இதழ்-34

Covid-19 நோய்த்தொற்று பரவல் காலப்பகுதியில் வாய் சுகாதாரத்தினை பேணுதல்

3) பல்லின் பெரிய பகுதி உடைந்துள்ளதாயின்

a.உடைந்த பல்லில் சிவப்பு புள்ளி காணப்படுகின்றதாயின் [படம் 1] அல்லது உடைந்த பல்லில் இருந்து இரத்தம் வெளியேறுகின்றதாயின் உடனடியாக பல் வைத்தியரை நாடவேண்டும்.

b. உடைந்த பல்லின் பகுதியினை சேலைன் உள்ள ஒரு குடுவையில் வைத்து பல் வைத்தியரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

c. வைத்தியரை நாடமுடியாவிடின் உங்களுக்கு தெரிந்த பல் வைத்தியருக்கு உடைந்த பல்லின் தெளிவான படம் ஒன்றினை எடுத்து அனுப்பவதன் மூலம் அறிவுரைகளைப் பெறமுடியும்.

【விபத்துக்கள் மூலம் பாற்பல் அல்லது நிரந்தரப் பல் அல்லது இரண்டு வகையான பற்களும் பாதிக்கப்படக்கூடும்.
குழந்தைகளுக்கு பாற்பற்கள் வெளியில் காணப்படினும் பாற்பல்லுக்கு  கீழே எலும்பினுள் நிரந்திர பல்லானது காணப்படும்.  அதனால் பாற்பற்கள் பாதிக்கப்படும் பொழுது நிரந்தர பற்கள் பாதிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களும் அதிகமாக்கும். ஆகவே பற்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படின் பல் வைத்தியரின் ஆலோசனைகளைப் பெறுவது அவசியமாகும். குழந்தைகள் விளையாடும் இடங்களினை தேவையற்ற விபத்துக்களினை தவிர்ப்பதற்கு பாதுகாப்பானதாக உறுதி செய்வது பெற்றோரின் கடமையாகும்.】

●வீங்கிய முரசு, முரசில் இருந்து இரத்தம் வெளியேறுதல் அல்லது வேறு முரசு சம்மந்தமான நோய்கள்

சீழ்/சிதல் கட்டியானது பல்லில் இருந்து அல்லது முரசில் இருந்து பரவும் கிருமிகளால் ஏற்படுகின்றது.
சிதல் கட்டியானது சின்னதாக ஆரம்பித்து வலியுடன் கூடிய பெரிய கட்டியாக உருப்பெரும். சீழ்க்கட்டியில் இருந்து பரவிய கிருமியினால் முகத்தில் வீக்கம் ஏற்படுமாயின் உடனடியா பல்வைத்தியரை நாட வேண்டும். [ படம் 2]

●கடுமையான பல்வலி

ஆழமான பற்சொத்தை மற்றும் பல் வெடிப்புகளில் இருந்து பல் வலி ஏற்படக்கூடும்.  தாங்கமுடியாத பல்வலியாயின் அருகில் உள்ள பல் வைத்திய நிலையத்தினை நாடவும்.
கடினமான உணவினை, நிரப்பப்பட்ட பல்லினால் உண்ணும் பொழுது வெடிப்பு ஏற்படக்கூடும். சில நேரங்களில் அவ்வாறான வெடிப்புகளினால் பல்லினை இழக்கக் கூட நேரிடலாம்.

பற்சொத்தையினை சுத்தம் செய்யும் பொழுது அல்லது பல்லை நிரப்பும் பொழுது அல்லது வேர்ச்சிகிச்சை செய்யும் பொழுது வெளியேறும் மிகச் சிறிய நீர்த் துளிகள் காற்றினில் கலந்து சில மணி  நேரம் அதே இடத்தில் இருக்கக் கூடும். இந்த நீர்த் துளிகள் மூலம் கொவிட் வைரஸ் அல்லது பற்றீரியா ஆனது இலகுவில் பரவக்கூடும். ஆதலால் சில சமயங்களில் சிகிச்சைக்கு முன்பாக கொரோனா வைரசுக்கு உரிய விரைவான ஆன்டிஜேன் பரிசோதனை எனப்படும் எதிர்பொருள் பரிசோதனை [ Rapid antigen tests for SARS Cov-2 antigen] செய்ய வேண்டிய தேவை ஏற்படலாம்.

-பற்சொத்தை ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது இனிப்பு பண்டங்களே. சீனி அதிகமாக உள்ள உணவுகள் உட்கொள்வதினை குறைத்துக் கொள்ளவும். அவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டுமாயின் பிரதான உணவுடன் எடுத்துக்கொள்ளவும். பிரதான உணவுகளுக்கு இடையில் குறைந்தளவு சீனியுள்ள உணவுகளை உட்கொண்டாலும் பற்சொத்தை ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகும். 

-உங்களது குழந்தைக்கு இரவு வேளையில்  சீனி கொண்டுள்ள பாலினை பருக்குவீர்களாயின் உங்கள் குழந்தையின் முன் வரிசையிலுள்ள பற்கள் சொத்தை அடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். எப்பொழுதும் உங்கள் குழந்தைகளை இரவினில் பல் துலக்குவதற்கும் ஊக்குவியுங்கள். இரவினில் பல் துலக்கிய பின்பு உண்பதற்கு அல்லது குடிப்பதற்கு நீரினை தவிர வேறு ஒன்றும் கொடுக்க வேண்டாம்.

குழந்தைகளும் பெரியவர்கள் பாவிக்கும் பற்பசையினை குறைந்த பரிமாணத்தில் பாவிக்க வேண்டும்.
குடிநீரில் புளோரைட் அதிகமாக உள்ள இடங்களில் [வடமத்திய மாகாணம்] புளோரைட் இல்லாத பற்பசைகளை பயன்படுத்த வேண்டும்.

