துமி இதழ் வாசகர்களே!
உங்கள் உதவியுடன் எவ்வளவு பெற்காசுகள் கொடுத்து போஜராஜன் கம்பங்கொல்லையை வாங்கியிருப்பார் என சரியான பதிலை கூறிய விக்ரமாதித்தனை நோக்கி சந்தோசமடைந்த வேதாளம் மிகுதி கதையை சொல்ல தெடங்கியது. மகாராஜன் கம்பங்கொல்லையை தன்னுடையதாக்கியதன் பின்பு மறுநாளே அரசாங்க ஆட்களை அழைத்து பரண் இருந்த இடத்தில் தோண்டிப்பார்க்கச் சொன்னான். மண்ணை ஆழமாக வெட்டிப் பரிசோதித்த போது நவரத்தினங்களால் இழைக்கப்பெற்ற முப்பத்துரெண்டு படிகளிலும் அழகிய பதுமைகளைக் கொண்டதுமான பொற் சிங்காதனம் ஒன்று இருந்தது என்று கதை கூறி முடித்த வேதாளம் முருங்கை மரத்திற்கு பறந்து சென்றது.
சற்றும் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் சுடுகாடு சென்று வேதாளத்தை சுமந்து வருகையில் மீண்டும் ஒரு கதை ஒன்றை சொல்ல தொடங்கியது வேதாளம்.
தேவலோகத்திலிருக்கும் அமராவதிப் பட்டணத்திற்கு ஒப்பான சகல ஐஸ்வரியங்களோடு கூடிய நகரம் ஒன்று பூவுலகில் இருந்தது. கன்னியாபுரி என்னும் அந் நகரில் பர்த்ருஹரிராஜன் அரசாட்சி புரிந்து வந்தான். அவனுடைய பராக்கிரமத்தை எதிர்க்கும் சக்தி இன்றி மன்னாதி மன்னர்களொல்லாம் அவனிடம் சிறைப்பட்டார்கள். இவ்விதம் பர்த்ருஹரிராஜன் தனக்கு நிகரற்றவனாய் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று ஆட்சி நடத்தி வந்தான். ராஜா பர்த்ருஹரி அவ்வாறு ஆட்சி செய்து வரும் நாளையில் அந் நகரத்தில் எல்லா சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த அந்தணன் ஒருவன் இருந்தான். வயது ஆக ஆக கிழட்டுத்தனம் தட்டவே அவன் நாடி தளர்ந்து அதிகமாக வாடலானான். உடம்பில் வலிமையும் வாலிபமும் இருந்தால் ஓரளவு வறுமையை சமாளிக்க முடியுமென அவனுக்கு தோன்றியது. ஒரு நாள் பூமாதேவியை நோக்கி கடுந்தவம் செய்தான். அவன் தவத்தில் திருப்தியடைந்த பூமாதேவி அவன் முன் தோன்றி உனக்கு வேண்டியதை தயங்காமல் கேள் தருகிறேன் என்றாள். தேவி! வறுமையில் நான் பெரிதும் வருந்துகிறேன்எனக்குகிழத்தன்மையில்இருந்துவிடுதலைகொடுஎனவேண்டினான்அந்தணன். பூமாதேவி கனிந்த மாம்பழம் ஒன்றை அவனிடம் கொடுத்து “இந்த பழத்தைச் சாப்பிடு நீ விரும்பியபடியே என்றும் இளமையுடன் இருப்பாய் “ என்று சொல்லி மறைந்தாள்.
பழத்தைப் பெற்றுக் கொண்ட அந்தணன் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான். ஸ்நானம் செய்து பூஜைகளை முடித்துக் கொண்டு நியமமாக பழத்தைப் புசிக்க தயாரானான். அப்போது அவன் உள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றியது. நானோ பரம ஏழை அடுத்த வேளைச் சாப்பாடு எங்கு கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் சாகாமலும் யௌவனமாகவும் இருப்பதால் அன்றி என்ன பலன் கிடைக்கப் போகிறது? சுகத்தை அனுபவிக்க திரவியம் இருக்கிறதா? இல்லை அது கிடையாது. இல்லை யாருக்காவது நான் உதவத்தான் முடியுமா? நீண்ட காலம் உயிர்வாழ்வது மூலம் பிச்சை எடுப்பது தான் நீங்கி விடுமா? சிறிது காலமே உயிர் தரித்திருந்தாலும் மற்றவர்களுக்கு ஏதோ கொஞ்சமாவது உதவியாயிருப்பவன் எவ்வளவோ மேலானவனாயிற்றே. இவ்விதம் மனதில் நினைத்த மறையவன் பழத்தைச் சாப்பிட விரும்பவில்லை. குடிகளின் தலைவன் அரசனே என்றென்றும் இழமையுடன் இருக்க வேண்டியவன். இதை எண்ணிய அவன் நேரே ராஜன் பர்த்ருஹரியை வந்து அடைந்தான். தன்னிடம் உள்ள பூமாதேவி அளித்த அதிசய பழத்தை பற்றி உரைத்த அந்தணன், அரசே! இப்பழத்தை நான் உங்களுக்கு வழங்க விரும்புகிறேன் ஆனால் அதற்கு ஓர் நிபந்தனை. நான் கேட்கும் வினா ஒன்றிற்கு நீங்கள் சரியான பதிலை அளிக்க வேண்டும் என்றார்.
“ஒரு காட்டிலே மொத்தமாக 100 கொரில்லாக்கள், குரங்குகள் மற்றும் தேவாங்குகள் காணப்பட்டன. ஒவ்வொரு நாளும் கிடைக்கும் 100 வாழைப்பழங்களை தமக்கிடையே பகிர்ந்து உண்டு ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. ஒவ்வொரு கொரில்லாவுக்கும் 3 வாழைப்பழங்கள் வீதமும் ஒவ்வொரு குரங்கிற்கும் 2 வாழைப்பழங்கள் வீதமும் கிடைக்கும். தேவாங்கு சிறியது என்பதால் அரைவாசி வாழைப்பழம் கிடைக்கும். இந்த உண்மைகளைப் பயன்படுத்தி அக் காட்டிலே எத்தனை கொரில்லாக்கள், குரங்குகள் மற்றும் தேவாங்குகள் உள்ளன என்பதை உம்மால் கண்டு பிடிக்க முடியுமா? அசரே என அந்தணன் பணிவுடன் வினவினான்.
விக்ரமாதித்தனே நீர் கூட மிக்க அறிவாற்றல் உள்ள மன்னராயிற்றே, அந்தணன் கேள்விக்கான பதிலை எமக்கு உரையும் பார்க்கலாம் என்று கதை கூறி முடித்தது வேதாளம்.
துமி மின்னிதழ் அன்பர்களே!
வழமை போல் வேதாளத்தின் கேள்விக்கு விக்ரமாதித்தன் பதிலழிக்க எமது மின்னிழிற்கூடாக உதவிடுங்கள்.