இதழ்-25

வரிசையற்றது வாழ்வு…!!!

அலமாரிகள் நிறைந்தது
இந்த பயணம்

தூசுதட்டி நம்மை எடுத்து பார்க்கும்
புத்தகங்களும் இடையே இருக்கும்

மயிலிறகு குட்டியிட்ட பக்கங்களை
அத்தனை சுலபமாக கடக்க இயலாது

விவரிக்க முடியாத வேள்விகளோடு
தொட்டு விட முடியாத கேள்விகளோடு
தூரத்தில் நட்சத்திரத்தை
கரைத்துக் கொண்டிருக்கும்
அடிக்கோடிட்ட ஒரு வரி

சூட்சுமங்களோடு இறுமாப்போடு
இறுக்கங்களோடு வெளிப்படையாக
வேதாந்தமாக எதுவாகவோ இருக்கும்
ஒரு ஓய்வு நாளில் அகப்படாத புத்தகம்

பின் புரிதலில் வெண் பகலொன்றின்
பக்கத்தை திருப்ப முடியாமல்
தவிப்பில் நிகழும் வாழ்வு வரிசையற்றது

சிறு பூச்சிகளோடு சுமை தூக்கி போகும்
பெரும் பசியின் துவர்ப்பை
அடுத்த முறை களைத்தடுக்கையில்
சொல்கிறேன்……!

-கவிஜி-

Related posts

மருத்துவம் போற்றுதும்

Thumi2021

திரைத்தமிழ் – சச்சின்

Thumi2021

பெண்ணாகிய ஓவியம்

Thumi2021

Leave a Comment