இதழ்-25

அறுபதில் கலாநிதி ஆறு. திருமுருகன்

‘அருவமும் உருவமுமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரும்மமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய’

என்கிறார் கச்சியப்பர். அதுபோல ஒரு திருமுருகனாக உலகிற்கு வந்தவர் ஆறு.திருமுருகன் ஆனது தந்தையின் நாமத்தால் மட்டுமல்ல. ஆறு போல ஓயாமல் சமயப்பணிகளுக்காகவும்இ சமூகப்பணிகளுக்காகவும் ஓடிக்கொண்டே இருப்பதனால்த்தான்.

தமிழ்க்கடவுளான முருகனும், ஞானத்தில் சிறந்தவரான புத்தபிரானும் உதித்தாக கருதப்படும் வைகாசி விசாக நன்னாளில் அவதரித்த எங்கள் கலாநிதி ஆறு. திருமுருகன் ஐயா வருகிற 28ம் திகதி மணிவிழா காண்பதை முன்னிட்டு வாழ்த்தி வணங்கி நிற்கின்றோம்.

காலமுள்ள வரை அவர் ஆற்றிக்கொண்டுள்ள சமயப்பணிகளும் சமூகப்பணிகளும் நின்று பேசும் என்பதற்கு சான்றாக அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுப்பெயர் – ஆறுமுகம் திருமுருகன்.
தந்தை – ஆசிரியர் திரு. கந்தையா ஆறுமுகம். (பிறந்த இடம் – கோப்பாய்)
தாய் – ஆசிரியை திருமதி. ஆறுமுகம் சரஸ்வதி. (பிறந்த இடம் – இணுவில்)
பிறந்த திகதி – 28.05.1961 , வைகாசி விசாகம்.

கல்வி

ஆரம்பக்கல்வி – 1-4 இராமநாதன் கல்லூரி இ சுன்னாகம்.
தரம் 5 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை.
இடைநிலைக்கல்வி – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.
பட்டப்படிப்பு – பேராதனைப்பல்கலைக்கழகம்.
பட்டப்பின் படிப்பு – தேசிய கல்வி நிறுவகம்.

கல்விப்பணி

1989 – ஆசிரியர் சேவையில் சுன்னாகம் திருஞான சம்பந்தர் வித்தியாசாலை
1993 – ஸ்கந்தவரோதயக் கல்லூரி – சுன்னாகம் – வகித்த பதவிகள் முறையே ஆசிரியர், பகுதித்தலைவர், உப அதிபர், பிரதி அதிபர்.
2008 – அதிபர் (16.03.2008 இலிருந்து 28.05.2012 வரை)

நல்லாசிரியர் விருது
1991இல் யாழ் மாவட்ட கல்வித் திணைக்களம் வழங்கி கௌரவித்தது.
2002இல் வலிகாமம் கல்வி வலயம் வழங்கி கௌரவித்தது.
2002இல் யாழ் மாவட்டம் வழங்கி கௌரவித்தது.

2008இல் ஸ்கந்தவரோதயக் கல்லூரி இசுரு பாடசாலை அபிவிருத்தி (Isuru School Development Programme) நிகழ்ச்சிக்கமைய இவரால் பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

துர்க்காதேவி ஆலயத்தில் திருப்பணிகள்

தனது 32 வயதில் துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆன்மீகத்தாய் சிவத்தமிழ் செல்வி அம்மையார் அவர்களின் அன்புக்கட்டளையை ஏற்று சிவத்தமிழ் செல்வி அம்மையார் பிறந்த நாள் அறநிதியசபை உறுப்பினராக 1993ம் அண்டு சேர்ந்து கொண்டார்.

தேவஸ்தான நிர்வாக சபையின் உறுப்பினராக 1995ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார்.

1999ஆம் ஆண்டு இலண்டனில் பல சிறப்பு சொற்பொழிவுகளை நிகழ்த்தி கிடைத்த நிதியினை அம்மையாரிடம் கையளித்தார். இந்த பாராட்டுக்களை கௌரவிக்கும் முகமாக நிர்வாக சபையால் 14.11.1999 இல் பாராட்டு விழா நடாத்தப்பட்டு செஞ்சொற்செல்வரின் தாய் தந்தையர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

32 வருடங்களுக்கு மேலாக தேவஸ்தான தலைவராக உன்னத பணியாற்றிய சிவத்தமிழ் செல்வி அம்மையாரின் இழப்புக்குப்பின் ஆறு.திருமுருகன் அவர்கள் தேவஸ்தான தலைவராக 29.06.2008இல் நடைபெற்ற நிர்வாகசபைக் கூட்டத்தில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

ஆன்மீகத்தாயின் பெயரில் நவகோணவடிவில் நினைவாலயம் அமைக்கப்பட்டு ஒன்பது கலசங்கள் வைக்கப்பட்டு 07.01.2009இல் நடைபெற்ற அம்மையாரின் 84வது பிறந்தநாள் அறநிதிய விழாவில் திறந்து வைக்கப்பட்டது.

தேவஸ்தான வடக்கு வீதியின் ஓரமாக புதிய பொங்கல் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

சிவத்தமிழ்ச்செல்வி அம்மையார் தனது ஆரம்பக் கல்வியை கற்ற மல்லாகம் கனிஷ;ட வித்தியாலயம் அமைச்சின் அங்கீகாரத்துடன் யாஃகலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஸ்ட வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கும் வகையில் வங்கியில் ரூபா ஐந்து இலட்சம் நிபந்தனையுடன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

திருமஞ்சத் திருப்பணி நிறைவு பெற்று 2009ம் ஆண்டு 6ஆம் திருவிழாவில் திருமஞ்சத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்புரிந்தார்.

29.08.2010இல் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நிறைவேறி புதுப்பொலிவுடன் 24.01.2011 இல் மகா கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் புதிய மணிக்கோபுரம் கட்டப்பட்டு லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்ட 1200 கிலோ எடையுள்ள பெரிய காண்டாமணி பொருத்தப்பட்டது.

2013இல் 9ஆம் திருவிழாவின் போது புதிய கைலாசவாகனத்தில் அம்பாள் சிவலிங்க தரிசனக் காட்சியுடன் எழுந்தருளினார்.

கும்பகோணத்திலிருந்து சமயக் குரவர்களின் ஐம்பொன் விக்கிரகங்கள் எடுத்து வரப்பட்டு உட்கோயிலில் சிற்பக்கலையுடன் கூடிய தனி ஆலயம் அமைக்கப்பட்டு 16.07.2014 இல் பிரதிஸ்டை செய்யப்பட்டு கும்பாபிசேகம் சிறப்பாக நிறைவேறியது. இதன் சகல செலவுகளையும் திருமுருகன் ஐயாவே ஏற்றார்.

நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் மூன்று மாடிக்கட்டடம் 2014இல் திறந்து வைக்கப்பட்டது.

தேவஸ்தான தெற்கு வீதியில் பூங்கா அமைப்பதற்கான நிதியை கனடாவிலுள்ள தணிகாசலம் புவனேஸ்வரி குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கினர். 12.08.2014இல் தணிகாசலம் பூங்கா திறந்து வைக்கப்பட்டது.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 30வது ஆண்டு விழாவில் சைவத்திற்கும், தமிழிற்கும், சமூகத்திற்கும் துர்க்காதேவி தேவஸ்தானம் ஆற்றிவரும் சேவைகளை பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் நாவலர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

தென்திசைக் கோபுர அத்திபாரம் 24.01.2016 தைப்பூசநாளில் நாட்டப்பெற்று 24அடி நீளமும், 16அடி அகலமும், 61அடி உயரமானதும், 120அழகிய வர்ண சிற்பங்கள் கொண்டதுமான பஞ்சதளக் கோபுர கும்பாபிசேகம் 09.02.2017 இல் சிறப்பாக நிறைவேறியது.

வடதிசைக் கோபுர அடிக்கல் 30.06.2017 ஆனி உத்தரத்தில்; நாட்டப்பெற்று கோபுர கும்பாபிசேகம் 28.01.2018 இல் சிறப்பாக நிறைவேறியது. அத்துடன் தேவஸ்தான உட்கோயிலின் வடக்கு திருமஞ்சக கிணற்றிற்கு சமீபமாக மேருசக்கர கோயிலின் கும்பாபிஷேகமும் நிறைவேறியது. மேலும் வடதிசைக் கோபுரத்திற்கு முன்பாக நேரே மகாதனை ஒழுங்கையுடன் இணைக்கும் வகையில் பாதை ஒன்று திறக்கப்பட்டது.

மேற்குதிசைக் கோபுர அடிக்கல் 30.03.2018 நாட்டப்பெற்று கோபுர கும்பாபிசேகம் 30.01.2019 இல் சிறப்பாக நிறைவேறியது.

சுன்னாகத்தில் கட்டப்பட்ட மூன்றுமாடி மருத்துவ சேவைக்கட்டடம், திருமகள் புத்தகசாலை, திருமகள் அழுத்தகம் என்பன 14.09.2020 திறந்து வைக்கப்பட்டது.

சிவத்தமிழ்ச் செல்வி அம்மையாரின் நினைவாக பன்னிரு திருமுறைகளுக்கு மதிப்புக் கொடுத்து அந்நூல்களை ஒவ்வொன்றாக பதிப்பித்து வெளியீடு செய்தார்.

சமய நூல்கள் பதிப்பிற்காக வைத்திய கலாநிதி மனமோகன் அவர்கள் அன்பளிப்பு செய்த பணம் நிரந்தர வைப்பிலிடப்பட்டது.

நான்கு திசையும் கோபுரம் கண்ட அம்பாளுக்கு தலைவாசல் கோபுரம் அமைக்கும் பணி இல் அத்திபாரம் இடப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

அறப்பணிகளின் கருவூலம் சிவபூமி

சிவபூமி அறக்கட்டளை 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மன வளர்ச்சி குறைந்த பிள்ளைகளை ஆற்றுப்படுத்தவென 02.07.2004இல் 12 பிள்ளைகளுடன் ஐயாவால் லீலாவதி சுப்பிரமணியம் குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கிய காணியில் கோண்டாவிலில் ஆரம்பிக்கப்பட்ட சிவபூமி சிறுவர் மனவிருத்திப்பாடசாலை இன்று 150 பிள்ளைகளை வழிப்படுத்துகிறது.

அதேபோல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்காக கிளிநொச்சியிலும் சிவாமி இராமதாஸர் அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு பொ.பரமலிங்கம் அவர்களின் நிதியுதவியில் கட்டப்பெற்று 26.05.2016 இல் மனவிருத்திப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

திருகோணமலையிலிருந்தும் கோண்டாவில் மனவிருத்திப்பாடசாலைக்கு பிள்ளைகளை சேர்க்கத் தொடங்கியதை பார்த்த திருமுருகன் ஐயா திருகோணமலையிலும் மனவிருத்திப்பாடசாலை ஒன்றை 14.07.2019 இல் தொடங்கினார். திருகோணமலை ஆலய அறங்காவலர் சபை அன்பளிப்பு செய்த நிலத்தில் தொடர் சொற்பொழிவுகளால் கிடைத்த நிதி ஊடாக திருமுருகன் ஐயா இந்த பணியை நிறைவேற்றினார். இரண்டு மாடிக் கட்டிடத்தில் மேலே யாத்திரிகர் விடுதியும் உள்ளது.

07.04.2007 இல் உதவி தேவைப்படும் முதியவர்களை பராமரிக்க சுழிபுரத்தில் திரு. பாலச்சந்திரனின் உதவியுடன் முதியோர் இல்லத்தை ஆரம்பித்தார். 11 முதியவர்களுடன் ஆரம்பமான இல்லம் இன்று 80 முதியவர்களை பராமரிக்கும் பெரும்பணியை சிறப்பாக செய்கிறது. பல அன்பர்கள் இதற்கு தொடர்ச்சியாக உதவி வருவது போற்றுதலுக்குரியது. இங்கே இறைபதமடையும் முதியவர்களுக்கான இறுதிக்கிரியைகளை திருமுருகன் ஐயாவே மகன் போல இருந்து ஆற்றுகிறார்.

பன்னிரு அறைகளுடன் கீரிமலை நகுலேச்சரத்திற்கு பின்வீதியில் முதியோர் ஆச்சிரமம் ஒன்றை அமரர் கிருஷ்ணபிள்ளையின் புத்திரர்கள் வழங்கிய கிருஷ்ண பிள்ளை மடம் இருந்த இடத்தில் தற்போது நிர்மாணித்துக் கொண்டிருக்கிறார்.

புனித பூமியாக மடங்களுடன் நிறைந்திருந்த கீரிமலை உள்நாட்டுப் போரால் மடங்கள் அற்றுக்காணப்பட்டதால் பல சைவ அன்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க 28.01.2010இல் ஆசிரியர் விஸ்வநாதன் குடும்பத்தினர் வழங்கிய காணியில் சிவபூமி மடத்தை திறந்து வைத்தார்.

சிவபூமி மடத்திற்கு அருகில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பேருதவியால் சிவபூமி யாத்திரிகர் மடமும் சிவபூமி கலைக்களஞ்சியமும் உருவாக்கப்பட்டது. மேல்மாடிக்கட்டிட நிர்மாணத்திற்கு கைலாயப்பிள்ளை அபிராமி தம்பதிகள் நிதி உதவி செய்தார்கள்.

2013 ம் ஆண்டு தை 28 இல் குப்பிளானில் திரு.ஆ சிறீஸ்கந்தமூர்த்தி அன்பளிப்பு செய்த வீட்டுடன் கூடிய காணியில் சிவபூமி ஞான ஆச்சிரமத்தை திறந்தார். அன்னதானம், குருபூசைகள், அறநெறி வகுப்புகள் போன்ற பல சிவப்பணிகளோடு சிவனடியார்கள் தங்கி ஆறுதல் பெறவும், அறிவை வளர்க்க ஆன்மீக நூல் நிலையமும் இங்கு உள்ளது.

சிவபூமி மனவிருத்தி பாடசாலை மாணவர்களின் சுயதிறன் விருத்திக்காக சிவபூமி தொழிற்பயிற்சிப் பாடசாலை ஒன்றை கோண்டாவிலில் கொழும்பு மனிதநேய அறநிதிய அமைப்பின் பேருதவியுடன் ஆரம்பித்தார். கற்பூரம், கடதாசிப்பை, காகித உறை, தாவர வளர்ப்பு, நெய் விளக்கு, கமுகு மட்டை கோப்பை கரண்டிகள் என பல பொருட்களின் உற்பத்திப்பயிற்சி இங்கு நடைபெற்று வருகிறது.

அச்சுப் பதிப்பு மற்றும் புத்தகம் கட்டுதல் போன்ற பணிகளுக்காக சிவபூமி அச்சகத்தை ஆரம்பித்தார்.

2018 மார்ச் மாதத்தில் திருமுருகன் ஐயாவால் ஆரம்பிக்கப்பட்ட சிவபூமி பத்திரிக்கை நான்காவது ஆண்டில் பயணிக்கிறது. இதன் பிரதான ஆசிரியராக திருமுருகன் ஐயா செயற்படுகிறார்.

சிவதட்சணா மூர்த்தி திருக்கோயில், கருங்கல் இரதம், கருங்கல்லில் செதுக்கப்பட்ட 658 திருவாசகப் பாடல்கள், பதினொரு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிவபுராணம், 108 சிவலிங்கங்கள், அகத்தியர் கோயில் மற்றும் கோசாலை என பக்தி மயம் கமழும் திருவாசக அரண்மனையை நாவற்குழியில் 24.06.2018இல் அமைத்தார். வைத்தியர் மன்மோகன் சிவகௌரி தம்பதிகள் வழங்கிய நிலம் மற்றும் நிதியினாலும், திருமதி கை. அபிராமி , திரு சு. பாலசிங்கம் போன்ற பல அன்பர்களின் நிதிப்பங்களிப்போடும் இந்த புனித காரியம் நிறைவேறியது.

இம்மண்ணை ஆண்ட 23 மன்னர்களின் உருவச்சிலைகள், புராதன பொருட்கள், அரிய புகைப்படங்கள், ஓவியங்கள் சூரியக்குடும்ப கட்டுமானம் எனப் பலவற்றை கொண்ட பிரமாண்டமான அரும்பொருட்காட்சியகத்தை நாவற்குழியில் 25.01.2020 இல் அமைத்தார். திருமதி கைலாசபிள்ளை, வைத்தியர் க. பார்த்தீபன், திரு. நி. மகேசன், திரு. ரவீந்திரன், வைத்தியர் தேவகாந்தன், திரு.சி. சிவநாதன், திரு. விக்கினேஸ்வரன், திரு.சி. கருணாகரன், வைத்தியர் மனமோகன், இணுவில் திருவூர் ஒன்றியம், திரு.இ.தபோதரன், திருமதி.ஜெ.சுமித்திரா, திரு.என்.ஜெகன், திரு.சங்கர், திருமதி ஜெ.தேவமணி, திரு.க.பாலசுப்பிரமணியம், ரிச்மண்ட் ஆலய திருச்சபை, வரசித்தி விநாயகர் குடும்பம் (கனடா), சாயி இல்லம்(கனடா) என பல அன்பர்கள் நிதி வழங்கினார்கள்.

தமிழ் மண்ணில் எல்லோருக்கும் மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக வைத்தியர் க.பார்த்தீபன் உதவியுடனும், வைத்தியர் த.சத்தியமூர்த்தியின் ஒத்துழைப்புடனும் அபயம் இலவச மருத்துவ சேவைகளை தொடங்கினார். ஆனைக்கோட்டையில் வைத்தியர் அ.பொன்னம்பலம் அன்பளிப்பு செய்த காணியில் 31.03.2019இல் ஆரம்பிக்கப்பட்ட அபயம் இலவச மருத்துவ சேவை இயக்கச்சி (திலகவதி விஸ்வநாதன் குடும்பத்தினர் உதவி செய்தனர்.) மற்றும் ஆதிமயிலிட்டி (திரு சுகுமார் குடும்பத்தினர் உதவினார்கள்) ஆகிய இடங்களிலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தெருவில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்களால் மக்களுக்கும் நாய்களுக்கும் பாரிய இடர்பாடுகள் ஏற்படுவதைக் கண்ட திருமுருகன் ஐயா 12.04.2019 இல் சிவபூமி நாய்கள் சரணாலயத்தை இயக்கச்சியில் செல்வி ரோகிணி பேராயிரவர் அன்பளிப்பு செய்த நிலத்தில் ஆரம்பித்தார். வைரவர் ஆலயமும் இங்குள்ளது.

எதிர்கால சிவபூமியின் அறப்பணிகளுக்கு உறுதுணையாக இருக்கவென சிவபூமி விவசாயப்பண்ணைகளை சுழிபுரம் (ரிஷி தொண்டுநாத சுவாமிகள் உதவினார்) , இயக்கச்சி (கோயில்வயல், கொற்றாண்டர் குளம், அன்னபூரணி வயல்), நாவற்குழி (அகத்தியர் மூலிகைத் தோட்டம், செவ்விளநீர் தோட்டம்) போன்ற இடங்களில் உருவாக்கினார்.

பசுவதைகளை தடுத்து அவற்றை காப்பதற்காக கீரிமலை, சுழிபுரம், நாவற்குழி ஆகிய இடங்களில் கோசாலைகளை உருவாக்கினார்.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை நோயாளர்களுக்கு செவ்விளநீர், குடிநீர் என்பவற்றை வழங்க மருத்துவ நிதியம் ஒன்றை உருவாக்கினார்.

நாவற்குழியில் மக்களால் ஐயனார் ஆலயம் ஒன்று பராமரிப்பதற்காக சிவபூமியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்களுக்கு கல்வியில் துணையாக இருப்பதற்காக கல்வி நிதியம் ஒன்றை உருவாக்கினார்.

யாழ்ப்பாணத்தின் கந்தபுராண கலாச்சாரத்தை காப்பதற்காக ஆதிமயிலிட்டியில் கந்தபுராண ஆச்சிரமத்தை மகேசன் நகுலேஸ்வரி குடும்பத்தினர் வழங்கிய நிலத்தில் 28.01.2021 இல் ஆரம்பித்தார்.

அறப்பணிகள்

சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் ஆறு திருமுருகன் அறக்கொடை நிதியம் ஆரம்பித்து வறிய பிள்ளைகளுக்கு உதவுதல்.

கொழும்பு பழைய மாணவர் சங்கம் மூலம் கிடைத்த நிதியில் ஸ்கந்தன் கோவில் திருப்பணி நிறைவேற்றியமை, ஸ்தாபகர் கந்தையா உபாத்தியாயரின் உருவச் சிலை நிறுவியமை.

இலண்டன் அனாதைகள் அறக்கட்டளை உதவியுடன் கண்பார்வையற்ற சிறுவர்களுக்கு 16 லட்சம் ரூபாய் செலவில் உடுவிலில் நிரந்தர இருப்பிடம் உருவாக்கிக் கொடுத்தமை.

இலண்டன் சிவயோகம் அறக்கட்டளை உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலையின் 15 லட்சம் ரூபாய் செலவில் நவீன கண் சத்திர சிகிச்சை நிலையம் உருவாக்கியமை, 18 லட்சம் ரூபாய் செலவில் நவீன லேசர் இயந்திரம் வழங்கியமை.

