இதழ் 33

புதிர் 12 – தேடியது கிடைக்க தேனீக்களுக்கு உதவுங்கள்!

வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தனிடம் அந்த வேதாளம் ஒரு கதை சொல்லத் தொடங்கியது.

“விஜய்ப்பூர்” என்ற ஊரில் ரகு என்கிற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் எல்லோருக்கும் அவர்களுக்கு தேவை இருக்கிறதா, இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் அனைவருக்கும் உதவி வந்தான். இதனால் கவலையடைந்த அவனது பெற்றோர்கள் அவனுக்கு திருமணம் செய்தால் இக்குணம் மாறும் எனக்கருதி, சிறந்த அறிவாற்றல் மிக்க “ரமா” என்கிற பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்து சில காலம் கழித்து தன் கணவன் ரகுவிடம் அவன் இதற்கு முன்பு உதவி செய்த அனைவருக்கும் அதனால் பயன் கிட்டியதா என்பதை அறிந்து வருமாறு கூறினாள். இதை கேட்டு அவர்கள் அனைவரிடமும் விசாரித்த ரகு அவர்களுக்கு தான் செய்த உதவியினால் எவ்வித பயனும் இல்லை என்பதை அறிந்து வந்து ரமாவிடம் கூறினான். அப்போது ரமா, பிறருக்கு நேர்மையாக உதவுவதற்கு மருத்துவத்தொழிலைக் கற்று, அதன் மூலம் உதவுமாறு கூறினாள். அதைக் கற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆகும் என்று ரகு கூறிய போது “சந்திரநகர்” என்ற ஊரில் வைத்தியநாதன் என்ற மருத்துவரிடம் ஒரு வருடத்திலேயே மருத்துவத்தொழிலை யாரும் கற்றுக்கொள்ள முடியும் என்று கூறி, ரகுவை அவரிடம் சென்று மருத்துவம் பயிலக்கூறினாள் ரமா. ரகுவும் வைத்தியநாதனிடம் ஒரு வருடம் மாணவனாக இருந்து வைத்தியமுறைகளை கற்று தேர்ந்தான்.

 பின்பு ஊருக்கு திரும்பிய அவன் தினமும் தனது வீட்டிலேயே மக்கள் அனைவருக்கும் வைத்தியம் பார்க்கத்தொடங்கினான். அப்படி ஒரு முறை ஏழை ஒருவருக்கு ரகு வைத்தியம் பார்க்கும் போது செல்வந்தர் ஒருவர் குறுக்கிட்டு தனக்கு உடனடியாக வைத்தியம் பார்க்குமாறும், அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருவதாக கூறினான். ஆனால் ரகு மறுத்துவிட்டான். மற்றொருநாள் அந்த நாட்டு மன்னரின் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால் அரண்மனைக்கு வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் படி அரசாங்க வீரர்கள் ரகுவை அழைத்தனர். தான் அரண்மனைக்கு சென்று வைத்தியம் பார்க்கும் நேரத்தில் இங்கிருக்கும் நோயாளிகள் பாதிக்கப்படுவர் என்பதால் மன்னரின் தாயாரை தனது வீட்டிற்கு அழைத்துவந்து வைத்தியம் பார்த்துக்கொள்ளுமாறு கூறி அவர்களை அனுப்பி விட்டான்.

இதையெல்லாம் அந்த ஊருக்கு வந்திருந்த துறவி ஒருவர் கவனித்து ரகுவை பாராட்டி ஆசிர்வதித்தார். அதோடு சந்திராநகர் சென்று, அவரது குருவிடம் மீதமிருக்கும் மருத்துவ ஓலைகளை வாங்கிவந்து அதன் மூலம் மேலும் சிறந்த சிகிச்சை அளிக்குமாறு ரகுவிடம் அடிக்கடி கூறிவந்தார். ரகுவும் ஒவ்வொருமுறையும் அங்கு செல்ல காலம் தாழ்த்தி வந்தான்.  

ரகுவை அந்த சுவடிகளை வாங்கி வர வைக்க ஒருநாள் அவன் மனைவி ரமாவே தனக்கு உடல் நலம் சரியில்லாது போலும், அவள் கணவணான ரகு தரும் எம்மருந்துகளை உட்கொண்டாலும் அவள் குணமாகாத மாதிரி நடித்தாள். இதனால் வேறு வழியின்றி ரகு தனது குரு வைத்தியநாதனிடம் சென்று ஓலைகளை வாங்கிவர தீர்மானித்தான். இருப்பினும் அறிவாற்றலிலும் மருத்துவத்திலும் சிறந்த ஒருவருக்கே குரு ஓலைச் சுவடிகளை வழங்குவார் என்று அவனுக்கு தெரிந்திருந்தது ஆதலால் அறிவாற்றல் மிக்க அவனது மனைவியையும் கூடவே அழைத்துச் சென்றான். அங்கு சென்றதும் வந்த நோக்கத்தையும் அவன் மருத்துவ ஆற்றலையுமறிந்த குரு அவர்களின் அறிவாற்றலை சோதிக்க புதிரொன்றை போட்டார்.

இங்குள்ள தேனீக்கள் 1 முதல் 14 வரையிலான எண்களை மறுசீரமைக்க முயற்சிக்கின்றன.  அவர்கள் செய்ய முயற்சிப்பது இவ் எண்களை கலங்களில் வைப்பதால் இரண்டு அடுத்தடுத்த எண்கள் அருகிலுள்ள கலங்களில் இடம்பெறாது  அத்துடன் எந்த எண்ணும் அவ் எண்ணை  சமமாக பிரிக்குகும்  எண்ணுக்கு அடுத்ததாக இருக்க முடியாது.  இந்த கருத்தில் இருந்து எண் 1 விலக்கப்பட்டுள்ளது. நீங்கள் இருவருமிணைந்து இப் புதிரை தீர்த்தால் தன்னிடமுள்ள ஓலைச் சுவடிகளை வழங்குவாதாக வாக்களித்தார் மருத்துவர்.

விக்ரமாதித்தனே உமது பயணக் களைப்பு தெரியாமலிருக்க இப்புதிருக்கான பதிலை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று கூறி முடித்தது வேதாளம்.

துமி அன்பர்களே ,

வழமை போல்  நீங்களும் மன்னருக்கு உதவிடுங்கள்.

பதிலை துமி மின்னிதழிற்கு அனுப்பி வையுங்கள்.

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 29

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 31

Thumi2021

அவளுடன் ஒரு நாள் – 01

Thumi2021

Leave a Comment