இதழ் 35

முருகனடி சேர்ந்தார் நல்லூரான்!

அண்மையில் முருகனடி சேர்ந்துள்ள நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் ஆத்மாவிற்கு துமி தனது புகழ் வணக்கங்களை காணிக்கையாக்குகின்றது.

சமயம் கூறும் அடிப்படை தத்துவமாகிய சமத்துவத்தை நல்லூர் ஆலயத்தில் நிலைக்க வைத்தார். வரலாற்றில் நிலைத்திருக்கும் தென்னாசிய பிராந்திய வல்லரசாகிய இந்திய பிரதமரின் யாழ்ப்பாணம் விஜயத்தின் போது ஆடையுடன் ஆலயத்தினுள் செல்ல நல்லூர் நிர்வாகம் மறுத்தமையால் பாரத பிரதமரின் நிகழ்ச்சி நிரலே மாற்றப்பட்டது. ஆண்டியாயினும் அரசனாகியினும் முருகப்பெருமான் முன்னே சமமென உறுதியான கொள்கையை இறுக பற்றினார்

மேலும் நேரம் தவறாமையை உலக மாந்தர்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட்டார். இங்கு பலரும் காரணங்களை நிரல்படுத்தி நேரந்தவறுகிறமையை வழக்கமாக்கி வைத்திருக்கையில் இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் நேரந்தவறாமை பலருக்கு முன்னுதாரணமே ஆகும். குறிப்பாக இலங்கையின் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி ஒருவர் காலை பூசையின் பின்னர் வந்து ஆலயத்தை திறக்க பணித்த போது மறுத்தமை அவரின் தனித்துவத்தை அடையாளப்படுத்தியது.

அது மட்டுமன்றி யாழ்ப்பாண மாநகரசபையின் இருப்பிற்கு இலவசமாக காணி வழங்கியதனூடாக அரச நிர்வாகத்துக்கான சமய நிறுவன ஒத்துழைப்பின் அவசியப்பாட்டையும் உறுதி செய்துள்ளார்.

நல்லூர் இன்று யாழின் அடையாளமாகியுள்ளது. அவ் அடையாளத்தினூடாக எம் சமூக பழக்கத்தை பறைசாற்றியமை அவரது புகழையும் நிலைப்படுத்தியுள்ளது. இப்புகழின் தொடர்ச்சியை மேலும் வலுப்படுத்தி சமூகத்தின் தேவைளை அறிந்து பயணிக்கும் நிறுவனமாக நல்லூரை புதிய நிர்வாம் பதிவு செய்யும் என்ற நம்பிக்கையில் புதியவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் துமி பரிமாறி கொள்கிறது.

Related posts

குரும்பைகள் உதிரலாமா?

Thumi202121

துமியார் பதில்கள் – 01

Thumi202121

கிராமத்து இளைஞர்கள்

Thumi202121

Leave a Comment