இதழ்-26

மரணங்கள் மீதான பொறாமை

இன்றைய ஒவ்வொரு
இறப்பு நிகழ்வுகளும்
இரணப்படுத்துகின்றது
இதயத்தை…

இறந்து விட்டார் என்பதற்கான
இரணம் அல்ல..
இறப்பு நிகழ்வுகள் தான்
இதயத்தை அறுக்கின்றன..

இறப்புகள் ஒன்றும் எமக்கு புதிதல்ல..
ஆனால் இன்றுபோல்
மண்டபங்களும் மலர்வளையங்களும்
இரங்கற் பாக்களும்
அன்று எங்களுக்கு இருக்கவில்லை..
இறந்தவர் மீது புரண்டு அழவோ
இழந்த முகத்தை இறுதியாய் பார்க்கவோ..
இரங்கல் உரைகளுடன்
இறைசந்நிதியில்
அடக்கம் செய்யவோ எமக்கு
அவகாசம் கிடைக்கவில்லை..

இரத்தம் சொட்ட சொட்ட
இழுத்து மூடவும் வழியற்று
இதயம் அற்றோராய்
இடம் பெயர்ந்தலைந்தோம்..
காலன் பறித்த எம்மவர்க்கு
கல்லறை வரம் கூட இல்லாது போய்விட…
இன்றைய இறப்பு நிகழ்வுகள்
அன்றைய எமது இறப்புகளில்
நாம் இழந்தவை அனைத்தையும்
இயம்பி நிற்கையில் – எம்
மனங்கள் முழுவதும் – இன்றைய
மரணங்கள் மீதான
பொறாமை நிறைந்தது…!

பிரசாந்தி ஜெயபாலன்

Related posts

குழந்தைகளில் காய்ச்சல் ஏற்படும் போது செய்ய வேண்டியது என்ன ????

Thumi2021

அவிழ்ப்பதற்கா முடிச்சுக்கள்?

Thumi2021

மருத்துவம் போற்றுதும்

Thumi2021

Leave a Comment