இதழ் 36

கொண்டாடுவோம்!!! கொண்டாடச் செய்வோம்!!!

நவம்பர்-04ஆம் திகதி தீபங்கள் ஜொலிக்கும் தீபத்திருநாளை கொண்டாடும் துமி மின்னிதழ் வாசகருக்கு துமி மின்னிதழ் குழுமத்தின் சார்பாக தீபாவளி திருநாளை வாழ்த்திக்கொண்டே ஆசிரியர் பதிவுக்குள் நுழைகின்றோம்.

கொரோனா பேரவல செய்திகள் சற்றே குறைந்த திருப்தியில் மக்கள் திரளில் ஒரு தொகுதியினர் தம் பண்டிகைகளுக்கான ஏற்பாடுகளை செய்கையில், இலங்கைத்தீவில் ஏற்பட்டுவரும் விலை உயர்ச்சிகள் ஒரு தொகுதி மக்களின் மறுநாள் உணவை பற்றிய தேடல்களுடனேயே நகருகின்றது. பண்டிகைகளில் திளைக்க முற்படும் ஒரு திரள் மறுதிரள் மக்கள் கூட்டத்தின் பேரவலத்தையும் சற்று நிதானித்து சிந்தித்து செயற்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.

தாரளமய பொருளாதார கொள்கையின் கீழ் விலை உயர்ச்சிகள் அதிகம் நடுத்தர மற்றும் தினசரி கூலி தொழிலாளர்களின் வாழ்வையே சிதைக்கிறது. பணம் படைத்தோர் பொருட்களின் விலை உயர்ச்சியின் தாக்கங்களை அறியாதோராவே காணப்படுவர். இதுவே தாரளமய பொருளாதாரக் கொள்கை உருவாக்கியுள்ள சமச்சீரற்ற சமூகமாகும்.

பண்டிகைகள், விழாக்கள் நிச்சயம் கொண்டாடி தீர்க்கப்பட வேண்டியவை. ஆயினும் அவை தனித்து கொண்டாடுபவையும் அல்ல. ஒன்றாய் கூடி கொண்டாட வேண்டியவை ஆகும். எனவே பண்டிகைகளை கொண்டாட முயலும் ஒரு திரள், பண்டிகைகள் என்ற எண்ணங்களற்று தினசரி வாழ்வை நகர்த்த போராடும் மக்களையும் இணைத்து கூடி மகிழ்விலேயே பண்டிகை கொண்டாட்டங்களும் முழுமை பெறும். அதேநேரம் கொரோனா ஏற்படுத்தியுள்ள புதிய அதேநேரம் கொரோனா ஏற்படுத்தியுள்ள புதிய சுகாதார விதிமுறைகளையும் அனுசரிக்கையிலேயே பண்டிகை களும் மகிழ்வாக நிறைவுறும்.

எங்கும் பரவும் தீப ஒளி போல இன்பம் நிறையட்டும்!

Related posts

ஞாபகங்கள் மழையாகும்; ஞாபகங்கள் குடையாகும்

Thumi202121

சித்திராங்கதா – 35

Thumi202121

விநோத உலகம் – 02

Thumi202121

Leave a Comment