இதழ் 33

Covid-19 நோய்த்தொற்று பரவல் காலப்பகுதியில் வாய் சுகாதாரத்தினை பேணுதல்

Covid-19 தொற்று நோய் அதிகரித்து வரும் காலப்பகுதியில் பெரும்பாலான பற்சிகிச்சைகள் முறைகள் வழமையாக செயற்படுத்தும் வகையில் இருந்து சற்று மாறுபட்டும், மட்டுப்படுத்தப்பட்டும் உள்ளது.

பெரும்பாலான சிகிச்சை முறைகள் SARS – Cov – 2 வைரஸ் பரவுதலுடன் சம்பந்தபட்டவையாகவே காணப்படுகின்றது. ஆகவே சில சமயங்களில் பற்சிகிச்சை நிலையங்கள் கொரோணா பரவலுக்கு முக்கிய இடமாகக் கூட இருக்கக்கூடும். நோயாளியிடம் இருந்து சுகாதார ஊழியர்களிற்கு அல்லது ஊழியர்களில் இருந்து நோயாளிக்கு அல்லது ஒரு நோயாளியில் இருந்து இன்னொரு நோயாளிக்கு பரவக்கூடும். இருந்த போதிலும் அவசர சிகிச்சைகள் அனைத்தும் முறையான பாதுகாப்பு பொறிமுறைகளுடனும் முன்னெரிச்சைகளுடனும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. கீழே உள்ள கேள்விகளிற்கு உங்களது பதில் “ஆம்” ஆக இருப்பின் அருகில் உள்ள முக மற்றும் தாடை சம்மந்தமான அறுவைசிகிச்சை நிலையத்திற்கு சென்று காட்டவும்.

★விபத்தினால் முகத்தினில் ஏற்பட்ட காயம் அல்லது எலும்பு முறிவு

  1. உங்களுடைய பார்வையில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? மங்கலான பார்வை [Blurred vision] அல்லது  இரட்டிப்பாக தெரிந்தல் [Diplopia].
  2. நீங்கள் உங்கள் பற்களை கடித்து வைத்திருக்கும் பொழுது முன்புடன் ஒப்பிடும் பொழுது கடிக்கும் விதத்தில் மாற்றங்கள் ஏதும் உள்ளதா? அல்லது கண்ணின் வெண்பகுதி, சிவப்பு நிறமாக மாறியுள்ளதா?
  3. உங்களது முகத்தில் ஆழமான காயம் அல்லது முக அசைவுகளை ஏற்படுத்துவதற்கு கடினமாக உள்ளதா?
  4. உங்கள் தாடை எலும்பின் மூட்டில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா? வாயினை திறக்கும் பொழுது வலி அல்லது திறக்க முடியாமல் உள்ளதா?
  5. முகத்தில் விறைப்புத் தன்மை [Numbness] ஏற்பட்டு உள்ளதா?
  6. முகத்தில் வீக்கம் அல்லது தோலின் உள்ளே குருதி சேர்ந்து வீங்கி இரத்தக்கட்டி ஏதும் உள்ளதா?

★சொத்தை பல்லில் [Carious tooth] இருந்து கிருமி பரவுதல்

  1. பல்லில் வலி அல்லது பல்லின் அருகில் உள்ள முரசில் வீக்கம் உள்ளதா?
  2. வாயினை திறப்பதற்கு அல்லது உணவினை விழுங்குவதற்கு கடினமாக உள்ளதா?
  3. சுவை மாற்றம் ஏதும் உள்ளதா?

★வாய் புற்றுநோய் அல்லது சந்தேகத்திற்குரிய புண்கள், வீக்கங்கள்

  1. வாயின் மென்படலத்தில் சிவப்பு அல்லது வெண் படலங்கள் உள்ளதா?
  2. நாட்பட்ட காயங்கள் ஏதேனும் உள்ளதா?
  3. சந்தேகத்திற்குரிய வீக்கங்கள் ஏதும் உள்ளதா?
  4. கழுத்தினில் வீக்கங்கள் அல்லது நிணநீர்க் கட்டிகள் [Lymph Nodes] உள்ளதா?
  5. வாய் திறத்தல் மற்றும் விழுங்குதல் பாதிக்கப்பட்டுள்ளதா?

