சர்வதேச ஓசோன் படலத்தின் பாதிப்பு மனித குலத்திற்கான சிவப்பு எச்சரிக்கை
சூரியனின் கதிர்களில் உயிர்ச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்க கூடிய புற ஊதாக் கதிர்களும், அகச் சிகப்புக் கதிர்களும் புவியை வந்தடையா வண்ணம் அவற்றினை உறிஞ்சி எடுத்துக் கொண்டு உயிர்ச் சூழலுக்கு நன்மை பயக்கக் கூடிய கதிர்களை தேவையான அளவு புவிக்கு வழங்குகின்ற ஓரு படலமே ஓசோன் படலமாகும். இவ் ஓசோனில் ஏற்பட்டுள்ள துவாரமே இன்று உலகம் எதிர் நோக்குகின்ற மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.
இவ் ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 1987 செப்ரெம்பர் 16 இல் கனடாவில் உள்ள மொன்றியலில் பல நாடுகளின் பிரதி நிதிகள் ஒன்றிணைந்து ஓசோன் படையின் அழிவைத் தடுக்க சர்வதேச ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டனர். இதில் இருபத்திநான்கு நாடுகள் கைச்சாத்திட்டன. அத்தினமே, 1995 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
புவியைச் சுற்றி பல்வேறு வாயுக்களைக் கொண்டிருக்கும் படையே வளிமண்டலம் ஆகும். புவியினுடைய ஈர்ப்புச் சக்தியினாலேயே இவ் வளிமண்டலம் புவியைச் சுற்றிக் காணப்படுகின்றது. வளிமண்டலமானது மாறன்மண்டலம், படைமண்டலம், அயனமண்டலம், வெப்பமண்டலம் என்ற படைகளைக் கொண்டு காணப்படுகின்றது. மாறன்மண்டலத்திற்கும், படைமண்டலத்திற்கும் இடையே 12 – 45 கிலோமீற்றர் வரையான படை மண்டலப் பிரதேசத்தினுள் காணப்படும் மென்படையே ஓசோன்படை எனலாம். ஒரு மெல்லிய புகைமண்டலம் போல ஓசோன் இங்கு பரவிக் காணப்படுகின்றது. அடர்த்தி குறைந்த ஒரு வாயு ஓசோன் ஆகும். இப் பகுதியில் இயல்பாக உள்ள ஒட்சிசன் மூலக் கூறு மீது சூரியனின் புற ஊதாக் கதிர் வீச்சு தாக்குதல் ஏற்படுத்தி இரண்டு ஒட்சிசன் அணுவாகப் பிரிக்கப்பட்டு, பின் இந்த அணுக்கள் ஒட்சிசன் மூலக் கூற்றுடன் இணைந்து ஓசோன் (ழு3) வடிவமாக உருவாகின்றது. ஓசோனை முதன் முதலாகக் கண்டறிந்தவர் சி.எப் ஸ்கோன்பின் என்பவராவர்.
ஓசோன் அமைந்துள்ள படைமண்டலமே புவியின் வானிலை, காலநிலை நிலைமைகளுக்கு முக்கியமானதாகும். இப்படையானது சூரியனில் இருந்து வீசப்படும் புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாப்புக் கவசமாகச் செயற்படுகின்றது. வளிமண்டலத்தில் ஓசோனின் அடர்த்தியை டாப்சன் அலகினால் அளவிடுகின்றனர். ஓசோனின் அடர்த்தியை கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் உள்ளன. அவற்றுள் டாப்சன் ஸ்பேக்ட்டோ மீற்றர், ப்ருவர் ஸ்பேக்ட்டோ போட்டோ மீற்றர், ஜோடு மீற்றர், பில்டர் ஓசோன் மீற்றர் எம்.83, பில்டர் ஓசோன் மீற்றர் எம்.124, மாஸ்ட், ஆக்ஸ்போட்டு, சர்பேஸ் ஓசோன் பப்ளர், எலக்ட்ரோ கெமிக்கல் செல் சோன்ட் என்பவை சிலவாகும்.
