தன்னை காட்டின் வழியே சுமந்து சென்ற விக்கிரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல தொடங்கியது.
‘இரத்தினபுரி” என்ற ஊரில் ஒரு முனிவரின் சாபத்தால் சில நேரம் பாம்பாகவும் சில நேரம் மனிதனாகவும் இருக்கும் ஒரு இளைஞன் வாழ்ந்து வந்தான். அவ்வூரின் காட்டை ஒட்டிய பகுதியில் வாழ்ந்து வந்த அவன், அந்த ஊரின் ஒரு இளம் பெண்ணை மிகவும் விரும்பி அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டான். ஆனால் இவனின் இந்த சாபத்தைப் பற்றி அறிந்த அந்த பெண்ணும் இவனை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாள். இதனால் கவலையடைந்த அவன் ஒரு துறவியிடம் சென்று தன் நிலையைக் கூறி வருந்தினான். அதற்கு அந்த துறவி
‘நீ நாகமனிதனாக இருப்பதால் உனக்குள் நாகமாணிக்கம் இருப்பதாகவும் அதை தனியாக எடுத்து வைத்துவிட்டு தினமும் இரவு நேரத்தில் தவமிருந்தால் நீ மீண்டும் முழுமையான மனிதனாக மாற வாய்ப்பிருப்புள்ளது”
எனக் கூறினார். அதன் படியே அந்த நாகமனிதனும் செய்து வந்தான். அப்போது ஒரு நாள் தனது மாட்டை தேடிவந்த ரங்கன் என்ற இளைஞன், காட்டு விலங்குகள் துரத்தியதால் இந்த நாக மனிதன் வசித்த புற்றிற்கு அருகிலுள்ள மரத்தில் ஏறிகொண்டன். இரவு முழுவதும் அந்த மரத்திலேயே இருந்த அவன் அருகிலுள்ள புற்றிலிருந்து ஒரு நாகம் வெளிவருவதைக் கண்டான். அந்த நாகம் ஒரு நாகரத்தினத்தை வெளியே கக்கிவிட்டு, ஒரு மனிதனாக மாறி தியானத்தில் ஈடுபடுவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். பொழுது விடியும் போது அந்த நாகமனிதன் மீண்டும் நாகமாக மாறி, தனது இரத்தினத்தை விழுங்கிக்கொண்டு மீண்டும் புற்றிற்குள் சென்று மறைந்ததை ரங்கன் கண்டான்.
மறுநாள் இதைப்பற்றி தனது நண்பன் கண்ணனிடம் கூறினான் ரங்கன். அதற்கு கண்ணன், நாகரத்தினம் மிகவும் சக்திவாய்ந்தது, எனவே இன்றிரவு அந்த நாகமனிதனிடமிருந்து நாம் நாகரத்தினத்தை எடுத்துக் கொள்வோம் என்று கூறினான். ரங்கனுக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் கண்ணனுடன் துணைக்கு சென்றான். இருவரும் அந்த நாகமனிதன் இருக்கும் புற்றிற்கு அருகில் ஒளிந்துகொண்டு காத்திருந்தனர். வழக்கம் போல் அந்த நாகமனிதன் தனது நாகரத்தினத்தை வெளியே வைத்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்த போது ரங்கனின் நண்பனான கண்ணன், அந்த இரத்தினத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். தியானம் களைந்து பார்த்த நாகமனிதன், தனது நாகரத்தினம் திருடப்பட்டதால் தான் முழுமையாக மனிதனாகும் தனது இலட்சியம் தடைபட்டதை எண்ணி வருந்தினான்.
இதற்கிடையே அந்த இரத்தினத்தை எடுத்துக்கொண்டு சென்ற கண்ணன் என்றும் இல்லாதபடி தனக்குள் ஏதோ மாற்றங்கள் இருப்பதை உணர்ந்தான். நல்ல குணங்கள் அவனிடம் மேலோங்கி காணப்பட்டதுடன் மந்தமான அறிவாற்றல் உள்ள அவனுக்கு புத்திக்கூர்மை அதிகரித்துள்ளதாகவும் உணர்ந் தான். இதனை சோதித்துப் பார்க்க எண்ணி ஒரு அறிஞனிடம் சென்று தனது புத்திக்கூர்மையை பரிசோதிக்கும்படி வேண்டி நின்றான். அவரும் அவனிடமொரு கேள்வி கேட்டார்.
நீங்கள் ஒரு வேலியை அமைப்பதன் மூலம் மேலே உள்ள நிலத்தை இரண்டு சம நிலங்களாக பிரிக்க வேண்டும். ஒவ்வொன்றும் சம ஏக்கர் மற்றும் ஒரே வடிவம் இரண்டையும் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு இந் நிலத்தைப் பிரிக்க வேலி எங்கு அமைக்கப்பட வேண்டும் என்று கண்டுபிடிக்க முடியுமா? மூன்று நிமிடங்களில் நீங்கள் இதனை தீர்க்க வேண்டும். கண்ணனுக்கோ அது மிகவும் இலகுவாக இருந்தது சிறிது வினாடிகளிலே சரியான பதிலை அளித்தான்.
நாகரத்தினத்தின் சிறப்பை உணர்ந்த அவன் அதை நல்ல முறையில் பாவிக்க எண்ணினான். பக்கத்து ஊரில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களை, அந்த இரத்தினத்தைக் கொண்டு குணப்படுத்தினான். அதே நேரத்தில் அந்த நாகமனிதனும் சாப விமோச்சனம் பெற்று மனித உருவம் கொண்டான்.
விக்ரமாதித்தனே இது உங்களுடைய நேரம் கண்ணனின் பதில் என்னவாக இருந்திருக்கும் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். பதிலளிக்காவிடின் உமது தலை சுக்கு நூறாக சிதறும் என கூறி அமைதி கொண்டது வேதாளம்.
துமி அன்பர்களே விக்ரமாதித்தனுக்கு உதவ உங்கள் பதிலை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.