15 லட்சம் ரூபாய் செலவில் கணவனை இழந்த இளம் விதவைகளுக்குப் புதிய வீடுகளை அமைத்து ‘சிவயோகம் அன்னையர் குடியிருப்பு’ என்ற மாதிரிக் கிராமத்தை உருவாக்கியமை.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி ஆகிய இடங்களில் உள்ள சைவ சிறுவர் இல்லங்களுக்கு இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய உதவியுடன் வருடா வருடம் நிதி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளமை.

யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட புற்றுநோயாளர் கருணை நிதியம் மூலம் சுமார் 13 லட்சம் ரூபா வரை புற்று நோயாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தமை.

இந்து சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஆறுமுகநாவலரின் சிலையினை தன் சொந்தச் செலவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபித்தமை.

திருகோணமலை அலஸ்தோட்டத்தில் வாழும் 1200 அகதிக் குடும்பங்களின் வழிபாட்டுக்கான ஆனந்த விநாயகர் ஆலயம் ஸ்தாபித்தமை.

1995இல் இடப் பெயர்வுடன் கிளிநொச்சியில் குடியேறிய மக்களுக்காக 20க்கும் மேற்பட்ட நாகதம்பிரான் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தமை.
யாழ்ப்பாணம் சப்ரகமுவ ரஜரட்டைப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வசதி குறைந்த மாணவர்களின் கல்விக்கு உதவி பெற்று கொடுத்தமை.

யாழ் போதனா வைத்தியசாலை நூல் நிலையத்திற்கு விலைமதிப்பற்ற நூல்களைப் பெற்றுக் கொடுத்தமை.

மகாவித்துவான் பிரம்மஸ்ரீ வீரமணி ஐயரின் பாதிப்புக்கு உள்ளாகாத நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டமை.

கொக்குவில் மஞ்சவனப்பதி ஆலயத்தில் நடைபெற்ற தொடர் சொற்பொழிவுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு மூலம் விதவைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கியமை.

இணுவில் கிராமத்தில் மத்திய அறிவாலயம் அமைக்க கனடா, இலண்டன் நாடுகளில் இணுவில் வாழ் மக்கள் உதவி பெற்றுக் கொண்டமை.

இந்துக்கள் கண்தான சபையை உருவாக்கியமை.

செவிப்புலன் குறைந்த மாணவர்களுக்கு அவுஸ்திரேலிய மருத்துவ உதவி பெற்று அக்குறை நீக்கும் கருவிகள் பெற்றுக்கொடுத்தமை.

அரியாலையில் யுத்த அனர்த்தால் அழிந்து போன தென்னை மர மீள் நடுகைக்காக 600 தென்னங்கன்றுகளை தனது லண்டன் சொற்பொழிவு மூலம் கிடைத்த பணத்தில் இருந்து பெற்றுக் கொடுத்தமை.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர் வழிபாட்டிற்காக வித்தக விநாயகர் ஆலயம் அமைப்பதற்கு லண்டன் சிவயோகம் அறக்கட்டளை நிதியத்திலிருந்து நிதி பெற்று வழங்கியமை.

யாழ் போதனா வைத்தியசாலை சிறுநீரக நோயில் பிரிவிற்கு 18 லட்சம் செலவில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை பிரித்தானிய இந்துக் கோவில்களின் உதவியுடன் வழங்கியமை.

ஆவரங்கால் சிவசக்தி மணிமண்டபத்தை நிறுவ முக்கிய ஆலோசகராக விளங்கியமை.

கிளிநொச்சி வைத்தியசாலை அபிவிருத்திக்குச் சுமார் 2 லட்சம் வழங்கியமை.

திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் கிளை நிறுவனத்தை இணுவிலில் ஆரம்பிப்பதற்கு காணி கொள்வனவு செய்ய நிதி வழங்கியமை.

தனது ஆசான் இ.மகாதேவா (தேவன் யாழ்ப்பாணம்) அவர்களது சிறுகதைத் தொகுதியை யாழ் இலக்கிய வட்டத்தின் ஊடாக வெளியிட நிதி வழங்கியமை.

உடுவில் சபாபதிப்பிள்ளை வீதியில் இலண்டன் புற்றுநோய் உதவி நிறுவனத்தின் ஊடாக புற்றுநோய் காப்பகம் அமைக்கும் பணியைத் தொடங்கியமை.

போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை பிரிவு மாணவர்களுக்கு போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றை லண்டன் அன்பர் ஒருவர் மூலம் பெற்று கொடுத்தமை.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் சங்கத்திற்கு மருத்துவ நூல்கள், உபகரணங்கள் அன்பளிப்பு செய்தமை.

யாழ் மருத்துவபீட மாணவர்களின் ‘அரும்புகள்’ சிறுவர் இருதய நோய் சிகிச்சை நிலையத்திற்கு 50,000 ரூபா வழங்கியமை.

சொற்பொழிவு சாதனைகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவனாக பல்வேறு சொற்பொழிவுகளில் பங்குபற்றியமை.

1977இல் சேக்கிழார் விழாவில் உரை – இவ்விழாவில் முதன் முறையாக ஆசிரியர் மகாதேவன் அவர்களால் ஆறு திருமுருகன் என அழைக்கப்பட்டார்.

இலங்கையில் பல்வேறு காலப்பகுதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, நீர்கொழும்பு, கொழும்பு, புத்தளம் மற்றும் மலையகப் பகுதிகளில் பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளமை. இவரது சொற்பொழிவுகள் இடம்பெற்ற உள்நாட்டு ஆலயங்களின் விவரங்கள் இந்த சிறப்பு மலரின் இன்னொரு பகுதியில் இடம்பெற்றுள்ளன.

நமது நாட்டில் மட்டுமல்ல இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், கனடா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து, தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளிலும் இவரது தொடர் சொற்பொழிவுகள், ஆன்மீகப் பேருரைகள் மற்றும் சிறப்புரைகளும் இடம்பெற்றுள்ளன.

1990ஆம் ஆண்டிலிருந்து அகில இலங்கை கம்பன் கழகத்தினால் நடத்தப்பட்டு வருகின்ற பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்ற பல்வேறு மேடை நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார்.

தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பல்வேறு அருளுரைகளை ஆற்றி வருகின்றார்.

இந்தியாவில் சேலத்தில் நடைபெற்ற மார்கழி பெருவிழாவில் தொடர் சொற்பொழிவாற்றியமை.

1999ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற அகில உலக இந்து மாநாட்டில் உரை நிகழ்த்தியமை. சைவத் திருக்கோயில் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டது.

2000ஆம் ஆண்டில் இலண்டன் சிவயோகம் அறக்கட்டளையினர் நடாத்திய முத்தமிழ் விழாவில் சிறப்புரையாற்றியமை.

2000ஆம் ஆண்டில் கனடா தமிழர் தகவல் நடாத்திய விழாவில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்புரையாற்றியமை. வர சித்தி விநாயகர் ரொரண்டோ.