அறிவியலாளர்கள் 1920 இல் ஓசோன் படலத்தைக் கண்டுபிடித்த காலத்தில் இருந்து அதன் இயற்கை அமைப்பு, மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 1974 இல் சேர் வூட்ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செற்பாடுகளினால் ஓசோன்படைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். ஓசோன் படையில் துவாரமேற்பட்டிருப்பது தொடர்பாக 1982 ஆம் ஆண்டு அந்தாட்டிக்காவின் “கலிபே” என்ற இடத்தில் ஆராய்ச்சி நடாத்திய பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். உறைபனிக் காலத்தில் துவாரங்கள் தோன்றுவதாக Nஐஆடீருளு -7 எனும் செயற்கை செய்மதியினால் கண்டறியப்பட்டது. 1984 ஒக்டோபர் மாதம் மீண்டும் ஆராய்ந்த போது முன்னரிலும் பார்க்க 30 வீதம் விரிவடைந்திருந்தமை கண்டறியப்பட்டது.
ஓசோனைத் தேய்வடையச் செய்யக் கூடிய பொருட்களை வெளியிடுதலே ஓசோன் படையின் அழிவிற்கு (ழுணழநெ னுநிடநவiபெ ளுரடிளவயnஉநள) காரணங்களாக உள்ளன. இப் பொருட்கள் பிரதானமாக மனிதனின் செயற்பாடுகளினாலேயே வளிமண்டலத்தில் கலக்கின்றன. இவ் ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக குளோரோ புளோரா காபன் (ஊகுஊ ஊhடழசழ கடழசழ உயசடியn), கார்பன் தெட்ராகுளோரைட் (ஊயசடிழn வுhநவசயஉhடழசவைந), ஐதரோ குளோரோ புளோரோ காபன் (ர்ஊகுஊ), மற்றும் மெதில் புரோமைட் (ஆநவாடை டீசழஅவைந), போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்குப் பொறுப்பாய் உள்ளன.
ஓசோன் தேய்வானது அதற்கு சேதம் விளைவிக்கும் பொருட்களால் வெளியேற்றப்படும் (ழுனுளு ழுணழநெ னுநிடநவiபெ ளுரடிளவயnஉநள) பிரதேசத்திற்கோ அல்லது குறிப்பிட்ட இடத்திற்கோ சேதத்தினை ஏற்படுத்துவதில்லை. உலகின் அனைத்து மக்களுமே அதன் தாக்கத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. மானிடக் காரணிகள் (யுவொசழிழபநniஉ) மூலம் வெளிவிடப்படும் பொருட்கள் ஓசோனின் அழிவைத் துரிதப்படுத்தி, இயற்கை சமநிலை குலைகின்றது.
இவ் ஓசோன் படையின் அழிவுக்கான காரணங்களுள் நாம் அன்றாடம் பாவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் புகை ஓசோன் மண்டலத்தில் ஒரு படையாகப் படிந்து தாக்கம் புரிகின்றது. அத்துடன் குளிர்சாதனப்பெட்டிகள், குளிரூட்டிகள் என்பனவற்றில் இருந்து வெளியேறும் ஊகுஊ இதற்குப் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றது. வர்ணப் பூச்சுக்கள், இலத்திரனியல் கைத்தொழில்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்கள், துப்பரவாக்கல் செயன்முறைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு திரவம், ஐரோப்பிய நாடுகளில் கோதுமைத் தானியத்திற்கு தெளிக்கப்படும் பூச்சி நாசினிகள், அதிவேக விமானங்கள், அணுப் பரிசோதனை போன்றவை ஓசோன் படலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இதனை விட ஏனைய வாயுக்களும் இதில் பங்களிப்புச் செய்கின்றது.