இதழ் 35

சர்வதேச ஓசோன் படலத்தின் பாதிப்பு மனித குலத்திற்கான சிவப்பு எச்சரிக்கை -02

ஹொலோன், மெத்தில் புரொமைஸ், காபன் மெற்றா குளோரைட், மெத்தில் குளோரோ போம் என்பனவும் ஹைரோகாபன்களாகும். அவற்றின் அழிவுகளின் மூலம் கிளோரித், பிரோமித் போன்ற ஹெசவின் பிரிவொன்றும் உருவாகும். இவை மண்ணிலிருந்தும் கடல், நீராவி என்பவற்றில் இருந்தும் வெளிப்படுகின்றது. இது தவிர இயற்கையாக எரிமலைகள், பருவமாற்றங்கள், சூரியவட்டம், காற்றின் வேகம் இவற்றினாலும் ஓசோன்படை பாதிப்படைவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கைத்தொழில் பேட்டைகளில் இருந்து உருவாகும் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களாக குளோரோ புளோரா காபன், மெதேன், நைதரசன் ஒக்சைட் போன்ற வாயுக்கள் 100 – 125 ஆண்டுகள் வரை வளிமண்டலத்தில் நிலைத்திருக்கும் தன்மை வாய்ந்தன.

எனவே, இவை படிப்படியாக ஓசோன் படலத்தில் உள்ள ஓசோன் மூலக்கூறுகளுடன் தாக்கமடைந்து சுயாதீன ஒட்சிசன் மூலக்கூறுகளை உருவாக்கி ஒட்சிசன் படலத்ததைப் பிரிகையடையச் செய்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

கீழ் வளிமண்டலத்தில் இப் பொருட்கள் எமது சுற்றாடலுக்கு எது வித தாக்கங்களையும் ஏற்படுத்தாது. எனவே கைத்தொழிலுக்காக இவற்றின் பாவிப்பு அதிகளவாகக் காணப்படுகின்றது. எனினும் இவை சுற்றாடலில் கலந்ததன் பின்பு கீழ் வளிமண்டலத்தில் உள்ள ஏனைய வாயுக்களும் தாக்கங்களை ஏற்படுத்தாது. படிப்படியாக மேல் வளிமண்டலம் வரை இந்த வாயு, அதிகளவான சக்தியினை சூரிய ஒளிக்கதிர்கள் ருஏ (ருடவசய ஏழைடநவ) உடன் ஒன்றிணைந்து கிளோரின் அல்லது பிராமிக்த் ஹெலயிட் ஓசோனுடன் செயற்பட்டு கிளோரின் அல்லது பிரோமின் மொனோ ஒக்சைட்டின் உற்பத்தி செய்யும்.

இங்ஙனமாக உற்பத்தியாகும் அணுக்கள் மீண்டும் சிதறி ஹெலயிட் அணுவினை அழிக்கும். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறும். இதன் மூலம் தொடர்ச்சியாக ஓசோன் அணுக்கள் அழிக்கப்படும் என விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் பிரகாரம் கண்டறிந்துள்ளனர். ஒரு கிளோரிக் அணுவிற்கு ஒரு மில்லியன் ஓசோன் அணுக்கள் குறைவதினால் ஓசோன் படலத்தின் தடிப்புக் குறையும். எனவே, இங்ஙனம் ஓசோன் படலத்தின் தடிப்பு குறைதலை ஓசோன் துவாரம் என அழைப்பார்கள். ஓசோன் துவாரத்திற்கான காரணத்தை ஆராய்ந்து முன்மொழிந்தவர் அமெரிக்க இரசாயனவியலாளரான சேர்.வூட்ரவ்லண்ட் என்பவராவார்.