2001ஆம் ஆண்டு இலண்டன் சிவயோக அறக்கட்டளை நடாத்திய விழாவிலும் மேலும் பல சைவக் கோயில்களிலும் இலண்டனில் சிறப்புரையாற்றியமை

2001ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியா சிட்னி சைவ மன்றத்தின் அழைப்பை ஏற்று அங்கு சென்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

2001ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் உலக மாநாட்டில் ‘இலங்கையில் தமிழ் இலக்கியம் கற்பித்தலில் ஏற்படும் பிரச்சினைகள்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பித்திரப்பதுடன் கலந்து சிறப்புரையாற்றியமை.

2001ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள பேரூர் ஆதின அழைப்பை ஏற்று அங்கு சென்று உரையாற்றியமை.

2002ஆம் ஆண்டில் இலண்டன் சிவயோகம் அறக்கட்டளையினர் நடாத்திய விழாவிலும் இலன்டன் ஈலிங்கில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கலந்து சிறப்புரையாற்றியமை.

2003ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இலங்கை தமிழர் அழைப்பை ஏற்று அங்கு சென்று செண்பக விநாயகர் ஆலயத்தில் தொடர் சொற்பொழிவாற்றியமை.

2003ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா ஈழத்தமிழர்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்று சிட்னி முருகன் கோயிலில் சிறப்பு சொற்பொழிவாற்றியமை.

2003ஆம் ஆண்டில் அமெரிக்கா புளோரிடா மாநில இலங்கை தமிழர் சங்கத்தின் அழைப்பை ஏற்று அங்கு சென்று சிறப்புரையாற்றியமை. மேலும் சிக்காக்கோ தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரை ஆற்றியமை.

2003ஆம் ஆண்டில் கனடாவிலுள்ள இணுவில் திருவூர் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று ரொறண்டோ றிச்மண்ட்ஹில் ஆலய கந்தசஷ்டி விழாவிலும், மொன்றியல் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் சிறப்புரையாற்றியமை.

2003ஆம் ஆண்டில் இலண்டன் பாரதீய வித்யாபவனில் நடைபெற்ற பிரம்ம ஸ்ரீ ந.வீரமணி ஐயர் அவர்களின் நினைவு தின நிகழ்விலும் முதன்மை பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

2004ஆம் ஆண்டில் சென்னை கபாலீஸ்வரர் கோயிலிலும் சொற்பொழிவாற்றியமை.

2004இல் இரண்டாவது தடவையாக காசிக்கு புனித யாத்திரை சென்றமை.

2004இல் உலக சுகாதார நிறுவனம் உலகின் ஆத்மீக தலைவர்களுக்காக தாய்லாந்தில் நடாத்திய எய்ட்ஸ் தொடர்பான மாநாட்டில் இலங்கையின் இந்து மதப்பிரதிநிதியாக கலந்து கொண்டு சிறப்புரைகள் நிகழ்த்தியமை.

2004ஆம் ஆண்டில் இலண்டன் சிவயோகம் அறக்கட்டளையினர் நடாத்திய முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியமை.

2005ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்று அங்கு புளோரிடா, கலிபோர்னியா, நியூயோர்க், நியூஜெசி ஆகிய மாநிலங்கில் சடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் உரையாற்றியமை.

2005ஆம் ஆண்டில் கனடாவில் சைவ சமய நிகழ்வுகளில் கலந்து சிறப்புரைகள் ஆற்றியமை.

2005ஆம் ஆண்டு திருப்பூர் ஐயப்பன் விழாவில் கலந்து சிறப்புரைகள் ஆற்றியமை.

2008ஆம் ஆண்டு – அனைத்துலக வளர்க தமிழ் ஆய்வு மாநாடு – தில்லித் தமிழ்ச்சங்கம் புதுடில்லி நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றியமை.

2012ஆம் ஆண்டில் திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி காலத்தில் கலந்து கொண்டு சிறப்புத் தொடர் சொற்பொழிவு ஆற்றியமை. கந்தசஷ்டி காலத்தில் நடைபெறும் சொற்பொழிவில் தொடர்ந்து நான்கு தடவைக்கு மேல் தொடர் சொற்பொழிவாற்றியமை.

2013ஆம் ஆண்டில் மீண்டும் திருச்செந்தூர் ஆலயத்தில் சிறப்புத் தொடர் சொற்பொழிவாற்றியமை.

2013ஆம் ஆண்டில் புதுச்சேரி கம்பன் விழாவில் சிறப்புரை ஆற்றியமை.

2013ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் தமிழ் ஒளிபரப்பு கூட்டுத்தாபன (ATCB) அழைப்பின் பேரில் பங்கு பற்றி பல்வேறு சமய சொற்பொழிவுகள் ஆற்றியமை.

2014ஆம் ஆண்டில் இலண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் அழைப்பின் பேரில் பங்குபற்றி பல்வேறு இந்து கோயில்களில் சிறப்புரை ஆற்றியமை.

2014ஆம் ஆண்டில் சேலம் மார்கழி பெருவிழாவில் பங்குபற்றியமை.

தருமபுரம் ஆதீனத்தில் விசேட உரையாற்றியமை.

சிதம்பரம் நாவலர் பாடசாலை 150ஆவது ஆண்டு விழாவில் சிறப்புரை.

2014ஆம் ஆண்டில் அமெரிக்காவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பங்குபற்றி சிறப்பு சொற்பொழிவுகள் ஆற்றியமை.

2014இல் VN அக்கடமி விழாவில் பிரதம விருந்தினராக சிறப்பித்தமை.

2014இல் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 120ஆவது ஆண்டு விழாவில் கௌரவமும் சிறப்புரையும்.

2015இல் கனடாவில் இணுவில் திருவூர் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் பங்குபற்றி பல்வேறு சிறப்பு சொற்பொழிவுகள் ஆற்றியமை.

2015இல் அவுஸ்ரேலியாவில் தமிழ் ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் (ATBC) அழைப்பின் பேரில் பல்வேறு சொற்பொழிவுகள் ஆற்றியமை.

2015இல் சிங்கப்பூரில் செண்பகவிநாயகர் தேவஸ்தான அழைப்பின்பேரில் பங்குபற்றி சொற்பொழிவாற்றியமை.

2015இல் மீண்டும் திருச்செந்தூரில் கந்தசஷ;டி விரத காலத்தில் தொடர் சொற்பொழிவாற்றியமை.

2015இல் இந்துமாமன்ற 620ஆவது ஆண்டு விழாவில் சிறப்புரை.

2015இல் யாழ். இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டில் சிறப்புரை.

2015இல் திருக்கேதீச்சரம் ஸ்ரீ சபாரத்தின சுவாமிகள் தொண்டர் சபையினரால் நிகழ்த்தப்பட்ட ஆண்மீகப் பெருவிழாவில் சிறப்புரை.

2015இல் சைவ சமய எழுச்சி விழாவில் நாவலப்பிட்டி கலாச்சார மண்டபத்தில் பங்குபற்றி சிறப்பித்தமை.

2015 வடமராட்சி பிரதேச சபை நடாத்திய கலை கலாச்சார நிகழ்ச்சியில் சிறப்புரை.

2016இல் அவுஸ்ரேலியாவில் தமிழ் ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் (ATBC) அழைப்பின் பேரில் பல்வேறு சிறப்புரை ஆற்றியமை.

