இதழ் 21

கம்பனில் அறம்

தமிழ் காப்பிய உலகில் உச்ச படைப்பு கம்பராமாயணம். சோழர் காலம் படை வலிமையாலும் செல்வ வலிமையாலும் செழிப்புற்று விளங்கியது. வளமான பொருளாதாரத்தால் கலைகளும் புலவர்களும் ஆதரிக்கப்பட்டனர்.

சோழர் காலத்தில் கம்பன் எனும் தெய்வப்புலவர் கம்ப ராமாயணத்தை இயற்றினார் வால்மீகியின் ராமாயணத்தை கேட்டு இன்புற்று இருந்தவர்க்கு தமிழ் மரபிற்கு ராமனைக் கொணர்ந்து அச்சூழல் மரபிற்கு ஏற்ப கட்டமைத்து புரட்சி செய்தவன் கம்பன்.

ஆறு காண்டங்கள் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களால் காப்பியத்தின் வழி வாழ்வியலின் ஏதோ ஒரு செய்தியை சொல்லவருகிறது கம்பன் தேவ பாi~யில் பாடப்பட்ட ராமாயணத்தை பாட முற்பட்டபோது அதை வெறுமனவே இலக்கியமாக காட்டாது வாழ்வியலாக காட்ட முற்பட்டுள்ளார்;. கம்பராமாயணத்தில் ஒவ்வொரு பாத்திரங்களும் ஏதோ ஒரு செய்தியைச் சொல்ல வருகிறது.

‘ காசில் கொற்றத்து ராமன் கதையை…….”
சொல்ல வருவதாக பிரகடனம் செய்து கொண்ட கம்பன் பாத்திரங்கள் வாயிலாக அறத்தை போதிக்க தொடங்குகிறார்

தமிழ் இலக்கியப் பரப்பில் இன்றுவரை அறம் போதிப்பதில் உச்சம் தொட்ட நூல் திருவள்ளுவரின் திருக்குறள். கம்பன் தன் கருத்துகளை எடுத்துக்கூற வள்ளுவரை பல இடங்களில் துணைக்கு அழைக்கிறார். சமூக அறம் , அரசியல் அறம், தனிமனித அறம் அத்தனை அறங்களும் ராமாயணம் முழுதும் பாடியிருந்தாலும் தனிமனித அறத்தை கம்பன் பல இடங்களில் வலியுறுத்துவதை நாம் காணமுடிகிறது

அக்காலச் சூழலில் பெண்களுக்கு மட்டும் கற்பு ஒழுக்கம் என்பன வலியுறுத்தப்பட்டு வந்தது. கம்பனோ ராமனின் வாயிலாக பிறனில் விழையாமை என்ற அறத்தை வலியுறுத்த முற்படுகிறார்.

‘வந்த எனை கைப்பற்றிய வைகல் வாய் இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய் …….”

என ராமன் அளித்த சத்தியத்தை சீதையின் வாயால் சொல்லி ஆண்களின் அறத்தை வலியுறுத்துகிறார் பெண்களை நுகர்வுப் பொருளாக பாவித்து வந்த சூழலில் வாழ்வியல் அறத்தை காப்பிய நாயகன் வாயிலாய் கம்பன் வலியுறுத்துகிறார்.

அறம் தவறிய காமம் துயரைத் தரும் என்பதை கம்பன் இரு பாத்திரங்கள் வாயிலாக வலியுறுத்தி இருப்பதை காணலாம் வாலி இராவணன் அறம் தவறிய நிலையில் வீழ்த்தப் பட்டவர்களாக கம்பன் காட்டுகிறார். வாலி தம்பியின் மனைவியை அபகரித்தமையால் கொல்லப்படுகிறான். தான் கொல்லப்பட்டமை அறம் தவறிய நிலை என வாதிட்ட வாலி ராமனை இறுதியில் சரண் அடைகிறான் இராமனிடம் தன் தம்பியையும் மகனையும் ஒப்படைக்கும் அளவிற்கு ராமன் மீது ஈர்ப்புக் கொண்டவன் ஆகிவிடுகிறான் இங்கு தனிமனித அறத்தோடு அரசியல் அறமும் வலியுறுத்தப்படுகிறது.

வாலி வதைப் படலத்தில் இராமன் வாலியிடம் கூறுவதாக அமைந்த பாடலில்

‘அருமை உம்பிதன் ஆருயிர் தேவியை பெருமை நீங்கினை எய்தப்பெறுதியோ…..”

என பிறர் மனை நாடுதலை கண்டித்து உள்ளமையை காணலாம் வள்ளுவன் பிறனில் விழையாமை அதிகாரத்தில் இதே விடயத்தை வலியுறுத்தி உள்ளமையை காணலாம்.

‘பிறர்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு” என்கிறார்.

பிறர்மனை விரும்பியதால் வீழ்ந்ததாக ராவணன் காட்டப்படுகிறார் ராவணன் அறம் மீறல் மாரீசன், இந்திரஜித் மண்டோதரி, இலங்கினி கும்பகர்ணன் ஆகிய பாத்திரங்கள் வாயிலாக பேச வைக்கிறார்.

‘சிட்டர் செயல் செய்திலை குலச்சிறுமை செய்தாய்…”
என கும்பகர்ணன் கூற்றாய் பிறனில் விழைதல் குலச்சிறுமை என அறம் வலியுறுத்த
பட்டிருப்பதைக் காணலாம்.

ஒரு பெண் பற்றிய ஆணின் பார்வை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குகன் எனும் பாத்திரம் மூலம் காட்டி விடுகிறார்.

‘அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச…..”

என்ற பாடலில் பரதனின் கேள்விக்கு சீதை பற்றிய வர்ணிப்பின்றி கூறி இருப்பதை காணலாம்.

கம்பராமாயணம் எழுந்த காலம் சோழர் காலம் ஓயாத போர்களால் செல்வம் நிறைந்து அதைப்போல அரண்மனைக்கு அடிமைகளும் நிறைந்தனர். போரில் தோற்ற நாட்டுப் பெண்கள் அடிமைகளாக கொண்டுவரப்பட்ட மரபு அச்சூழலில் பல்வேறுபட்ட வன்முறைகளில் காணப்பட்டது. பெண்களின் மீது வன்முறை நடத்தக்கூடாது என்கின்ற அறத்தை இலக்குவன் பாத்திரம் வாயிலாக கம்பன் காட்டி விடுகிறார்.

‘வில்லும் வாளும் அணி தொட மின்னிட..”

என்ற கம்பர் செய்யுளில் ழகி~;கிந்தா காண்டத்திர் அனுமனின் ஆலோசனை பேரில் தாரை அமைத்த பெண்களைக் கொண்ட காப்பரணை இலக்குவன் தாக்காது நிற்பதை காட்டுவதன் மூலம் காட்டிவிடுகிறார். இதை வாசித்துவிட்டு தானோ இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டங்களின் போது பெண் போலீசாரை கடமைக்கு அனுப்பினார்களோ தெரியவில்லை.

திரிசடை ,விபீடணன் போன்ற பாத்திரங்கள் அறத்தின் வழி நின்று உயர்ந்த பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டு இருப்பதை காணலாம் பெண்களுக்கான கற்பினை சீதை, மண்டோதரி ஆகிய இரு பாத்திரங்கள் வாயிலாக பேசி விடுவதைக் காணலாம்.
கற்புடைப் பெண்ணின் வல்லமையை
‘எல்லை நீத்த உலகங்கள் யாவையும் சொல்லினால் சுடுவேன் தூயவன் வில்லுக்கு மாசு என்று வீசினேன் …..”
என்ற சீதையின் கூற்றின் வாயிலாய் காட்டி இருக்கிறார் வள்ளுவனும்

‘தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை….”

என அறம் வலியுறுத்தி இருப்பதை காணலாம் புலால் உண்ணாமை,கள்ளுண்ணாமை வலியுறுத்தி இருப்பதை காணலாம்.

கம்பன் தன் காவியம் முழுதும் கதை போக்கோடு இணைந்து தனிமனித சமூக அரசியல் அறங்களை வலியுறுத்தி வந்ததை காணலாம் மைய நிலை அரசுக்கு எதிரான கம்பனின் கலக குரலும் ஆங்காங்கே வெளிப்பட்டு நிற்பதை கம்பராமாயணத்தில் கண்டுவிட முடியும் வள்ளுவன் எண்ணங்களை காப்பிய கதையோட்டத்தில் பாத்திர கூற்றுக்களை கம்பன் வெளிப்படுத்துவதில் தனித்துவமாய் தெரிகிறார்.

Related posts

இயற்கை மனிதனுக்காக மட்டுந்தானா?

Thumi2021

ஈழச் சூழலியல் – 08

Thumi2021

சித்திராங்கதா – 21

Thumi2021

Leave a Comment