராதபுர வாவி

3.         பெல்லவன்வில சதுப்புநிலம்

4.         புத்தள ஈரநிலங்கள்

5.         சிலாப கழிமுகங்கள்

6.         கொழும்பு வெள்ளத்தடுப்பு பகுதி

7.         ஹந்தப்பான் பெந்திய வில்லு

8.         காரகண்லேவாய

9.         கொக்கல ஏரி

10.      லுனம காலடிய களப்பு

11.      மீ ஓயா

12.      முத்துராஜாவால கடலநீரேரி

13.      மின்னேரியா நீர்த்தேக்கம்

14.      உடைவளவை நீர்த்தேக்கம்

15.      நச்சு துவாரி ஏரி

16.      தப்போவ நீர்த்தேக்கம்

17.      வீரவல சரணாலயம்

18.      சேனநாயக்க சமுத்திரம்

19.      வடுரான சதுப்புநில காடு

முத்துராஜாவால ஈரநிலம்

இலங்கையில் உள்ள ஈரநிலங்களில் முக்கியம் பெற்ற ஈரநிலமாக முத்துராஜவல காணப்படுகின்றது. இது அதிகளவிலான உயிர்பல்வகைமையினை கொண்டு விளங்குகின்றது. இவ் முத்துராஜவல ஈரநிலமானது “Field of Royal Treasure” எனவும் அழைக்கப்படுகின்றது. இது கொழும்பிலிருந்து வடக்காக 10-30 கிலோமீட்டர் தொலைவில் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவ் ஈரநிலமானது 3068ஹெக்கடேயர் பரப்பினையும் நீர்கொழும்பு கடனீரேரியுடன் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக 3164ஹெக்கடேயரினை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முத்துராஜாவால ஈரநிலப்பரப்பில் பறவைகளினை உள்ளடக்கிய சரணாலயம் காணப்படுகின்றது. இச்சரணாலயம் 1777ஹெக்கடேயர் பரப்பினை கொண்டுள்ளது. முத்துராஜாவால ஈரநிலமானது கி.பி 5000ஆண்டுகளுக்கு முன்னரில் இருந்து காணப்படுகின்றது. இது களனி கங்கையின் வாய்பகுதியுடன் இணைகின்றது. இங்குள்ள தாவர இனங்களில் 7 வகையான பிரதான தாவரங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக Marsh, Lactic flora, Shrub land, Reed, Swamp, Grassland, Stream bank, Mangrove forest ஆகியன காணப்படுகின்றன.

இவ் ஈரநிலப்பகுதியில் 40 வகையிலான மீனினங்களும், 14 வகையான ஊர்வனவும், 102 வகையிலான பறவைகளும், 22 வகையிலான முலையூட்டிகளும், 48 வகையிலான வண்ணாத்துப்பூச்சிகளும் காணப்படுகின்றன. இங்குள்ள முக்கியமான பறவைகளாக Large egrets, Purple heron, Indian pond heron, Little black bittern, Yellow bittern, Chestnut bittern, Lesser whistle teal காணப்படுகின்றன.

அத்துடன் இவ் முத்துராஜாவால ஈரநிலப்பகுதி சிறந்த சுற்றுலாப்பகுதியாகவும் அதிகளவு சுற்றுலாப்பயணிகளினை கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றது. அத்துடன் புதிய விடுதிகளினையும் உள்ளடக்கி இலங்கையின் அபிவிருத்திக்கு அணி சேர்கின்றன.

Related posts

எண்டோமெட்ரியோஸிஸ்

Thumi2021

ஆசிரியர் பதிவு

Thumi2021

பார்வைகள் பலவிதம்

Thumi2021

Leave a Comment