இதழ்-34

விழித்து கொள்வோம்!

ஒக்டோபர்-01 உலக முதியோர் தினமாகவும், சிறுவர் தினமாகவும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து முதியோர்களுக்கும் முதியோர் தின வாழ்த்தையும், சிறார்களுக்கு சிறுவர் தின வாழ்த்துக்களையும் துமி மின்னிதழ் குழுமம் தெரிவித்து கொள்கிறது.

இவ்விதழின் ஆசிரியர் பதிவை இவ்வாண்டுக்கான முதியோர் தின மற்றும் சிறுவர் தின கருப்போருள்களை நிறைத்து உரு வாக்குகிறோம்.

இவ்வாண்டுக்கான முதியோர் தின கருப் பொருளாக, ‘அனைத்து வயதினருக்கும் டிஜிட்டல் சமபங்கு” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டு டிஜிற்றல் உலகை அடையாளப்படுத்திய போதிலும் கொரோனா டிஜிற்றல் உலகை முழுமையாய் நெறிப்படுத்தியுள்ளது.

இந்த நவீன டிஜிற்றல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதில் வயதானவர்கள் மிகவும் பின்தங்கி யிருக்கிறார்கள். இதனை காவோலை விழ குருத்தோலை சிரிக்கும் முதுமொழி பாணியில் இளையோர் நளினமாக பார்க்கும் நிலை காணப்படுகிறது. இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என்ற எண்ணப்பாட்டிலேயே குறித்த கருப்பொருள் மொழியப்பட்டுள்ளது.

‘ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை நினை த்துப் பாருங்கள்.” என்பதுவே இவ்வாண்டுக்கான சர்வதேச சிறுவர் தினத்தின் கருப்பொருளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 3.6 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் சம்பந்தப்பட்ட குழந்தை பாதுகாப்பு நிறுவனங்களுக்கு 3.6 மில்லியனுக்கும் அதிகமான பரிந்துரைகள் செய்யப்படுகின்றன. சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் இப்பரிந்துரைகளின் எண்ணிக்கை நிறைவான தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறார்களின் எதிர்காலத்தை அழிப்பது நாளைய உலகையே நிர்மூலமாக்கும் செயலாகும். இந்நிலைமையிலும் மாற்றங்கள் வேண்டும்.

கருப்பொருட்களும் தினங்களும் கொண்டாட்டங்களுடன் கடந்து செல்வதற்கானது இல்லை.

விழிப்படைய வேண்டும்!! விழிப்படைய செய்ய வேண்டும்!!!

Related posts

சிங்ககிரித்தலைவன் – 32

Thumi2021

பரிசு வேண்டாம்…!

Thumi202121

மரணம் என்னும் தூது வந்தது!

Thumi202121

Leave a Comment