மலேசியாவில் இந்த அபிவிருத்தி சங்கத்தின் அழைப்பின்பேரில் பங்குபற்றி சொற்பொழிவாற்றியமை.

2016ஆம் ஆண்டில் இந்தியாவில் கொள்ளிடம் பெரிய குத்தவக்கரை ஸ்ரீவீரனார் திருக்கோயில் சிறப்புரையாற்றியமை.

2016இல் யாழ் பாரதி பதிப்பக ஆண்டு விழாவில் சிறப்புரை.

2016இல் முதலாவது சைவ மாநாடு – யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் நடாத்திய மாநாட்டில் சிறப்புரை.

2016இல் பாரதியார் விழாவில் சிறப்புரை- மன்னார் சைவ கலை மன்;றம்.

2016ஆம் ஆண்டில் சுவிஸர்லாந்தில் சூரிச் சிவன் கோயில் தேவஸஸ்தான அழைப்பின் பேரில் பங்குபற்றி சிறப்பு சொற்பொழிவு ஆற்றியமை.

2017ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவில் தமிழ் ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் (ATBC) அழைப்பின் பேரில் பங்குபற்றி சிறப்புரை ஆற்றியமை.

2017ஆம் ஆண்டில் நியுஸிலாந்தில் பங்குபற்றி சிறப்புரை ஆற்றியமை.

2017ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் சைவத்தமிழ் மாநாட்டில் சிறப்புரை ஆற்றியமை.

திருவண்ணாமலை திருமுறை மாநாட்டில் பங்குபற்றி சிறப்புரை ஆற்றியமை.

திருச்செந்தூர் கந்தசஷ;டிகால தொடர் சொற்பொழிவுகள்.

2017இல் யாழ். இந்துக்கல்லூரியின் தமிழ் விழாவில் பிரதம விரந்தினராக சிறப்புரை.

2017இல் யாழ். இந்துக்கல்லூரியில் விவாத மேடையில் நடுவராக பங்குபற்றி சிறப்பித்தமை.

2017இல் புனித சவேரியார் குருத்துவ கல்லூரியில் நடைபெற்ற தவத்திரு தனிநாயகம் தமிழ் மன்ற விழாவில் பிரதம விருந்தினராக சிறப்பித்து உரையாற்றியமை.

2017ஆம் ஆண்டில் இலண்டன் சைவ முன்னேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்து பல்வேறு சிறப்புரைகள் ஆற்றியமை.

2018ஆம் ஆண்டில் மதுரைக்கமம்பன் விழாவில் சிறப்புரை ஆற்றியமை.

2018இல் சித்திரா மேழி பழனியானந்தன் சனசமூக நிலையம் 75ஆம் ஆண்டு விழாவில் கௌரவ விருந்தினராக சிறப்புரையாற்றியமை.

2018இல் யாழ். இந்துக்கல்லூரியில் ‘நாம் தலைவர்கள்’ நிகழ்ச்சியில் வளவாளராக பங்குபற்றியமை.

2018இல் சுன்னாகம் ஐயனார் மகர ஜோதி விழாவில் உரை.

2018இல் நல்லைக்கந்தன் குருசேத்திர நிகழ்வில் தலைவராக கலந்து சிறப்பித்தமை.

2018, 2019ஆம் ஆண்டுகளில் இணுவில் பெரிய சந்நியாசியாரின் 101, 102ஆம் ஆண்டு நினைவு விழாவில் பங்குபற்றி சிறப்புரையாற்றியமை.

கொள்ளிடம் பெரிய குத்தவக்கரை ஸ்ரீவீரனார் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவை சிறப்பாக நடத்தியமைக்காக கௌரவிக்கப்பட்டார்.

2018இல் அவுஸ்ரேலியாவில் தமிழ் ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் (ATBC) அழைப்பின் பேரில் பங்குபற்றி பல்வேறு சொற்பொழிவுகள் ஆற்றியமை.

2019ஆம் ஆண்டு யாழ். இந்துக்கல்லூரி தமிழ்த்தின விழாவில் பிரதம விருந்தினராக உரை.

2019இல் யா/ கைதடி நுணாவில் அ.த.க. பாடசாவையில் சரஸ்வதி திறப்பு விழாவில் முதன்மை விருந்தினராக உரை.

2019ஆம் ஆண்டு VN அக்கடமி ஆசிரியர் தின விழாவில் பிரதம விருந்தினராக உரை.

2019இல் இளவாலை வருஐத்தப்படாத வாலிபர் சங்கம் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பித்து உரை நிகழ்த்தியமை.

2019இல் சைவ வித்தியா விருத்திச்சங்கம் கருணை இல்லம் பொன் தெய்வேந்திரா நினைவு மண்டபத்தில் சிறப்பு விருந்தினராக பங்குபற்றி சிறப்புரை.

2019ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவில் தமிழ் ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் (ATBC) அழைப்பின் பேரில் பங்குபற்றி பல்வேறு சொற்பொழிவுகள் ஆற்றியமை.

2019ஆம் ஆண்டு கனடா ஈகுருவி சிறந்த சாதனையாளர் விருது பெற்று சிறப்புரையாற்றியமை.

2020ஆம் ஆண்டில் சிததம்பரம் திருமுறை மாநாட்டில் சிறப்புரை.

2020 புத்தளம் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம் வைரவிழாவில் பிரதம விருந்தினராக சிறப்பித்தமை.

கொள்ளிடம் பெரிய குத்தவக்கரை ஸ்ரீவீரனார் திருக்கோயிலில் நல்லாசி புரிந்தமையை முன்னிட்டு விருது வழங்கப்பட்டது.

பல்வேறு நாடுகளில் இலண்டன் (10 தடவை), அவுஸ்ரேலியா (8 தடவைகளுக்கு மேலும்), அமெரிக்கா (6 தடவைகளுக்கு மேலும்), கனடா (9 தடவைகளுக்கு மேலும்), சிங்கப்பூர், மலேசியா, சுவிஸர்லாந்து, நியுசிலாந்து, மற்றும் இந்தியா (கடந்த இருபது தசாப்தங்களாகவும்) பல்வேறு சமய, சமூக, தமிழ்ச்சொற்nபொழிவுகளில் பங்குபற்றி சிறப்பித்தமை.

இவை தவிர பல்வேறு சமய, சமூக விழாக்களில் ஆசியுரை, சிறப்புரைகள் நிகழ்த்தியமை. ஆனந்த சாகரம், பரத நாட்டிய நிகழ்வுகள், மிருதங்க அரங்கேற்றங்கள் போன்றவற்றில் பிரதம விருந்தினராக கலந்த சிறப்பித்தமை.

சொற்பொழிவுகளால் நிகழ்த்திய சாதனைகள்

ஆறு திருமுருகன் ஆன்மீக சொற்பொழிவு வீடியோ நாடா லண்டனில் வெளியீடு.

Aruthirumurugan Spitual Lectures என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிட்டமை. (அவுஸ்திரேலியாவில் அண்ணி பவானி என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளமை.

Aruhirumurugan.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளமை.

20க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்கள் பெற்றமை.