●கிளினிக்  வருகைகள் [Follow up clinics]

-முன்னால் ஏற்பட்ட பற்சேதம் அல்லது கடுமையான முரசு நோய்க்கான[Severe periodontitis] அறிவுறுத்தலுக்கு அமைவாக சரியான நேர இடைவெளிகளில் வைத்தியரை தொடர்பு கொள்ளவும்.
-சில சமயங்களில் சிகிச்சையின் உரிய பலனை பெறுவதற்காக தவறாது கிளினிக் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

-பொதுமக்களாகிய நீங்கள் முகக் கவசம் அணிந்து தேவையான இடைவெளியினைப் பேணி முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கிளினிக் வருவீர்களானால் சனநெரிசலன்றி விரைவாக முறையான பாதுகாப்பு பொறிமுறைகளுடன் தகுந்த சேவைகளினை வழங்க நாம் தயாராக உள்ளோம்.

-அவசரத் தேவைகள் இருப்பின் வைத்தியசாலையை அல்லது உங்களது பல் வைத்தியரை  தொடர்பு கொண்டு உங்களது சந்தேகங்களை கேட்கலாம்.

-கிளினிக் வருவதற்கு முன்பு வைத்தியசாலையினை தொடர்பு கொண்டு பொருத்தமான நேரத்தினை அறிந்துகொண்டு வருவது சாலச் சிறந்தது.

-சிகிச்சைக்குப் பின்னரான அறிவுரைகளை  முறையாகப் பின்பற்றவும்.

-சிறந்த வாய் ஆரோக்கியத்தினைப் பேணவும்
பு(f)ளோரைட் உள்ள பற்பசையை உபயோகித்து தினமும் இரு வேளைகள் காலையிலும் இரவிலும் முறையாக பல் துலக்கவும். இது தவிர்ந்து பற்களுக்கு இடையில் சுத்தம் செய்வதற்கு interdental tooth brush, tooth floss போன்றவற்றினையும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஈறு மற்றும் பல் ஆரோக்கியத்தினை சிறந்த முறையில் பேண முடியும். வாயை சுத்தம் செய்யும் திரவத்தினை[mouth wash] வைத்தியரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம். நீண்ட கால பயன்பாடானது பற்களின் நிற மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

-கொரொனா  தொற்றுக்கு உள்ளானவர்கள் சிறந்த வாய் ஆரோக்கியத்தை பேணுவது முக்கியமானதாகும். உமிழ் நீரில் அதிக செறிவில் வைரஸ் கிருமிகள் காணப்படும். இதனால் நாக்கு மற்றும் பல்லினை முறையாக சுத்தம் செய்து வைத்திருத்தல் மூலமாக வாயினுள் பரவும் வேறு கிருமியின் [secondary infection] அளவு குறைவாக இருக்கும்.

● செயற்கைப் பல் செட் [Denture] பராமரிப்பு

கழட்டி பூட்டும் பல் செட்டினை பற்தூரிகை மற்றும் சவர்க்காரம் இட்டு சுத்தம் செய்ய வேண்டும். இரவினில் கழட்டி தண்ணீர் உள்ள ஒரு குடுவையினுள் இட்டு வைக்கவும். காலையில் மீண்டும் சுத்தம் செய்து வாயினுள் பொருத்தவும். கம்பிகள் ஏதும் உடைந்திருந்தால் அல்லது plate உடைந்திருப்பின் நீங்களாக ஒட்டுவதற்கு முயற்சிக்க வேண்டாம். உங்களுடைய அல்லது அருகில் உள்ள பல் வைத்தியரிடம் சென்று காட்டவும்.
வைத்தியர் தவிர்ந்த வேறு நபர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு தேவையற்ற சிகிச்சை முறைகளையும் வீட்டு வைத்தியங்களையும் செய்ய வேண்டாம். வைத்தியசாலைக்கு வருவதாயின் தனியாக அல்லது ஒரு நபருடன் மாத்திரம் வரவும். கூட்டமாக வருவதினை தவிர்க்கவும்.

●உங்களிடம் கொரொனா  அறிகுறிகள் இருப்பின் பல்வைத்தியரிடம் தெரிவித்து உரிய சிகிச்சை முறைகளைச் செய்து கொள்ளலாம். அவசர சிகிச்சைகள் இப்பொழுதும் முறையான பாதுகாப்பு பொறிமுறைகளுடன் நடைபெற்ற வண்ணமே உள்ளது.

●அறுவை சிகிச்சைக்கு பின்பு வழங்கப்பட்ட மருந்துகளினை சரியாக நேரம் தவறாது எடுத்துக் கொள்ளவும். வழங்கப்பட்ட அறிவுரைகளினையும் பின்பற்றவும். காயங்களினை சரியான முறையில் காயத்தினை பேணவேண்டும்.   சந்தேகங்கள் இருப்பின் வைத்தியசாலையினை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.
அறுவைச் சிகிச்சை செய்ய காத்திருக்கும் நோயாளிகள் உங்களது சரியான தொலைபேசி இலக்கத்தினை வைத்தியசாலையில் கொடுக்கவும். வைத்தியசாலையில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளியுங்கள்.
விசேட பரிசோதனைக்கான reports வந்துள்ளதா என தொலைபேசியின் ஊடாக குறித்த திகதியில் தொடர்பு கொண்டு கேட்கவும்.
உங்களுடைய ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் சிறந்த சேவையினை வழங்க உதவியாக இருக்கும்.

Related posts

T-20 உலகக்கோப்பை 2021 அணிகளின் அலசல் – 03

Thumi2021

மரணம் என்னும் தூது வந்தது!

Thumi202121

பரிசு வேண்டாம்…!

Thumi202121

Leave a Comment