இதழ் 36

சர்வதேச ஓசோன் படலத்தின் பாதிப்பு மனித குலத்திற்கான சிவப்பு எச்சரிக்கை -03

ஓசோன் படையின் பாதுகாப்புத் தொடர்பாக 1976 இல் ஐ.நாவின் சூழல் திட்ட கூட்டத்தில் ஆராயப்பட்டது. 1977 இல் இது குறித்து வல்லுனர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஓசோன் படலப் பாதிப்பைத் தொடர்ந்து மதிப்பீடு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டமும், உலக நிலவிய அமைப்பும் சேர்ந்து ஓசோன் படலத்திற்கான ஒருங்கிணைப்பு குழுவை அமைந்தனர். ஓசோனைப் பாதிக்கும் நிலைகளைத் தடுப்பதற்கான உலக நாடுகளிடையே ஒரு அனைத்துலக உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சி 1981 இல் தொடங்கியது. அத்துடன் 1985 மார்ச்சில் நடைபெற்ற வியன்னா மாநாடு முடிவுகள் உலக நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து 1987 இல் கனடாவில் ஓசோன் படலத்தைப் பாதிக்கும் பொருட்கள் குறித்து, மொன்றியல் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தொடர்பான மாநாடுகள் 1990 இல் லண்டனிலும், 1992 இல் கெர்பன்கேகளிலும் நடத்தப்பட்டது. 1995 இல் CFC இனை நிரத்திரமாகத் தடைசெய்வதற்கான ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கைச்சாத்திட்டன. ஆனால் இப்பிரச்சினை இதனுடன் தீர்ந்து விடவில்லை. CFC இன் பயன்பாட்டை ஐரோப்பிய சமூகம் 2015 ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று குரலெழுப்பி வருகின்றது.

1990 களில் சுவிஸ்லாந்தில் சுமார் 52.8 மில்லியன் தொன் பாதகமான வாயுக்கள் வெளியிடப்பட்டதாக அறியப்பட்டுள்ள போதும், 2008 ஆம் ஆண்டில் 48.4 தொன்னாக குறைவடைந்துள்ளது. ஓசோன் படலத்தை பாதுகாக்கும் வகையில் சுவிசில் புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியுமென நம்பிக்கை வெளியிடப்படுள்ளது.

மொன்றியல் சாசனத்தின் மூலம் ஓசோனின் மீள் உற்பத்தி நடவடிக்கையினை ஊக்குவிக்கும் தொழிற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. கைத் தொழில் குழுக்கள் சூழல் – நட்பு முறையிலான பாதுகாக்கப்பட்ட மாற்று முறைமைகளைக் கையாள முனைந்து வருகின்றன. தொழில்நுட்பத்தின் ஊடாக மாற்று திட்டங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் அமுல்படுத்துவதினை ஊக்குவித்து வருகின்றன.

மொன்றியல் பிரகடனத்தில் கைச்சாத்திட்ட நாடுகளும் சாசனத்தில் உள்ள இலக்குகளுக்கு கட்டுப்பட்டிருப்பது, சூழல் நட்புத் தொழில்நுட்பத்திற்கு நன்மை பயப்பித்துள்ளது. தேசிய ரீதியாக இது தொடர்பான சட்ட அமுலாக்கங்கள் தேசிய ஓசோன் அமைப்பினால் (National Ozone Unit) செயற்படுத்தப்படுகின்றது. இலங்கையில் அனைத்துலக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீட்டு முறைமை(Coding) Harmonized System (H.S Code) ஒன்றினை ODS பொருட்களின் இறக்குமதியினை கண்காணிப்பதற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை CFC அல்லது ODS இனை அடிப்படையாக வைத்த உபகரணங்களை தற்போது உற்பத்தி செய்யவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிற்கே பாதுகாப்பு படையாகக் காணப்படும் இவ் ஓசோன் படையானது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதன் உண்மையினைப் புரிந்து கொண்டு அனைத்துலக நாடுகளும் தமது சுயாதீன சிந்தனைகளைச் சற்று தியாகம் செய்து இவ் ஓசோன் படையின் பாதுகாப்பில் அக்கறை காட்டுமானால் ஓசோன் படையினைப் பாதுகாப்புடன் பேணமுடியும். வளரும் பல நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

தூய்மையான இருப்பிடம் என்பது ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை. மனிதன் இயற்கையை விட்டும், தூய்மையை விட்டும் தூரமாய் செல்லும் போது பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. ஆகவே, ஒவ்வொரு தனிமனிதனும் இதனை உணர்ந்து செயற்படுவானேயானால், இயற்கை எம் மீது தொடுக்கும் போரில் இருந்து விடுபட முடியும் என்பது திண்ணம்.

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 32

Thumi202121

ஏற்றுவோம்! ஏற்றுவோம்!

Thumi202121

நாக மனிதனின் சாப விமோசனம்

Thumi202121

Leave a Comment