25க்கும் மேற்பட்ட பட்டங்கள் பெற்றமை.

நினைவுப்பேருரைகள்

சேர் பொன் அருணாச்சலம் நினைவுப்பேருரையை பழைய பாராளுமன்றத்தில் நிகழ்த்தியமை.

சுன்னாகம் இராமநாதன் கல்லூரி பரிசளிப்பு விழாவில் சேர் பொன் இராமநாதன் நினைவுப்பேருரை

யாழ் நாவலர் பாடசாலையில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் நினைவுரை.
யாழ் இந்துக்கல்லூரியில் சுவாமி விவேகானந்தரின் யாழ் வருகை நூற்றாண்டு நிறைவு விழா பேருரை.

வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியின் அம்பலவானர் நாவலர் நினைவுரை.

கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினர் நடாத்திய அதிபர் சி.கே. கந்தசாமி நினைவுப் பேருரை.

அகில இலங்கை இந்து மாமன்றம் இரத்மலானை சக்தி இல்லத்தில் நடாத்திய வைத்திய கலாநிதி க.வேலாயுதபிள்ளை நினைவுப்பேருரை.

யாழ் தேசிய கல்வியற் கல்லுரியில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுப் பேருரை.

வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிப் பரிசளிப்பு விழாவின் போது நினைவுப் பேருரை.

யாழ் இலக்கிய வட்டம் நடாத்திய பண்டிதமணி ச.கணபதிப்பிள்ளை நினைவுப் பேருரை.

சுழிபுரம் விக்ரேறியா கல்லூரி பரிசளிப்பு விழாவின் போது நினைவுப் பேருரை.

கொழும்பு விவேகானந்தா சபையின் பொதுச்செயலாளர் அமரர் க.இராஜபுவனீஸ்வரன் நினைவுப் உரை.

பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் நினைவுப் பேருரை.

இணுவில் இந்துக்கல்லூரி ஸ்தாபகர் பேருரை.

2011 அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு இந்து மாநாட்டில் பேருரை.

2012இல் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நினைவுப் பேருரை. – மன்னார் மாநகர மண்டபம்.

2013இல் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா நினைவுரை – மன்னார் தமிழ்ச்சங்கம்.

2013இல் மகாஜனாக்கல்லூரி அமரர் ரி.ரி.ஜெயரத்தினம் நினைவுரையும் கௌரவிப்பும்.

விருதுகளும் பாராட்டுக்களும்

2011.10.06 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இவரது சைவப்பணி, தமிழ்ப்பணி, சமூகப்பணிகளை கௌரவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூதவை, பேரவை வழங்கிய சிபார்சின் பேரில் கௌரவ கலாநிதிப் பட்டம் 2011.10.006 பல்கலைக்கழக வேந்தரால் வழங்கப்பட்டது.

இவரது பெயருடன் நிரந்தரமாகவே சேர்ந்தமைந்த வகையில் ‘செஞ்சொற் செல்வர்’ என்ற பட்டம் திகழ்கிறது. இணுவில் – கோண்டாவில் காரைக்கால் சிவன் தேவஸ்தானத்தின் 1992ஆம் ஆண்டு மகோற்சவ காலத்தின் போது ‘சைவ சமய மகிமைகள் பேருண்மைகள்’ எனும் பொருள் பற்றி பன்னிரு கோணங்களில் தொடர் விரிவுரை நிகழ்த்தியதற்காக மேற்படி தேவஸ்தானத்தால் 1992 ஆகஸ்ட் 13ஆம் திகதியன்று ‘செஞ்சொற் செல்வர்’ பட்டம் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவம் 1993 ஆலய உற்சவ காலத்தில் தெய்வீக அருளுரை வழங்கிய கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுக்கு தலங்காவற் இளைஞர்களால் ‘திருவருட்சீலன்’ எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சுன்னாகம் தெற்கு சிவபூதராயர் கோயிலில் 09.09.1994இல் இடம்பெற்ற மகா கும்பாபிசேகத்தை தொடர்ந்து பெரியபுராணம் தெய்வீக அருள் வழங்கிய மேற்படி ஆலய பரிபாலன சபையினரால் ‘அருளுரை வாரிதி’ எனும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

1994 உடுவில் தெற்கு ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது பெரியபுராண விரிவுரைகளை நிகழ்த்தியமையை பாராட்டி ‘கதாமிர்த சுரபி’ விருது வழங்கப்பட்டது.

1994 சங்கானை மாவடி ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த உற்சவ காலத்தின் போது பெரியபுராண தெய்வீக சொற்பொழிவாற்றியமை முன்னிட்டு ‘சிவசுரபி’ எனும் கௌரவ பட்டம் வழங்கப்பட்டது.

1994 ஸ்ரீ நாகவரத நாரயணர் தேவஸ்தானம் மகோற்சவத்தில் தொடர் சொற்பொழிவாற்றியமை முன்னிட்டு ‘செஞ்சொற் சஞ்சீவி’ எனும் கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1999 கொழும்புத்துறை மன்நிலாடு பிள்ளையார் கோயில் நிர்வாக சபையினரால் ‘செஞ்சொற் கொண்டல்’ பட்டம் வழங்கப்பட்டது.

1999 இணுவில் பரராஜசேகரர் தேவஸ்தானத்தில் ‘அருள் ஞானபூபதி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2000 பிரித்தானிய இணுவை மக்கள் ஐக்கிய ஒன்றியத்தால் ‘இணுவை இளம் நம்பி’ எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கனடா வாழ் இணுவையூர் மக்கள் சார்பாக 2000 மே மாதம் 20ஆம் திகதியன்று ‘செந்தமிழ் சைவ வித்தகர்’ பட்டம் வழங்கப்பட்டது.

அறநெறி பிரசாரத்தின் மூலமும் செயல் மூலமும் சைவசமய வளர்ச்சிக்கும், சைவப்பண்பாட்டின் மேம்பாட்டிற்கும் பல்லாண்டு காலமாக ஈழத்திருநாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆற்றி வருகின்ற பணியை பாராட்டும் முகமாக ‘அறநெறிச் செம்மல்’ எனும் விருதினை இலண்டன் சிவயோக நிர்வாகம் 29.04.2000இல் வழங்கி கௌரவித்தது.

சுழிபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த பொங்கல் விழாவின் போது 2001ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்படி தேவஸ்தான பரிபாலன சபையால் ‘சைவச்செந்தமிழகன்’ எனும் கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2002 தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் தேவஸ்தானம் இராமாயணம் எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவாற்றியமைக்காக ‘அருள் ஞான வேந்தன்’ எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவின் போது 2003 ஜீலை 10ஆம் திகதியன்று கல்லூரியின் சார்பாக, பீடாதிபதி கலாநிதி தி.கமலநாதன் அவர்களால் ‘சிவநெறித் தவமகன்’ எனும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

இவரது பெருமுயற்சியினாலே தோற்றம் பெற்ற இணுவில் அறிவாலய திறப்பு விழாவின் போது 2005 மார்ச் 20ஆம் திகதியன்று இணுவில் வாழ் மக்கள் சார்பாக ஓய்வு பெற்ற வட மாநில கல்விப் பணிப்பாளர் இரா. சுந்தரலிங்கம் அவர்களால் ‘பணிக்கொடைச் செம்மல்’ எனும் கௌரவம் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 2008 மே மாதம் 18ஆம் திகதியன்று புதுடில்லியிலுள்ள டில்லி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற அனைத்துலக வளர் தமிழ் ஆய்வு மாநாட்டின் போது ‘செந்தமிழ் ஞாயிறு’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரதேச இந்து மாமன்றத்தால் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் சமய சமூக சேவையைப் பாராட்டி ‘மனித நேயச் செம்மல்’ விருது 09.04.2011 அன்று வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

சிகரம் தொட்ட செம்மலுக்கு 14.01.2012 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் சான்றோர் அவைதனில் நடைபெற்ற முதுசம் நிகழ்வில் இணுவில் திருவூர் ஒன்றியத்தினரும் கற்கம் இலக்கிய சேவை அமைப்பினரும் இணைந்து ‘செவ்வியல் ஞாயிறு’ எனும் சிறப்பு பட்டத்தினை வழங்கி கௌரவித்தனர்.

‘கல்விக்கு நிழல் கொடுத்த செல்வரே கலாநிதியாம் நம் அதிபர்’ என ஸ்கந்தா சமூகம், ஸ்கந்தவரோதயக் கல்லூரியால் 2012ஆம் ஆண்டு கௌரவிக்கப்பட்டார்.

கம்பன் விழா 2014இல் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் ஏற்றமிகு சமூகப்பணியை பாராட்டி ‘மகா வித்துவான் சி.கணேசையர் விருது’ 16.02.2014 நடைபெற்ற கம்பன் விழாவில் கொழும்பு கம்பன் கழகப் பெருந்தலைவர் நீதியரசர் மாண்புமிகு ஜெ.விஸ்வநாதன் அவர்களால் வழங்கப்பெற்றது.

யாழ் மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுவினரால் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் சமய சமூகப்பணிகளை கௌரவிக்கும் முகமாக ‘யாழ் விருது’ 15.08.2017 வழங்கப்பட்டது.

சைவத்திற்கும் தமிழிற்கும் இன்னல் உற்றவர்களுக்கும் சேவையாற்றி வரும் துறவியான கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் சேவையை பாராட்டி ‘சைவத் தமிழ்த் துறவி’ எனும் விருதை இணுவையூர் அப்பாக்குட்டி அறக்கட்டளையின் சார்பில் இலண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் 08.11.2017 அன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் கொள்ளிடம் பெரிய குத்தவக்கரை ஸ்ரீ வீரனார் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கட்கு ‘திருவாசக காவலர்’ எனும் விருது 05.07.2018 அன்று வழங்கப்பட்டது.

2018ஆம் ஆண்டுக்கான ‘தலைசிறந்த தமிழன் விருது’ கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுக்கு 31.12.2018 அன்று டான் தொலைக்காட்சி சேவையால் வழங்கப்பட்டது.

நாள் தவறா நற்பணிகள், அடுத்தவர் துயர் பொறுக்காமை அருள் நிறைந்த அறக்குணங்கள், தேசபக்தி, செயல்வீரம் இத்தனையும் ஒழுங்கமைந்த கலாநிதி ஆறு திருமுருகன் ஐயா அவர்கட்கு தென்மராட்சி இலக்கிய அணியால் 2019ஆம் ஆண்டு கம்பன் விழாவில் ‘அருட்செல்வர்’ எனும் விருது வழங்கப்பட்டது.

ஈ-குருவி- 2019 ஆண்டுக்கான சாதனையாளர் விருது கனடா ஈ-குருவி குழுவால் அளிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு 50 தடவைகளுக்கு மேல் இரத்ததானம் வழங்கியமையால் இரத்த வங்கியால் விருது வழங்கப்பட்டது.

சமய சமூக நிறுவனங்களில் வகிபாகங்கள்

தலைவர் – ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.

தலைவர் – துர்க்காபுரம் மகளிர் இல்லம், தெல்லிப்பழை.

தலைவர் – சிவபூமி அறக்கட்டளை, ஸ்தாபகர்.

உபதலைவர் – அகில இலங்கை இந்து மாமன்றம்.

பொறுப்பாளர் – அகில இலங்கை இந்து மாமன்ற யாழ் பிராந்திய அலுவலகம்.

நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன அறக்கட்டளை உறுப்பினர்.

உபதலைவர் – திருக்கேதீஸ்வர திருப்பணிச்சபை.
அறக்;கட்டளை உறுப்பினர் – அமெரிக்க ஹவாய் ஆதினத்தின் அளவெட்டி பசுபதீpஸ்வரர் ஆலயம்.

அகில இலங்கை கம்பன் கழக பேச்சாளர்.

பேரவை உறுப்பினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை (2008 இலிருந்த இன்று வரை).

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்காய்வு உறுப்பினர் (Council nominee).

சிங்கப்பூர் கந்தையா கார்த்திக்கேசு நிதியம், உறுப்பினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டப்பின் படிப்பு பீட உறுப்பினர் (Council nominee).

Jaffna University Ethics Review Committee (Member), Faculty of Medicine Jaffna University.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை – வெளியீடுகள் ஆலோசகர்.

இயக்குனர் சபை உறுப்பினர் – கேன் புற்று நோய் காப்பகம், உடுவில்.

ஸ்தபாகர் – நிர்வாக சபை போசகர் – இணுவில் அறிவாலயம் – அரும்பொருட் காட்சியகம்

நல்லூர் இளங்கலைஞர் மன்றப் போசகர்.

சைவ பரிபாலன சபை ஆயுட் கால உறுப்பினர்.

சைவ வித்தியா விருத்திச்சங்க ஆயட்கால உறுப்பினர்.

யாழ்ப்பாண தமிழ்ச்சங்க உறுப்பினர்.

ஆலோசனைச்சபை உறுப்பினர் – யாழ் போதனா வைத்தியசாலை அபிவிருத்தி ஆலோசனைச்சபை.

யாழ் விழிப்புலனற்றோர் சங்கப் போசகர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் போசகர் (தாய்ச்சங்கம்).

போசகர் – இராமநாதன் கல்லூரி (யாழ்ப்பாணம்) பழைய மாணவர் சங்கம்.

யாழ்ப்பாண இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் நினைவு அறக்கட்டளை சபை உறுப்பினர்

தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கப் போசகர்.

உடுவில் இந்து இளைஞர் மன்றப்போசகர்.

தெல்லிப்பழை தமிழ்ச்சங்கப் போசகர்.

பிரதம ஆசிரியர் – ‘அருள் ஒளி’ ஆன்மீகச் சஞ்சிகை (வெளியீடு- ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை)

பிரதம ஆசிரியர் – ‘சிவபூமி’ பத்திரிகை (வெளியீடு- சிவபூமி அறக்கட்டளை)

‘இந்து ஒளி’ – ஆசிரியர் குழு – அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related posts

சிங்ககிரித்தலைவன் – 25

Thumi2021

வழுக்கியாறு – 19

Thumi2021

நவீன வேதாள புதிர்கள் 04 – யார் தருவார் இந்த அரியாசனம்?

Thumi2021

Leave a Comment