இறப்பர் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளினால் நீர் மாசடைதல்
இலங்கையில் இறப்பர் பயிரிடப்பட்டுள்ள பரப்பளவு 200,000 ஹெக்டயர்கள் ஆகும். இதேவேளை உற்பத்தி செய்யப்பட்ட உலர் இறப்பரின் அளவு 110,000 தொன்கள் ஆகும். இவை பெரும்பாலும் டயர்கள், ரியூப்கள், வால்வுகள், சப்பாத்துகள், நீர் குழாய்கள் என்பனவற்றை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன. கிறேப் இறப்பர்கள், புகையூட்டப்பட்ட சீட் இறப்பர்கள்(RSS) என்பன சேதன மாசுபடுத்திகள், ஏனைய இரசாயனங்கள் என்பனவற்றை அதிகளவில் கொண்ட கழிவு நீரை உருவாக்குகின்றன. இக்கழிவு நீர் குளித்தல்,,கழுவுதல், பொது நீர் வழங்கலிற்கென நீரைப் பெறல் என்பனவற்றிற்குப் பயன்படுத்தப்படும் அருவிகள், ஆறுகள் என்பனவற்றை அடைகின்றன. கழிவு நீர் வெளியேறுவதால் உருவாகும் துர்நாற்றம் தொடர்பாக இறப்பர் பதனிடும் தொழிற்சாலைகளிற்கருகே வசிக்கும் மக்கள் முறையிடுவதையும் காணக் கூடியதாய் உள்ளது.
இறப்பர் உற்பத்திகளை தயாரிக்கும் போது பல்வேறு கட்டங்களில் பல இரசாயனங்கள் சேருகின்றன. பதப்படுத்த முன்னரே திரளடைவதைத் தடுப்பதற்கு சோடியம் சல்பேற்றும், நொதியத் தாக்கத்தின் காரணமாக நிறமாற்றமடைவதைத் தடுப்பதற்கு சோடியம் மெற்றாபைசல்பைட்டும், கரோற்றின்களை அகற்ற நக்சோபிலிச்சும்,திரளடைவதற்கு போமிக் அமிலம் அல்லது ஒக்சாலிக் அமிலம் என்பனவும் இடப்படுகின்றன. ஒரு தொன் கிறேப் இறப்பரை உற்பத்தி செய்வதற்கு ஏறத்தாழ 32 கன மீற்றர் நீர் பயன்படுத்தப்படுகின்றது. புரதங்கள்,வெல்லங்கள், சல்பைற்றுக்கள், மெகாப்டன்கள், ஆகியவற்றோடு நைதரசன், பொசுபரசு, பொட்டாசியம் என்பனவற்றைக் என்பனவற்றைக் கொண்டுள்ளதாக கழிவு நீர் காணப்படுகிறது. கழிவு ந Pரின் pH பெறுமானம் ஏறத்தாழ 5.5 ஆகும்.
அமிழ்த்தி எடுக்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு செறிவாக்கப்பட்ட இறப்பர் பால் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு உற்பத்தி செய்ய வேண்டிய பொருட்களின் உருவங்கள் மையநீக்க விசைக்கு உட்படுத்தப்பட்ட இறப்பர் பாலில் தோய்த்து எடுக்கப்படுகின்றன. இவ்வாறான உற்பத்திப் பொருட்களிற்கான உதாரணங்களாவன: கையுறைகள், பலூன்கள், கருத்தடைஉறைகள் என்பனவாகும். பெரும்பாலான உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும், வேகமாக வளர்ந்து வரும் ஒரு கைத்தொழிற் துறையாகும். எனினும், பல மாசுபடுத்திகளைக் கொண்ட பெருமளவான நீரை இத்துறை உற்பத்தி செய்கின்றது.
அமோனியா, சிங்க் ஒட்சைட்டு. டெட்ரா மீமீல்டைசல்பைற்றுக்கள் என்பன பதனிடுவதற்கு முன்னரே திரளுவதைத் தடுப்பதற்கும் பாதுகாப்புப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. கழிவு நீரின் pH பெறுமானம் 4.5 ஆகும்.
உலர்த்திய தேங்காய் தொழிற்சாலையினால் நீர் மாசடைதல்
இலங்கை 30,000 தொன் உலர்த்திய தேங்காய்ப் பூவை உற்பத்தி செய்தது. இவற்றில் பெரும்பாலானவை ஏற்றுமதி செய்யப்பட்டன.உண்மையில் பிலிப்பைன்சை அடுத்து, இலங்கையே உலகில் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. இக்கைத்தொழிலில் பயன்படுத்தப்படும் ஒரேயொரு இரசாயனம் கல்சியம் ஹைப்போகுளோரைட் ஆகும். ஏனைய அனைத்து கழிவுகளும் தேங்காயின் நீரிலிருந்தே வருகின்றன. இவை இரசாயன ஒட்சிசன் தேவை,(COD) உயிரியல் ஒட்சிசன் தேவை(BOD) என்பனவற்றை அதிகளவில் கொண்டுள்ளன. இவற்றின் அளவுகள் முறையே 40,000, 10,000 அப்ட ஆகும். ஒரு நாளில் 50,000 காய்களைப் பதனிடும் கொள்ளளவினைக் கொண்ட ஆலையொன்று 10,000 லீற்றர் தேங்காய் நீர் உட்பட 50 கன மீற்றர் கழிவு நீரை உற்பத்தி செய்கின்றது. கழிவு நீர் அதிக செறிவில் காபோவைதரேற்று,எண்ணெய்கள், கிறீஸ் என்பனவற்றைக் கொண்டுள்ளதோடு, ஆலைகளிற்கு அருகே அமைந்துள்ள நீர்நிலைகளை மிகவும் மோசமாகப் பாதிக்கும். இதனால் குளித்தல், குடிநீர் என்பனவற்றிற்குப் பிரச்சினைகள் ஏற்படலாம்.இக்கழிவு நீர், அது சென்றடையும் நீர்நிலையிலுள்ள ