இதழ்-32

தாய்ப்பால் – ஒரு அறிமுகம்

தாய்ப்பால் முதல் ஆறு மாதத்திற்கும் குழந்தைகளுக்கு பூரண உணவாக விளங்குகிறது.
முதல் ஆறு மாதத்திற்கும் தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டவேண்டுமென்பது உலகளாவிய ரீதியிலான நியதியாகவும், விதிமுறையாகவும் காணப்படுகின்றது.

இது குழந்தைகளுக்கான போசாக்கை மட்டுமல்லாது நோய் எதிர்ப்புச்சக்தி உளவிருத்தி போன்றவற்றிற்கும் உதவுகின்றது.

தாய்ப்பாலூட்டலின் நன்மைகள்

  1. சரியான அளவில் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டது.
  2. நோய் எதிர்ப்புச்சக்தி கொண்டது – Immunoglobulins, Lactoferrin, Lysozyme, Bifidus factor, Interferons.
  3. அதிக அளவில் அகத்துறிஞ்சக்கூடிய இரும்புச்சத்தை கொண்டுள்ளது.
  4. சமிபாட்டு நொதியங்களை கொண்டுள்ளது.
  5. மூளை விருத்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
  6. தாயுக்கும் சேயுக்குமான பிணைப்பை அதிகரிக்கும்.
  7. தாயில் மார்பகப் புற்றுநோய் , சூலகப் புற்று நோயைக் குறைக்கும்.

தாய்பாலூட்டல் சர்வதேச விதிமுறைகள்

× பிறப்பிலிருந்து முதல் ஆறு மாதத்திற்கும் தாய்ப்பால் மட்டுமே(Exclusive Breast feeding) ஊட்டப்பட வேண்டும்.

× ஆறுமாத்திலிருந்து இரண்டு வயது வரை ஏனைய திண்ம உணவுகள் ஊட்டப்படும் அதேவேளை தாய்ப்பாலும் (Complementary feeding) கொடுக்கப்பட வேண்டும்.

கொடுக்கும் தாய்ப்பால் போதுமானதா, அறிவது எப்படி ??

  1. சரியான அளவு தாய்ப்பால் கொடுக்கப்படும் இடத்து பிள்ளை 2-3 மணித்தியாலங்கள் வரை தூங்கும்
  2. தாய்ப்பால் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து சிறுநீர் கழிக்கும்
  3. குழந்தை ஒரு நாளைக்கு 3-4 தடவை மலத்தை வெளியேற்றும்.
  4. குழந்தையின் நிறை அதிகரிப்பு சீரான வகையில் அமையும்.

வேலைக்கு செல்லும் தாய்ப்பாலூட்டும் தாய்மாருக்கான சில அறிவுரைகள்

  1. நீங்கள் உங்களது தாய்ப்பாலை எடுத்து, அதை நீங்கள் 6-8 மணித்தியாலங்கள் சூழல் வெப்பநிலையில் வைத்து பிள்ளைக்கு ஊட்டலாம்.
  2. தவறும் பட்சத்தில், அதே பாலை குளிரூட்டியின் கதவில் (refrigerator door) வைத்து 24 மணி நேரம் வைக்கலாம்.
  3. குளிரூட்டியின் ஆழ்உறைப்பகுதியில் (deep freezer) 6 மாதம் வரை பாதுகாப்பாக வைக்கலாம்.
  4. குளிரூட்டியிலுள்ள போத்தலில் உள்ள பாலை குழந்தைக்கு கொடுக்கும் நேரம், சற்று சுடுநீரில் பால்போத்தலை வைத்து அந்தப் பால் மெதுவாக கரைந்து வரும் போது பிள்ளைக்குக் கொடுக்கலாம்.
No description available.

மேலதிக சந்தேகங்களுக்கு !!!!

யாழ் போதனா வைத்தியசாலையில் தாய்ப்பால் முகாமைத்துவ நிலையம் இயங்குகின்றது. கிழமை நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையும் சனிக்கிழமையில் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும் இந்நிலையம் தொழிற்படும்.

தாய்ப்பாலூட்டல் சம்பந்தமான மேலதிக தகவல்களை முகாமைத்துவ நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையத்தின் தொலைபேசி 📞 இலக்கம் 0212216270.

Related posts

கொரோனா நோயினால் வாயில் ஏற்படும் அறிகுறிகள்

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 30

Thumi2021

புதிர் 11 – கட்டங்களை தீர்ப்பவனுக்கே கல்யாணம்

Thumi2021

Leave a Comment