இக்காலப் பகுதியில் மதுசாரம், வெற்றிலை, புகையிலை, பாக்கு மற்றும் புகைப்பிடித்தல் என்பனவற்றை தவிர்த்தல் மூலம் நீண்ட காலத்திற்கு வாய்ப்புற்று நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையினை குறைக்க முடியும்.

★அலகு [Jaw] தொடர்பான பிரச்சினைகள்

  1. வாயினை திறக்கும் அளவு குறைந்துள்ளதா?
  2. வாயினை திறக்கும் பொழுது தாடை என்பு மூட்டு இறுகி உள்ளதாக உணர்கின்றீர்களா?
  3. காதினை சுற்றி என்பு மூட்டு உள்ள இடத்தில் வலி ஏற்படுகின்றதா?
  4. உணவினை மென்னும் பொழுது கீழ் தாடை மூட்டில் வலி ஏற்படுகின்றதா?

நாடு முடக்கப்பட்டு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் வீடுகளில் இடம்பெறும் வன்முறைகள் [Domestic Violance] அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.  நீங்கள் வாழும் சூழலை பாதுகாப்பாகவும், வன்முறைகள் அல்லாத இடமாகவும் பேணுவது உங்கள் ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும்.

★பல்லினை சீரமைக்கும் சிகிச்சை [Orthodontic Treatment]

நீங்கள் பல்லினை சீரமைக்கும் சிகிச்சைக்கு உட்பட்டு வருப்பவாராயின் உங்கள் பல் வைத்தியரை இந்தகாலப்பகுதியில் குறித்த திகதியில் சந்திக்க முடியாவிடின்
கவலைப்படத் தேவையில்லை. நிரந்தரமாக பொருத்தப்பட்ட கம்பிகளினையும் [Fixed aplliances] அல்லது குறுகிய காலத்திற்கு பாவிக்கப்படும் கழட்டி பூட்டக்கூடிய [Removable appliances] பல் சீரமைக்கும் உபகரணக்களினை ஒரு சில மாத காலத்திற்கு எந்தவொரு தலையீடும் இன்றி தொடர்ந்து பாவிக்க முடியும். பல் வைத்தியரினால் வழங்கப்பட்ட அறிவுரைகளை முறையாக பின் பற்றவும். வாய் சுகாதாரத்தினை சரியாக பேணவும், கடினமான, ஒட்டும் தன்மையுள்ள, சீனி அதிகமாக உள்ள உணவுகளையும் ஆகாரங்களையும் தவிர்த்தல் வேண்டும்.

உங்களிற்கு பொருத்தப்பட்டுள்ள கம்பி அல்லது பிரக்கெட்ஸ் [Brackets] இல் ஏதும் பிரச்சனைகள் உள்ளதாயின் பயப்பிடத் தேவையில்லை. உங்களுக்கு கதைத்தல், உண்ணுதல் போன்ற அன்றாட வேலைகளை எந்தவொரு பிரச்சனையும் இன்றி செய்ய முடியுமாயின் அவசரப்பட்டு பல் வைத்தியரை நாட வேண்டிய தேவையில்லை.  சிறிய பிரச்சனைகள் ஏதும் இருப்பின் நீங்களாகவே தற்காலிகமாக சரி செய்ய முடியும். உடைந்த கம்பியால் காயம் ஏதும் வருக்கின்றதாயின் கூர்மையான கம்பியினை மறைப்பதற்கு orthodontic wax இனை அல்லது chewing gum இனை பயன்படுத்த முடியும். கழட்டிப் பூட்டக் கூடிய பல் சீராக்கும் உபகரணங்கள்  உடைந்துள்ளதாயின் அல்லது வாயினுள் சரியாக பொருந்தவில்லையாயின் பாவிக்க வேண்டாம். வலி அல்லது உண்ணுதல் கதைத்தல் போன்ற அன்றாட வேலைகளை செய்யக் கடினமாக உள்ளதாயின் பல் வைத்தியரை நாடவும்.

