இதழ் 22

நவீன வேதாள புதிர்கள் 01 – நான்கு மூன்றுகள்

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை முருங்கை மரத்தில் ஏறி பிடித்துக் கொண்டு வருகின்றான். அவனிடம் பிடிபட வேண்டுமென்பதற்காகவே முருங்கை மரத்தில் காத்திருந்தது போல வேதாளமும் அவனுடன் வருகிறது. வழமைபோலவே வாயை வைத்துக்கொண்டு சும்மா இராதே வேதாளம் ஒரு புதிரை போடுகிறது.

வேதாளம்:- விக்ரமாதித்யா இந்த உலகத்திலேயே பொதுவான மொழி எது சொல்லு பார்ப்போம்.

விக்ரமாதித்தன் :- ஆங்கிலம்

வேதாளம்:- வேறு

விக்ரமாதித்தன் :- மௌனம்

வேதாளம்:- ஹா ஹா…வேறு வேறு

விக்ரமாதித்தன் :- கணிதம்

வேதாளம்:- கெட்டிக்காரன்!
கணக்கு வாத்தியார்களை எனக்கு எப்போதுமே பிடிக்கும். எனது கணக்கு வாத்தியார் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அதை உன்னிடம் நான் கேட்கிறேன். உனக்கு 4 இதமான மூன்றுகளைத் தருகிறேன். அவற்றை வைத்துக்கொண்டு 0 தொடக்கம் 10 வரையான 11 எண்களையும் உருவாக்க வேண்டும் எந்தவிதமான அடிப்படை எண்கணித குறியீடுகளையும் பாவிக்கலாம். எங்கே கண்டுபிடி பார்க்கலாம்.

விக்ரமாதித்தன் யோசிக்கத் தொடங்கினான். நீங்களும் யோசியுங்கள். சரியான விடை தெரிந்தால் விக்கிரமாதித்தனுக்கு உதவ எமக்கு அனுப்பி வையுங்கள். அடுத்த இதழில் அந்த விடையோடு சந்திக்கிறோம்.

Related posts

பெண்களும் உளவியல் முரண்பாடுகளும் – 02

Thumi2021

தாஜ்மஹாலின் பேர்த்தி – 02

Thumi2021

எனதுகளின் இற(ழ)ப்புகள்

Thumi2021

Leave a Comment