ஐபில் 2021 நிறைவடைந்த நிலையில் அதிக ரன்கள் எடுத்தவர் மற்றும் அதிக விக்கெட்கள் அடுத்தவர் களுக்கு செம்மஞ்சள் மற்றும் ஊதா நிற தொப்பிகள் வழங்கப்படும் அத்துடன் Most Valuable Player உம் தெரிவு செய்யப்படுவர். இம் முறை அதிக ரன்கள் எடுத்தவருக்கான செம்மஞ்சள் நிற தொப்பி, சென்னை சூப்பர் கிங்ஸ் இன் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ருதுராஜ் கைக்வாட் க்கும்; அதிக விக்கெட்கள் எடுத்தவருக்கான ஊதா நிற தொப்பி மற்றும் Most Valuable Player (MVP) க்கான விருதும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் வீரரான ஹர்ஷல் படேல் க்கு கிடைத்தது.

பிரபலமான ESPNcricinfo இணையதளம் Smart Stats எனும் புள்ளிவிபரத்தை கடந்த சில வருடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரியும் எடுக்கப்படுகின்ற ரன்களுக்கும் வீழ்த்தப்படுகிற விக்கெட்களுக்கும் ஆன பெறுமதி, அவை எடுக்கப்பட்ட அல்லது வீழ்த்தப்பட்ட தருணங்களுக்கு (சூழ்நிலைகளுக்கு) ஏற்ப மாறுபடும். உதாரணமாக பலம் வாய்ந்த எதிரணிக்கு எதிராக எடுக்கும் ரன்கள் மற்றும் விராட் கோஹ்லி போன்ற தரமான துடுப்பாட்ட வீரனை ஆட்டமிழக்க செய்வதட்கும் கடைநிலை வீரர்களை ஆட்டமிழக்க செய்வதட்கும் உள்ள வேறுபாடு. எனவே ஸ்மார்ட் புள்ளிவிபரங்கள்: ஒவ்வொரு துடுப்பாட்ட/ பந்துவீச்சு பெறுதிக்கும் உண்மையான பெறுமதியை வழங்குகிறது. இந்த புதிய அளவீடுகள் என்ன? – ஸ்மார்ட் ரன்கள் (Smart runs) – ஸ்மார்ட் விக்கெட்டுகள் (Smart rickets) – ஸ்மார்ட் ஸ்ட்ரைக் ரேட் (Smart strike rate) – ஸ்மார்ட் எக்கோணமி ரேட் (Smart economy rate) – புத்திசாலித்தனமான பங்களிப்பு (Smart contribution) – ஸ்மார்ட் பிளேயர் தரம் (Smart Player quality) ஸ்மார்ட் ரன்கள் என்பது ரன்கள் எடுக்கப்பட்ட சூழலை கணக்கில் எடுத்துக் கொண்டு கணிக்கப்பட்டது; எனவே, 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தால், இன்னிங்ஸ் எப்போது விளையாடப்பட்டது மற்றும் ரன்களின் ஒப்பீட்டு மதிப்பைப் பொறுத்து அது 50 அல்லது 40 ரன்களாக இருக்கலாம். ஸ்மார்ட் விக்கெட்கள் என்பது எடுக்கப்பட்ட விக்கெட்டுகளின் உண்மையான மதிப்பு; துடுப்பாட்ட வீரரின் தரம், துடுப்பாட்ட வீரர் எப்போது ஆட்டமிழந்தது – அவரது இன்னிங்ஸின் ஆரம்பத்திலா அல்லது இறுதியிலா – மற்றும் ஆட்டமிழக்கும் போது ஆட்டமானது சமநிலையில் இருந்ததா அல்லது முடிவு முன்கூட்டியே முடிந்து இருந்ததா என்பதைப் பொறுத்து அப்போதைய போட்டி சூழல் கணக்கிடப்படுகிறது. ஸ்மார்ட் ரன்கள், ஸ்மார்ட் ஸ்ட்ரைக்-ரேட், ஸ்மார்ட் விக்கெட்கள் மற்றும் ஸ்மார்ட் எகானமி ரேட் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சு செயற்பாடுகளும் தாக்க (Impact) மதிப்பெண்ணை பெறுகிறது. ஒரு வீரர் போட்டியில் ஏற்படுத்திய தாக்கம் என்பது அவரது துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஏற்படுத்திய தாக்கத்தின் (Impact) எண்ணிக்கையாகும்.

இதன்படி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக விளையாடிய அவுஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல் மிகவும் பெறுமதியான வீரராக (Most Valuable Player) ESPNcricinfoவின் புள்ளிவிபர குழுவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதில் இரண்டாம் நிலையை பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவரான இந்திய வீரர் கே எல் ராகுலும் மூன்றாம் நிலையை சன்ரைசேர்ஸ் ஐராபாத் அணிக்காக விளையாடிய முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஆப்கானின் ராஷித் கான் உம் பிடித்துள்ளார்கள். மக்ஸ்வெல் பெற்ற 513 ரன்கள், உண்மையில் 624 ரன்களுக்கு சமமானவை. ஏனெனில் கடினமான ஆடுதளங்களிலும் சூழ்நிலைகளிலும் பெற்றப்பட்டவை. அதிகமான வீரர்கள் சென்னை மற்றும் சார்ஜா மைதானங்களில் ரன்கள் எடுக்க கடினப்பட்ட போது அவற்றில் மக்ஸ்வெலின் ஸ்ட்ரிக்கே ரேட் முறையே 149.15 மற்றும் 138 .33 ஆகும். ஸ்மார்ட் விக்கெட்ஸ் அடிப்படையில் ESPNcricinfoவின் ஊதா நிற தொப்பியை அதிக விக்கட்கள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாம் நிலையில் இருந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் அவேஷ் கான் பெற்றுள்ளார். அவேஷ் கான் வீழ்த்திய 24 விக்கெட்கள் 31.15 விக்கெட்களுக்கு சமமானவை. அதேவேளை அதிக விக்கெட்கள் எடுத்த ஹர்ஷல் படேலின் 32 விக்கெட்கள் ஸ்மார்ட் புள்ளிவிபரத்தில் 30.7 விக்கெட்களுக்கே சமமானவை ஆகும். ஐபில் 2021 இன் சிறப்பான போட்டி செயற்பாடாக கிரண் பொல்லார்ட் இன் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக 12 ரன்களுக்கு இரு விக்கெட்களையும் வீழ்த்தி 34 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தது முதலிடத்தை பிடித்துள்ளது.