ஓசோன் துவாரத்தின் தற்போதைய நிலையினை ஆய்வாளர்கள் செயற்கைக் கோளின் துணையுடன் ஆராய்ந்து வருகின்றனர். அந்தாட்டிக்காவில் ஓசோன் துவாரத்தின் பரப்பு 1980 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்பட்டுள்ளது. ஓசோன் துவாரத்தின் பரப்பு ஆகஸ்ட் மாதத்தில் 10 மில்லியன் ச.கி.மீ அளவில் ஆரம்பித்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிக அளவிற்கு விரிவடைந்து நவம்பர் மாத இறுதியில் குறைய ஆரம்பித்து, டிசம்பர் முதல் வாரத்தில் ஓசோன் துவாரம் முழுமையாக மறைந்து விடுகின்றது. கடந்த பத்தாண்டுகளில் ஓசோன் துவாரத்தின் பரப்பு அதிகபட்ச நிலையில் 25 மில்லியன் ச.கி.மீ ஆக இருந்த நிலைமாறி, 2000 ஆம் ஆண்டில் 28.3 மில்லியன் ச.கி.மீ ஆக அதிகரித்திருந்தது. இந்த பரப்பளவு அவுஸ்ரேலியாவின் பரப்பளவினை போல் மூன்று மடங்காகும். ஆனால் 2002 ஆம் ஆண்டில் இதன் பரப்பளவு வெகுவாகக் குறைந்து 15 மில்லியன் ச.கி.மீ ஆக இருந்தது. இது கடந்த இருபது ஆண்டுகளில் மிகக் குறைந்த பரப்பளவு கொண்ட ஓசோன் துவாரம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஓசோனில் ஏற்பட்டுள்ள துவாரத் தினால் உயிர்ச்சூழலுக்கு பொருத்த மற்ற ஒளிக்கதிர்கள் புவியை வந்தடைகின்றன. இதனால், மனிதனுக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றது. அதாவது, தோல்ப்புற்று நோய், கண்களில் வெள்ளை உண்டாதல், அதன் மூலம் கண்பார்வை அற்றுப்போதல், மனிதனின் நோய்த் தடுப்பு முறைகளில் தாக்கங்கள் ஏற்படுதல், நோய்த்தடுப்பு, உடல் சக்தி குறைதல் போன்றவையாகும்.
இதனைவிட தாவரங்களின் வளர்ச்சி குன்றுதல், அவற்றின் பலாபலன்கள் குறைதல், மீன் இனம், ஊர்வன ஆகியவற்றின் முட்டைகள் மிக விரைவாக அழிவடைதல், ருஏ கதிர்களின் வீச்சினால் அப்பகுதிகளில் உள்ள மீனின் உணவுகளான பிளான்டன்கள் அழிவடைதல் ஆகியவைகளினால் கடலில் பிடிக்கப்படும் மீன்களின் வளம் குறைவடைந்துள்ளது.

ஊகுஊ வாயுவும், காபன்டை ஒட்சையிட் வாயுவும் அதிகளவான சக்தியினை கொண்டவையாகும். இந்த வாயுவின் முக்கிய தொழிற்பாடு வெப்பத்தினை சீராக வைத்திருத்தலாகும். இவ்வகையான வாயு ஒன்று பாச்சப்படுதலின் காரணமாக வளிமண்டலத்தின் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் முனைவுப் பனிப்படலங்கள் உருகி, கடல் மட்டம் உயர்வடைந்துள்ளது. காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்ஙனமாக ஒன்றொடொன்று தொடர்புடைய சுற்றாடல் பிரச்சினைகள் அதிகளவு ஓசோன் படையின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ளது. எவ்விதத்திலும் ஓசோன் படலத்தின் சிதைவின் இறுதிப் பிரதிபலன் பூமியில் வாழும் சகல உயிரினங்களினதும் அழிவாகும்.
ஓசோன் படையானது புவியிற்கும் அதன் உயிரியல் முறைமைக்கும் பாதுகாப்புக் கவசமாகத் தொழிற்படுகின்றது. ஓசோன் வாயுவிற்கு பங்கம் ஏற்படுத்தும் பொருட்களைப் பாவனையில் இருந்து நீக்கிவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, குளிரூட்கள், கொலோன் உற்பத்திக்கு ஊகுஊ க்கு பதிலாக மாற்றுப் பொருட்களாக ஓசோன் விரும்பத்தக்க ர்குஊ (ஹய்ரோ புளோரோக் காபன்), வகைகளைப் பாவித்தல். தெளிபொருளாக ஹய்ரோ காபன் பாவித்தல், கமத்தொழிலுக்கு பாவிக்கப்படும் மெத்தில் போமலிங் பதிலாக வேறு பாவனைகளை மேற்கொள்ளுதல். தீயணைக்கும் கருவிகளில் பயன்படுத்தப்படும் காபன்டைன் ஒட்சைட் போன்ற மாற்றுப் பொருட்களைப் பாவித்தல், வளர்முக நாடுகளில் வெளியேற்றப்படும் ஊகுஊ உள்ளடங்கலான பொருட்களை இறக்குமதி செய்வதை தடுப்பதற்காக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளல் போன்றன இன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆய்வு தொடரும்

Related posts

ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம்….!

Thumi202121

முருகனடி சேர்ந்தார் நல்லூரான்!

Thumi202121

பொக்கைவாய்ப் பற்கள்

Thumi202121

Leave a Comment