இதழ் 35

ஈழச்சூழலியல் 21

நீர் மாசுபடுத்தப்படுத்தலுக்கான ஒரு சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1986ல் சுவிற்சர்லாந்தில் உள்ள பேசல் நகரில் இரசாயன களஞ்சியம் ஒன்றில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் போது 30 தொன் இரசாயனங்கள் உட்பட பீடை நாசினிகள், பாதரசத்தினைக்கொண்ட சேதனப் பொருட்கள், ஏனைய இரசாயனங்கள் என்பன றைன் நதிக்கு கழுவிச் செல்லப்பட்டன. இந்நதியிலிருந்து பல நகரங்களிற்கு நீரைப் பெறும் நிலையங்கள் மூடப்பட்டமையினால் இந்நதியில் தமது பல தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தங்கியிருந்த சனத்தொகை பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியது. நதியில் இரசாயனங்கள் விடுவிக்கப்பட்டமையினால் அரை மில்லியனிற்கும் அதிகமான மீன்கள் இறந்து போனதாக மதிப்பிடப்பட்டது.

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் 2005 நவம்பரில் இரசாயன தொழிற்சாலையொன்றில் பாரிய வெடி விபத்து ஏற்பட்டமையினால், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய 100 தொன் பென்சீன், நைட்ரோ பென்சீன் என்பன சொங்குவா ஆற்றை அடைந்தன. நீரில் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பு அளவை விட 108 மடங்கு பென்சீனின் செறிவு அதிகரித்தது. இதனால் இந்நதியிலிருந்து நீரைப் பெற்றுக் கொண்ட ஹார்பின் நகரில் வாழ்ந்த நான்கு மில்லியன் மக்களிற்கு ஆறு நாட்களிற்கு நீர் வழங்கல் தடைப்பட்டது. இந்நிகழ்வின் காரணமாக சீனா ரசியாவிடம் மன்னிப்புக் கோரியது. ஏனெனில் மாசடைந்த இந்நதி சைபீரியா ஊடாக பாய்கின்றது.


வாகனங்களிலிருந்து வெளியேறும் வாயுக்களின் மூலம் காபன் மொனொக்சைட், ஓசோன் என்பன பிரிகையடைவதற்கு உதவும் எரிபொருள் ஒட்சிசனேற்றிகள் (கரநட ழஒலபநயெவநள) என அழைக்கப்படும் இரசயானங்களை அறிமுகப்படுத்திய போது பிரச்சினைகள் எழுந்தன.ஒட்சிசனேற்றிகள் புற்றுநோயைத் தூண்டுவனவாகும். இவை குழாய்கள், நிலத்தடி சேமிப்புத் தாங்கிகளிலிருந்து வெளியேறி நிலத்தடி நீரை மாசடையச் செய்தன. வளி மண்டல மாசடைதலைக் குறைப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட இரசாயனங்கள் நிலத்தடி நீரை மாசடையச் செய்தமைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

60 வருடங்களிற்கு முன்னர் அணுகுண்டைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்ட்ட யுரேனியம், ஏனைய அணுப்பொருட்கள் என்பன நியுயோர்க் இன் நயாக்ரா மாநிலத்திலுள்ள வீட்டுக் கிணறுகளின் நீரில் கதிர் வீச்சுப்பொருட்கள் சேர வழியேற்படுத்தியது. உண்மையில் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமான இச்செயலை எதிர்த்து நட்ட ஈட்டினைச் செலுத்துமாறு உள்ளுர் மக்களால் அரசிற்கெதிராக 200 இற்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சில முறைப்பாட்டாளர்களிற்கு நட்ட ஈட்டினை செலுத்துமாறு நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.

1996 இல் கலிபோர்னியாவிலுள்ள ஹிங்க்லே என்னும் இடத்தில் புற்றுநோயைத் தூண்டக் கூடிய ர்நஒயஎயடநவெ குரோமியம் நிலத்தடி நீருடன் சேருவதற்குக் காரணமான மிகப் பெரும் நிறுவனத்திற்கெதிராக சட்ட வல்லுனரொருவரின் இலிகி தராக கடமையாற்றிய எரின் புறோக்கோவிச் என்ற பெண்ணொருவர் தனியொருவராக நீதிமன்றம் சென்றார். இதன் விளைவாக அந்நிறுவனம் குரோமியத்தினால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட 654 பேருக்கு 333 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாகச்செலுத்த வேண்டியேற்பட்டது.

2008 ஜனவரியில் நியுயோர்க் மாநிலத்தில் என்டிகொட் இல் முன்னர் அமைந்திருந்த ஐ.பி.எம் தொழிற்சாலை ட்றைகுளோரோ எதிலீன், டெட்ராகுளோரோ எதிலீன் உள்ளடங்கலாக இரசாயனக் கழிவுகளை நீரில் விடுவித்தமைக்கு எதிராக அதற்கு அருகில் வசித்த மக்கள் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இவ்விரசாயனங்கள் பிறப்புக் குறைபாடுகளையும், மனிதர்களில் புற்று நோயையும் ஏற்படுத்தக் கூடியவையென அறியப்ப ட்டுள்ளது. ஜரோப்பிய நீர் நாய்கள், கனடாவின் காடுகளில் நில நீர் விலங்குகள் (டீநயஎநச) என்பன குறைந்தமை, ஐக்கிய அமெரிக்காவில் நீர்க் கோழிகள் இறந்தமை, பிரித்தானிய நதிகளில் விலாங்கு மீன்கள் (நுநட)அரிதாகியமை என்பன நீர் வாழ் சூழல் மாசடைந்தமையுடன் தொடர்புள்ளவையாகும்.

இங்கு இலங்கையிலும் கண்ணைக் கவர்ந்த நீர் நிலையொன்று காலம் செல்ல துர்மணம் வீசும், கண்ணை உறுத்தும் மோசமானதொரு நீர் நிலையாக மனித நடவடிக்கைகளினால் மாறியமைக்கு பேரைவாவி சிறந்ததொரு உதாரணமாகும். 500 வருடங்களிற்கு முன்னர் இரானுவ நோக்கங்களிற்காக இந்த ஏரி போர்த்துக்கீசரினால் உருவாக்கப்பட்டதாகும். இதேவேளை ஒல்லாந்தர் இவ்வாவியை நீர்கொழும்பு, பாணந்துறை ஆகிய இடங்களிற்கான வாய்க்கால் போக்குவரத்து வலையமைப்பின் மத்திய நிலையமாக மாற்றினர். பிரித்தானிய சீமான்களால் விருந்துபசாரங்களை நடாத்துவதற்கு வாவியின் கரை தெரிவு செய்யப்படும் அளவிற்கு பேரை வாவி அழகுற்று விளங்கியது. 1815ம் ஆண்டில் நெப்போலியனின் வீழ்ச்சியை பிரித்தானிய ஆட்சியாளர்கள் பேரை வாவியிலேயே கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த ஏரியின் உயிரின வாழ்க்கையைப் பொறுத்த வரை மிகவும் பிரசித்தி பெற்ற பிரித்தானிய தாவரவியலாளரான ட்ரைமென் அவர்கள் 1879 இல் இந்த வாவியிலுள்ள நீர் வாழ் தாவரங்கள் தொடர்பான ஒழுங்கு முறையான ஆய்வொன்றை மேற்கொண்டு, அவ்வுயிரினங்கள் அடங்கிய பட்டியலொன்றை வெளியிட்டார். எனவே அச்சமயத்தில் இந்நீர்நிலை மிகவும் ஆரோக்கியமானதொன்றாக விளங்கியமைக்கான சான்றாக இது விளங்குகின்றது. ஆனால் இருபது ஆண்டுகளின் பின்னர் இந்த வாவியின் கரைகளில் சட்ட விரோதமாக மக்கள் குடியேறியத் தொடங்கியமையால் வாவி மாசடையத் தொடங்கியது. மனித கழிவுகள் இவ்வாவியை அடைந்தன. தொழிற்சாலைகளின் கழிவுகள் இவ்வாவியை அடையத் தொடங்கின. வாகனங்கள் திருத்தும் இடங்கள் வாகன சேவை நிலையங்கள் என்பனவற்றிலிருந்து எண்ணெய்கள் நேரடியாக வாவியை அடைந்தன. காலம் செல்ல செல்ல வாவியை அடைந்த சேதனக் கழிவுகளின் அளவு சடுதியாக அதிகரித்தது. இவை சிதைவடைந்து, வாவி நீரில் தாவரப் போசணைசத்துக்களின் செறிவு குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. இதன் விளைவாக அல்காக்களின் வளர்ச்சி அபரிதமாகியது. இவற்றிற் சில அதி நச்சுத்தனமையான பொருட்களை உற்பத்தி செய்யும் இயல்பைக் கொண்டிருந்தன.


மேலும், அல்கா உயிர்த் திணிவுகள் படியிறக்கமடைவதால், நீரில் ஒட்சிசனின் செறிவைக் குறைக்கும். இதனால், துர்மணம் வீசும். ஐதரசன் சல்பைட்டும், ஏனைய ஆபத்தான விளைபொருட்களும் உருவாக வழிவகுக்கும். இவையனைத்தும் ஒன்று சேர்வதனால், பேரை வாவியில் அடிக்கடி மீன்கள் கொல்லப்படுகின்றன. மிக அழகான வாவியொன்று மனிதர்களினால் அழிக்கப்பட்டுள்ளது.இவ்வாறாக பல்வேறு நீர் மாசடைதல் சம்பவங்களை எடுத்துக்கூறலாம். நெடுந்தூரமில்லை சில வருடங்களுக்கு முன் சுண்ணாகம் நிலத்தடி நீர்ப்பிரச்சினை என்னவாயிற்று? இன்று யாழ் மாகரில் தூர்வாறப்படும் குளங்களின் நிலைக்கு காரணம் என்ன?

ஆராய்வோம்…..

Related posts

நம்பினால் நம்பியும் அறிவாளி

Thumi202121

பொக்கைவாய்ப் பற்கள்

Thumi202121

குறுக்கெழுத்துப்போட்டி – 31

Thumi202121

Leave a Comment