இதழ் 21

கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் இந்தியாவுடன் போட்டியிடலாமா? (கிரேக் சப்பல் சொல்வதென்ன?)

இந்தியா கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியா மண்ணில் தன் இரண்டாவது டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்தபின் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கிரேக் சப்பல் கூறியதாவது “இந்தியாவின் வெற்றி ஒரு ஆச்சரியம் என்று ஒருவர் நினைப்பார்! எனக்கு ஒரே ஆச்சரியம் என்னவென்றால், இந்தியாவுடன் யார் வேண்டுமானாலும் போட்டியிட முடியும் என்பது”. இந்த பதிவு இவ்வாறு அவர் சொல்லியதற்கான காரணங்களை அலச இருக்கிறது.
ஆம், இந்திய வீரர்கள் அணியில் இடம் பிடிக்கும் போது எவ்வாறான சவால்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதேயாகும். உலகிலேயே உடல் மற்றும் உளவியல் ரீதியில் கடுமையான குர்க்கா (Gurkha) இராணுவ பயிற்சிக்கு நிகரான கிரிக்கெட் பயிற்சி வழங்கப்படுகிறது. அதுவும் விராட் கோஹ்லி தலைமை ஏற்றபின் உடல்நலமே (fitness) முக்கியமானதொரு விடயமாகி விட்டது.


இந்திய வீரர்கள் 16வயது அணியிலேயே சவாலான போட்டிகளில் ஆடுகிறார்கள். ஏனேனில் இந்தியாவில் கிரிக்கெட்டே முதன்மையான விளையாட்டு. இலங்கை பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற ஆசிய நாடுகளிலும் இது தானே நிலைமை என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இந்தியாவின் சனத்தொகை அடர்த்தி காரணமாக கிரிக்கெட் நோக்கி செல்பவர்களின் எண்ணிக்கை மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம். இதைத்தான் தற்போதைய அவுஸ்திரேலியா அணியின் பயிற்சியாளரும் “1.5 பில்லியன் இந்திய மக்களில் 11 அணி வீரர்கள்” என்றார். எனவே நாட்டின் திறமையான வீரர்கள் விளையாடுவதால்  மாநில அணிகளில் இடம் பிடிக்கவே கடுமையான போட்டி நிலவுகிறது.
இவ்வாறு திறமையான வீரர்கள் வெளிவருவதற்கு உள்ளூர் போட்டிகளின் கட்டமைப்பு மிக முக்கியம். இந்தியாவில் மாநில அளவில் 16 வயது பிரிவினருக்கான 3நாள் போட்டிகள் நடக்கிறது. கிரிக்கெட், கல்வி செயற்பாடுகளையே பின்னுக்கு தள்ளி முதன்மை பெறுகிறது. ஒரு 16 வயதே ஆன இளம் இந்திய வீரர் சப்பல் க்கு கூறியது இதுதான் “சேர், நான் பாடசாலை போவதில்லை. கிரிக்கெட்டில் எனக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே கிடைக்கும், நான் எந்த நேரத்திலும் படிக்க முடியும்.”.பின் 19வயது பிரிவினருக்கே இந்திய அளவில் நான்கு அணிகளை தெரிவு செய்து நான்கு நாள் டெஸ்ட் போட்டித் தொடர் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர் என்பன இடம்பெறுகிறது. இது 19வயதிலேயே ஒரு இளம் இந்திய அணியை உருவாக்க வழிகோலுகிறது. இவர்களே இந்தியாவை இளையோர் உலகக் கோப்பையில் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். மற்றைய நாடுகளில் இளையோர் உலகக் கோப்பை தெரிவு இப்படியாக நடக்கிறது. ஏன் கிரிக்கெட்டின் முன்னாள் சாம்பியன் அவுஸ்திரேலியாவிலேயே பதினைந்து அதிஷ்ட சாலி இளையோர் தெரிவு செய்யப்படுகின்றனர். 


19வயது கடந்தால் 23வயதிற்குட்பட்ட மாநில அளவிலான டெஸ்ட் போட்டித் தொடர். இதில் மூன்று முதல்தர போட்டி வீரர்களே ஒரு அணியில் இடம் பெற முடியும். எனவே புதிய வீரர்கள் வாய்ப்பை பெறுகிறார்கள். இதைவிட 38 அணிகளை கொண்ட முதல் தர போட்டிகள் (ராஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே 50 ஓவர் கோப்பை மற்றும் சையது முஷ்டாக் அலி 20/20 கோப்பை) பின் இந்திய ஏ அணி என்று இந்திய வீரர்கள் தேசிய அணியில் இடம் பிடிக்க முதல் பெறுகிற போட்டி அனுபவத்தை வேறேந்த நாட்டிலும் பெற முடியாது. இந்தியாவிற்கு அடுத்து அதிக முதல்தர அணிகள் இருப்பது இங்கிலாந்தில் தான். அவுஸ்திரேலியா நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வெறுமனே 6 தொடக்கம் 8 முதல்தர தர அணிகள் தான். மற்றைய நாடுகளில் முதல்தர அணிகளே தேசிய அணிகளுக்கு (ஏ அணி உட்பட) அடுத்த நிலையாக இருக்கும் போது, இந்தியாவில் முதல் தர அணிகளிலிருந்து திறமை அடிப்படையில் தெரிவு இந்திய அளவில் மூன்று அணிகளை உருவாக்கி அவர்களுக்கு இடையில் மீண்டும் ஒரு போட்டி த் தொடர் (Duleep Trophy, Deodhar Trophy). ராணி கோப்பை என்று வெற்றி பெற்ற முதல்தர டெஸ்ட் அணிக்கும் Rest of India அணிக்கும் இடையிலும் நடைபெறுகிறது. 

இதை விட ராகுல் டிராவிட் தலைமையில் பாசறை வேறு இருக்கிறது. இதனால்த்தான் இந்தியா பலமான அணியாக மிளிர்கிறது.

Related posts

ஈழச் சூழலியல் – 08

Thumi2021

பார்வைகள் பலவிதம்

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 21

Thumi2021

Leave a Comment