மெஸ்ஸி சர்வதேச அணிபயணம் சிறிது வித்தியாசமானது. அவரது சிறு வயதில் ஆர்ஜென்டினாவில் பிறந்து வளர்த்தாலும் கூடிய காலம் ஸ்பெயினில் வாழ்ந்தபடியால் அவருக்கு ஸ்பெயினில் ஆடும் வாய்ப்பு 2010 வழங்கப்பட்டது. ஆனாலும் சொந்த நாட்டுக்கு மட்டுமே ஆடுவேன் என்று வந்த வாய்ப்பை மறுத்து விட்டார் .சொந்தநாட்டிற்காக இதுவரை u -19 உலகக்கோப்பை மற்றும் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார். அத்துடன் 2014 ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி மட்டும் அழைத்து சென்று நூலிழையில் அந்தவாய்ப்பை தவற விட்டார். சிறப்பாக ஆடிய அவருக்கு அந்த உலகக்கோப்பையின் சிறந்த வீரருக்கான தங்க பந்து விருது வழங்கப்பட்டது. அத்துடன் அமெரிக்க நாடுகள் இடையே நாடைபெறும் copa america போட்டியில் 2 முறை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றும் தோற்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த மெஸ்ஸி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் . இந்த முடிவை மாற்றுமாறு அவர் நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கிபோராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தனது முடிவை மாற்றி 2022 உலக கோப்பை வரை ஆடுவதாக உறுதியளித்தார். இதுவரை ஆர்ஜென்டினா அணிக்காக 142 போட்டிகளில் விளையாடி 71 கோல்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.
மன்னன் மெஸ்ஸி, காதல் மன்னனும்கூட. கூச்ச சுபாவம் கொண்டவர் என்றாலும் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பட்டியலுக்குக் குறைவு இல்லை. இறுதியில் அண்டோனெல்லா என்கிற அர்ஜென்டினியப் பெண்ணைக் கரம் பிடித்தார். அவருக்கு இன்று மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இன்றைய நவீன கால்பத்தின் முகவரியாக மெஸ்ஸியும் ரொனால்டோயும் இருக்கின்றனர். அவர்கள் இருவர் ஆடுவதையும் பார்க்கும் சந்தர்ப்பம் பெற்ற கால்பந்தின் ரசிகர்கள் அதிர்ஷ்டம் செய்த்தவர்கள் தான். கால்பந்து ‘எதற்கெடுத்தாலும் எங்களை ஒப்பிடுவது எங்களுக்கே களைப்பாக இருக்கிறது’ என ரொனால்டோ சொல்ல, ‘ரொனால்டோவுடன் ஒரே அணியில் இணைந்து விளையாட விரும்புகிறேன்’ என்கிறார் மெஸ்ஸி. இந்த ஆண்டு 34 வயதாகும் மெஸ்ஸி எனும் மந்திரவாதி இன்னும் பல சீசன்கல் விளையாடி கால்பந்தின் ரசிகர்களை சந்தோசப்படுத்தவேண்டும் என்பதே எல்லோரின் அவா.