★உடனடியாக வைத்தியரினை நாட வேண்டிய சந்தர்ப்பங்கள்

விபத்துக்களினால் பல் உடைதல் [Dental Trauma] அல்லது பல்லில் வேறு சேதங்கள்

விபத்துகளினால் பல் உடைதல் அல்லது பற்களில் வேறு சேதங்கள் ஏற்படுமாயினும்,  பொதுவாக குழந்தைகளிற்க்கே வீடுகளில் ஏற்படும் விபத்துகளினால் பற்களில் பாதிப்பு ஏற்படுத்தல் அதிகமாகும்.

  1. சேதமடைந்த இடத்தை பரிசோதனை செய்யவும் உடைந்த பல், பல்லில் இருந்து அல்லது முரசில் இருந்து இரத்தம் வெளியேறுதல், பல் ஆடுதல், தொடும் பொழுது பல் வலி, பற்கள் முன்பு இருந்த இடத்தில் மாற்றங்கள் . குழந்தைகளில் சேதமடைந்துள்ள பல், பாற்பல்லா அல்லது நிரந்திர பல்லா என அவதானிக்கவும்.
  2. பயணக்கட்டுப்பாடு காலத்திலும் அரசாங்க பல் வைத்தியசாலைகள் திறந்து இருக்கும். ஆகவே விபத்துகளினால் முழுமையாக கழன்று வெளியே வந்த பல்லினை முறையாக குறுகிய நேரத்தில் எடுத்துச் சென்றால் பல்லினை மீண்டும் பழைய இடத்தில் பொருத்த முடியும்.

◆கழன்று விழுந்த பல்லினை அவதானகமாகக் கையாள வேண்டும். விழுந்த பல்லின் முடிப் [crown] பகுதில் பிடித்து எடுத்தல் வேண்டும். வேர் [Root] பகுதியினைக் கையாள வேண்டாம்.
◆ பல்லினில் அழுக்குகள் உள்ளதாயின் சேலைன் அல்லது பாலினைக் கொண்டு சுத்தம் செய்யலாம். முடியுமானால் சரியான முறையில் பல்லினை பழைய இடத்தில் முரசினுள்  பொருத்த முயற்சிக்கவும். பாற் பல்லினை மீண்டும் பொருத்த முயற்சிக்க வேண்டாம்.
◆மீண்டும் பொருத்த முடியாவிடின் பல்லினை வாயினுள் வைத்தபடி அல்லது ஒரு குடுவையினுள் நோயாளியின் உமிழ்நீர், பால் அல்லது நார்மல் சேலைனுள் [normal Saline] வைத்து உடனடியாக குறுகிய நேரத்தினுள் பல் வைத்தியரினை நாடவும்.
◆பல்லினை மீண்டும் பொருத்தி விட்டால் பொருத்தப்பட்ட பல்லினை கை லேஞ்சியினால் இறுக்கக் கடித்து வைத்துக்கொண்டு செல்லவும்.
◆சாலை விபத்தில் வெளியே கழன்று விழுந்து பின்பு முறையாகப் குறுகிய நேரத்தினுள் [ஒரு மணித்தியாலத்தினிலும் குறைவாக] பொருத்தப்பட்ட பல் பாதுகாக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகும்.

தொடரும்…

Related posts

T-20 உலகக்கோப்பை 2021 அணிகளின் அலசல் – 02

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 29

Thumi2021

தற்சார்பு வாழ்வியலை நோக்கி காடை வளர்ப்பு

Thumi2021

Leave a Comment