ராட்ஸச கால்களில்
நழுவும் வானத்தை நான்
எனதுயிராக்கிக் கொள்கிறேன்
அழகி தேசத்து
மிச்சங்களை மறுதலிக்கும்
தேகம் எனது ஆகச்சிறந்த
கனவின் கலைதலாக இருக்கட்டும்
யாவும் தீரும் வெளியில்
சிறு தீர்வென சிறகடிக்கும் எனது
மீட்சி
மெல்லிய வாழ் கோடுகளை
வரைந்து பின் அழித்து
சுவடாக்கி சூன்யமாகி பின்
கிளர்ந்தெழும்
தத்துவம் எனது நிகராகட்டும்
இருண்மையின் விரல் இடுக்கில்
கசிந்துருகும் வியர்வைத் தாகத்தோடு
மீண்டும் மீண்டும் இலை மறையாகிறது
எனது உயிர்த்தெழுதல்
போதாமைக்குள் நின்று
சுழன்று தான் ஆகும் என்னை
அப்படியே நான் விட்டு விடுவதில்லை
உங்களைப் போல….!
கவிஜி