இதழ் 36

நஞ்சுணவும் இயற்கை முறை விவசாயமும்

அறிமுகம்

இந்தப் பூமியிலே உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு உணவு மிக அவசியம். ஆனால் அந்த உணவின் தன்மை என்பது இன்று எந்த நிலையில் இருக்கின்றது என்பது தொடர்பில் யாரும் சிந்திக்கவில்லை.மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் ஆரம்பத்தில் மனிதன் தனக்கு தேவையான உணவை தானே உற்பத்தி செய்தான். விவசாயத்தை முழுமையாக நம்பி வாழ்ந்தான். அதன் பின்னர் விவசாயம் மக்களுடன் ஒருமித்ததாக காணப்பட்டது. ஆனால் இந்த விவசாயத்திற்கு என்ன தான் தற்போது நடந்தது. நாம் உட்கொள்ளும் மரக்கறிகள்இ பழங்கள், தானியங்கள் எல்லாம் விஷங்களால் மறைக்கப்பட்டு அதனை நாம் விலை கொடுத்து வாங்கி உண்கின்றோம். இதனால் சிறுநீரகம், நுரையீரல், தோல் சார்ந்த நோய் நிலைமைகள் அதிகமாக ஏற்படுகின்றன.

ஆரம்பகால விவசாயம்

ஆரம்பத்தில் மனிதன் தனக்கு தேவையான அல்லது தனது சமூகத்திற்கு தேவையான உணவை தானே உற்பத்தி செய்தான். அதற்கு இயற்கை உரமாக, குப்பைகள்இ கோமாதாவின் கழிவுகள், மண் புழுக்கள் ஆகியவற்றை பயன்படுத்தினான்.பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதற்கு வேம்பின் பகுதிகள், சாம்பல் போன்றவற்றை பயன்படுத்தினான். அப்போது உண வில் நஞ்சு இருக்கவில்லை. அது போன்று அதிகமாக தானியங்கள், கீரைகளை உற்பத்தி செய்தான். இவ்வாறு சிறந்த உணவுகளை உட்கொண்ட எமது முன்னோர்கள் இன்றும் 70 வயதைத் தாண்டியும் அவர்கள் நிமிர்ந்த நடையுடன் வாழ்ந்து வருகின்றனர்.வீட்டின் வளவில் தமது அன்றாட உணவுத் தேவைக்காகவும், ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழிப்பதற்கும் வீட்டுத் தோட்டம் செய்தார்கள். ஆனால் இன்று?

தற்போதைய விவசாயம்

இயற்கை முறை விவசாயத்தை கைவிட்ட மனித இனம் தற்போது நஞ்சு உணவை விலை கொடுத்து வாங்கி உண்டு வருகின்றது. வீட்டுத் தோட்டம் செய்வதற்கு நேரம் இல்லை.பணம் பணம் என்று ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கும் மனிதன் தான் என்ன உணவை உண்கின்றான் என்று கூடத் தெரியவில்லை. செயற்கை உரம், கிருமி நாசினிகளை அளவுக்கு அதிமாக பயன்படுத்தி அதிகரித்த மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்த உற்பத்தியை மேற்கொள்ளும் நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் மித மிஞ்சிய உரம் மற்றும் கிருமி நாசினிப் பாவனையால் உற்பத்திப் பொருட்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும். ஆனால் அதனை உண்டால் நாளடைவில் எமது உடல் நஞ்சுணவால் பாதிக்கப்பட்டு நோய்களுக்கு உள்ளாகி இறந்து விடுவோம் என்று நாம் சிந்திப்பதில்லை.

எமது உணவு எங்கே?

அதிக விளைச்சலையும் பளபளப் பையும் பெறுவதற்கான பல்வேறு பயிர் இனங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உதார ணமாக சொல்வதானால் விதை அற்ற பெரிய அளவினை கொண்ட சுவை குறைந்த பப்பாளிப்பழங்கள், ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட ரொம் இ.ஜெசி மாம்பழ இனங்கள் மற்றும் விதை அற்ற திராட்சை பழங்கள், நீளமான கத்தரிக்காய் போன்றன சந்தைக்கு வந்துள்ளன. இவற்றின் வருகை ஏற்றுமதியைப் பொறுத்த வரையில் அதிக வருவாயைத் தந்துள்ளது.ஆனால் எமது இனிப்பான கறுத்த கொழும்பான் மாம்பழம், இனிப்பான சத்துள்ள பப்பாளிப்பழம் இவ்வாறு பல உணவுகளை நாம் மறந்து போய்விட்டோம். அதற்கு பதிலாக பார்வைக்கு கவர்ச்சியாக தோன்றும் மருந்து விசிறப்பட்ட பழங்களையும், மரக்கறிகளை நாம் கொள்வனவு செய்து எமது உடலை நஞ்சுக்கு அடிமையாகத் தயார் செய்து கொண்டு இருக்கின்றோம்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

