இதழ் 43

அணுசக்தி பார்வையில்…!

இந்த காலத்துல காதல் கல்யாணம் எல்லாமே அப்புறம். ஆனா ஒருத்தர பார்த்ததுமே முதல்ல உருவாகுறது crush தான். ஒருத்தர முதல் தடவையா பார்க்கும் போதே வார்ற ஈர்ப்பு அது. நாம எல்லாருமே அன்றாட வாழ்க்கைல experience பண்ற ஒரு விஷயம் தான் அது. பார்த்ததும் “அய்யாஹ்” னு நெனச்சு பழகின பிறகு “அய்ய்யே” என்டு நினைச்ச சந்தர்ப்பங்களும் நிறையவே நடந்திருக்கும். ஆனா அதையே தான் காதலோட முதல் படியாவும் சொல்றாங்க. Love at first sight எண்டும் சொல்லலாம்.

“முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது
எனை மறந்து எந்தன் நிழல் போகுது”

இப்பிடியாக இருவருக்கிடையில வாற attraction ஜ காப்பியங்கள்ல தொடங்கி கிட்டடில வந்த படங்கள் வர கண்கள் பார்வைகளை பரிமாற்றி கொள்ளேக்க நிகழ்றதா தான் காட்சிபடுத்தியிருக்காங்க.

//பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே
உணர்ந்தேன் காட்சிப் பிழை போலே//

காட்சிப்பிழை! வாழ்க்கையே திசை மாறப்போவதற்கான அறிகுறி.

**

கண்ணும் கண்ணும் கலந்தே கற்பு போறதாவும்,

“கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு
கலப்பு காதல் தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு”

கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்கிறதாவும்,

“கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்”

எவ்வளவோ எழுதி தீர்த்திருக்காங்க. அப்பிடி என்னதான் force இருக்கு இந்த கண்ணுல எண்டு யோசிக்கேக்க தான், விழியீர்ப்பு விசைய புவியீர்ப்பு விசைக்கு ஒப்பிடுறாங்கனு தெரிய வந்திச்சு.

“உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே”

ஆப்பிள் மரத்துக்கு கீழ படுத்திருந்த நியூட்டன், ஆப்பிள் பழம் விழ புவியீர்ப்பு விசையை கண்டுபிடிச்சாரு. உலகத்தில உள்ள எல்லாத்திணிவுமே ஒன்றை ஒன்று கவரும்னு கணித சமன்பாடுகள் மூலம் நிறுவினாரு. காதலிலலோ,

“அடி நியூட்டன் அப்பிள் விழ
புவி ஈர்ப்பை கண்டானடி
இன்று நானோ உன்னில் விழ
விழி ஈர்ப்பை கண்டேனடி”

**

கிரஸ் எண்ட நிலையிலயிருந்து காதல் அரும்ப ஆரம்பிக்கேக்க முதலில டிஸ்டர்ப் பண்ணுறதும் கண் தான். முழுச்சிட்டிருக்கும் போதே கனவு காண வைக்கிற அதே கண்களை தான் நேரில பார்த்து பேச வெளுக்கிட்டால் கூச்சம் கூசும்!

//கண் பார்த்துக் கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்//

பேச வேண்டும் போல கிட்ட போனாலும் ஒரு பார்வையோடயே திரும்ப வைக்கும் காதல்!

“பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன்”

அதே இரு பக்கமும் சம்மதித்துவிட்டால் கண்டதும் கண்களால் ஒரு சிரிப்பு. அந்த சிரிப்பிலே ஆயிரம் ஆயிரம் வானவேடிக்கைகள்.

“பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலை போல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே”

**
காதல் கனிய தொடங்கிவிட்டால், ஈர்ப்பு அற்ற நிலையில மிதக்கிற போலவே இருக்கும். சுற்றம் மறந்த தனிமை இனிமை.

மௌனம் கவ்விக்கொள்ள பார்வைகளை பரிமாறி, கண்கள் பேசும் மொழியிலேயே காதல் வளருமாம்! அந்த மொழியை புரிந்து கொண்டே காதல் வாழும் என்கிறார்கள் கவிஞர்கள்.

“கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ”

கண்களால் பேசி கண்களால் சுவாசித்து தானே கண்ணீர் பெருக்கி நீர் வார்த்து வளர்க்கும் ‘காதற்செடி’ நிஜமாகவே மெடிகல் மிராகிள் தானே! சலிக்காதா என்ன?

//கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்//

இதே காலங்களிலேயே கவிஞர்கள் எழுதி வச்ச உயர்வு நவிற்சி எல்லாம் இரு பக்கமும் பரஸ்பரம் பாயும். தெளிவா சொன்னா உருட்ட ஆரம்பிப்பாங்க!

இலக்கிய காதலில் தொடங்கி இன்டர்நெட் காதல் வரை காலத்துக்கு ஏற்றது போல விதம் விதமாக உருட்டல்கள். ‘கெட்டப்பை மாத்தினாலும் கேரக்டரை மாத்த மாட்டேங்கிறியே’ எண்டு நம்ம வடிவேலு சொன்ன போல, காலம் மாறினாலும் பெண்களின் கண்கள் ஆண்களில் உருட்டுக்கு எப்பவுமே முதலிடம்.

அன்றைய காலத்தில்,

“தெள்ளு தமிழ் பள்ளு உன்
கண்ணில் உள்ள கள்ளு”

பள்ளு எண்டது தமிழோடு சிற்றிலக்கிய வகையில ஒண்டு. விவசாய சமூக மக்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்ட சிற்றிலக்கிய வகை இது. முக்கூடற் பள்ளு பிரபலமானது. ஈழத்திலும் ‘பறாளை விநாயகர் பள்ளு’ பிரபலம். பள்ளு படிக்கும் போது கிடைக்கும் உம்மத்தம் காதலி கண்ணை பார்க்கும் போது கிடைப்பதாக உளறல்.

“கண்ணிமையில் தூண்டிலிட்டு காதல் தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழையே”

ஏந்திழை என்றால் அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்ணாம்.

இன்று,

“சயனைட் சயனைட் விழியால்
மயக்கும் பொயற்ரிக் மொழியால்
இனிக்க இனிக்க கொல்லும்
கொலையாளி”

**

இப்படி இரண்டு பக்கமும் தேய்ந்து வளர்ந்த காதலுக்கு திருமணமாகி கூடி வாழும் போதும்,

//காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடிப் பிடிப்பது உந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பதுமுன் முகமே//

Portrait of a beautiful arabic woman

உனக்கு நீ எனக்கு நான் என்று அத்தனை வருடமாக கண்ட கனவு அத்தனையையும் திருமண வாழ்வின் ஆரம்பத்தில் ஆசையோடு கொண்டாட ஆரம்பிப்பார்கள். தேக்கி வைத்த காமமும் கண்களால் கரைந்து போகும் காலம் அது.

“கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூடி மாட்டேனடி செல்லம்மா”

என்று காதலிக்கும் காலத்தில சொன்னதெல்லாம்,

//உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய் தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்ததென்று நினைத்தேன்//

என்று கனியும் போது காதல் உண்மையிலே முழுமையாகிறது.

இப்படி முழுமையான காதலில, சண்டைகள், சோதனைகள் வந்தாலும் காதல் தோய்ந்த கண்கள் ஆறுதல் சொல்லும். கஷ்டங்களை கடக்க தேவையான பலத்தை கொடுக்கும்.
பார்வைகள் கலக்கும் போது அத்தனை சவால்களும் துன்பமும் துரும்பென ஆவது விஞ்ஞானத்தால் விளக்க முடியாத விந்தை தான!

//காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே
கண்ணில் காதல் வழிகிறதே//

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 39

Thumi202122

வினோத உலகம் – 09

Thumi202122

மெய்ப்பொருள் காண்பதே அறிவு

Thumi202122

Leave a Comment