இதழ் 35

நம்பினால் நம்பியும் அறிவாளி

தன் முயற்சியில் சற்றும் தளராத “உஜ்ஐஜினி” நாட்டு மன்னன் “விக்ரமாதித்தன்”, முருங்கை மரத்திலிருந்த வேதாளத்தை இறக்கி தன் முதுகில் சுமந்து வந்து கொண்டிருந்த போது அவ்வேதாளம் விக்ரமாதித்தனிடம் தான் ஒரு கதையைக் கூறப் போவதாகவும், அதற்கான சரியான விடையை விக்ரமாதித்தன் கூறவேண்டும் என்றும் அவ்வாறு கூறாதவிடத்து தலை வெடித்து சுக்குநூறாகிவிடும் என்று கூறி கதை சொல்ல ஆரம்பித்தது.

ஒரு ஊரில் சரண்யன் என்ற மிகப்பெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தார். நீண்ட நாட்களாக பிள்ளைப்பேறில்லாமல் தவித்து வந்த அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அக்குழந்தைக்கு நம்பி என்று பெயர் சூட்டி போற்றி வளர்த்தார். பிறப்பிலிருந்தே சற்று மந்தப் புத்தி கொண்ட நம்பியை கல்வி கற்க அவ்வூரிலுள்ள ஒரு குருகுலத்தில் சேர்த்தார். அங்கு சேர்ந்து கல்வி பயின்றும் அவன் சிந்தனைத்திறனில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இதனால் கவலையடைந்த சரண்யன் தன் மகன் நம்பியை ஒரு ஜோதிடரிடம் அழைத்துச் சென்றார்.

நம்பியின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர் ஒருவர் “நம்பிக்கு கிரக நிலைகள் எதுவும் சரியில்லை, எனவே அவன் வித்யாவனம் எனும் ஊருக்குச் சென்று, அங்கு ஞானேந்திரர் என்பவர் குருகுலத்தில் சேர்ந்து கல்வி பயின்றால், இவன் சில காலத்திற்குப் பின் அறிவிற் சிறந்த மாணவனாக மாறுவான்” எனக் கூறினார். இதைக் கேட்ட சரண்யன், வித்யாவனம் சென்று அங்கு ஞானேந்திரரின் குருகுலத்தில் தன் மகனைச் சேர்த்தார். நம்பியின் கல்வி முனேற்றத்தைப் பற்றி அவ்வப்போது தன்னிடம் வந்து ஆலோசித்து செல்லுமாறு ஞானேந்திரர் நம்பியின் தந்தை சரண்யனிடம் கூறினார்.

இக்குருகுலத்தில் சேர்ந்த பின்பும் நம்பியின் மந்தப் புத்தி மாறவில்லை. அப்போது அக்குருகுலத்தில் பக்கத்து ஊரைச் சேர்ந்த “சுகுமாரன்” என்ற விவசாயியின் மகன் கல்வி கற்க சேர்ந்தான். அவனின் சிறந்த கல்வியாற்றலால் அக்குருகுலத்தின் சிறந்த மாணவன் என அனைவராலும் பாராட்டப்பட்டான். இதைக் கண்ட நம்பி சுகுமாரனுடன் நட்புக் கொள்ள எண்ணினான். ஆனால் சுகுமாரன் அவனிடமிருந்து விலகிச் சென்றான். அப்போது சுகுமாரனுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. தன் தந்தைக்கு கடன் சுமை அதிகமாகிவிட்டதாகவும், அவர் கடனடைக்க அவருக்கு உதவுவதற்காக தன் கல்வியை நிறுத்திவிட இருப்பதாக தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு தன் மகன் நம்பியைக் காண வந்த சரண்யனிடம், நம்பி இவ்விசயத்தைப் பற்றிக் கூறினான், இதை கேட்ட சரண்யன், சுகுமாரனைத் தன் மகன் போல் எண்ணுவதாகவும், அவன் கடன் பிரச்னையை தாம் தீர்ப்பதாகவும் கூறினார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த சுகுமாரன், நம்பிக்கும் அவன் தந்தைக்கும் நன்றி கூறினான். மேலும் இனி நம்பி அறிவாற்றலிலும், கல்வியிலும் சிறந்து விளங்க தான் உதவுவதாக நம்பிக்கு உறுதியளித்தான். சுகுமாரன் கூறிய படியே நம்பிக்கு கல்வியில் உதவியதால், நம்பியும் சில காலத்திலேயே அறிவிற்ச் சிறந்த மாணவனாக மாறினான். இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த குரு ஞானேந்திரர் நம்பியின் அறிவாற்றலை சோதிக்க எண்ணி நம்பியை அழைத்து புதிரொன்றைத் தொடுத்தார்.

மேலுள்ள படத்தில் 18குச்சிகளைப் பயன்படுத்தி முக்கோணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஐந்து முக்கோணங்கள் இருக்கும் வகையில் நான்கு குச்சிகளை அகற்ற வேண்டும்.

குருவின் கேள்விக்கு சரியான பதிழித்த நம்பியை பாராட்டி “என்னால் செய்ய முடியாததை உன்னால் மட்டும் எப்படி சாதிக்க முடிந்தது?” என்று சுகுமாரனிடம் கேட்டார். அதற்கு அவன் “மற்றவர் நம்பியை முட்டாள் என்று கேலி மட்டுமே செய்ததாகவும், ஆனால் தான் நம்பியிடம் அவன் ஒரு சிறந்த அறிவாளி என்று பாராட்டி ஊக்கப்படுத்தியதால், அவனே உற்சாகத்துடன் கல்வி பயில ஆரம்பித்து சிறந்த மாணவனாக மாறியதாக” சுகுமாரன் கூறினான். இதைக் கேட்டு மகிழ்ந்த ஞானேந்திரர் “இதைப் பற்றி நம்பியின் தந்தை கேள்விப்பட்டால் அவர் மிகவும் மகிழ்ந்து உனக்கு மேலும் பல உதவிகள் செய்வார்” என்று கூறினார். தனக்கு மேற்கொண்டு உதவிகள் எதுவும் தேவையில்லை என்றும், நம்பியின் தந்தை தன் தந்தைக்கு செய்த உதவிக்கு இதைக் கைமாறாக கருதுவதாக கூறினான்.

இவ்விடத்தில் கதை கூறுவதை நிறுத்தி, விக்ரமாதித்தன் முதுகில் அமர்ந்திருந்த வேதாளம், “நம்பி குருவின் புதிருக்கு என்ன பதில் கூறியிருப்பான்?” என்று விக்ரமாதித்தனிடம் கேள்வி கேட்டது.

சற்று நேரத்தில் யோசிக்க தொடங்கினான் விக்ரமாதித்தன். துமி அன்பர்களே பதிலைக் கண்டுபிடிக்க நீங்களும் மன்னருக்கு உதவிடுங்கள். உமது பதிலை எமக்கு அனுப்பி வையுங்கள்.

Related posts

பொக்கைவாய்ப் பற்கள்

Thumi202121

கிராமத்து இளைஞர்கள்

Thumi202121

முருகையனின் கவிதைகளில் மனிதநேயம்

Thumi202121

Leave a Comment