நமது விவசாய உற்பத்திகளில் அதிகளவு கிருமி நாசினிகள், இரசாயன உரங்கள் பயன்படு த்தப்பட்டு குறைந்த நிலப்பர ப்பில் கூடிய விளைச்சலை பெறுவதற்கு முயற்சிப்பதாலும், கிருமிநாசினி விசிறிய பின் அறுவடைக்கு இருக்கவேண்டிய இடைவெளிக் காலத்தை சரியாக கடைப்பிடிக்காமையினாலும் மரக் கறி வகைகளில் நச்சுத்தன்மை காணப்படுகின்றது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களை இயற்கை யான முறையில் உற்பத்தி செய்வதற்கு எம்மைத் தயார்ப்படுத்த வேண்டும். அதற்கு நாம் வீட்டுத் தோட்டம் ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்குச் செலவு என்பது இல்லை. எமது உடலும் ஆரோக்கியமாக இருக்கும் அதே வேளை சிறந்த பொழுது போக்காகவும் அமையும். செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இரசாயன கிருமிநாசினிகளின் பாவனையை தவிர்த்து இயற்கையான தாவர பீடை நாசினிகளை பயன்படுத்துவதன் மூலம் உணவுப்பொருட்களில் நஞ்சு கலப்பதை தவிர்த்துக் கொள்ளலாம்.

இயற்கை முறை விவசாயத்தில் தாவரப் பீடை நாசினி தயாரிப்பில் மாட்டுச்சலம், மாட்டுச்சாணம் பெரும் பங்கு வகிக்கின்றது. வேப்பம் மரத்தின் அனைத்துப் பகுதிகளும் கரைசலாக்கி பயன் படுத்துவதன் மூலம், பூண்டுக் கரைசல் தெளித்தல், சாம்பல் தெளித்தல் போன்ற விடயங்கள் தாவரத்துக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சத்தியை வழங்குகின்றது. வீட்டுத் தோட்டம் செய்வதற்கு முதல் மண்ணை பண்படுத்தும் போது வேப்பம் புண்ணாக்கையும் கலந்து பண் படுத்த வேண்டும்.
இயற்கைப் பசளை கிடைப்பதில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிப்பதாலும் கால்நடை வளர்ப் பையும் விவசாயத்தையும் ஒருங்கி ணைத்து செய்வதன் மூலம் இயற்கைப் பசளை பெரிய அளவில் கிடைப்பதுடன் தோட்டத்தில் கிடைக்கும் புற்கள், கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்த முடியும். அத்துடன் அசோலா இன பாசிகளை தொட்டிகளில் வளர்ப்பதன் மூலமும் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த முடியும்.

நாம் இரசாயனப் பசளைகள் பயன்படுத்துவதைக் குறைப்பதன் மூலம் எமது நீர் வளத்தையும் நிலவளத்தையும் பாதுகாக்கலாம். இயற்கை முறை விவசாயத்தை நாம் மேற்கொள்ளுவதால் நஞ்ச ற்ற உணவுகளை பெற்று கொள்ள முடியும். இயற்கை முறை விவசாயத்திற்கான உர தொட்டி அமைத்தல்இ கூட்டுப் பசளை தயாரித்தல், கால் நடை கொள்வனவு போன்றவற்றுக்கு மாவட்ட விவசா யத் திணைக்களங்களால் மானிய ங்கள், உதவித் திட்டங்கள் வழங்கப்படுகின்றது.

ஆகவே நஞ்சற்ற உணவுக்கு இயற்கை முறை விவசாயம் மிகவும் அவசியாமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Related posts

சித்திராங்கதா – 35

Thumi202121

நூலறுந்த பட்டம்…….

Thumi202121

குறுக்கெழுத்துப்போட்டி – 32

Thumi202121

Leave a Comment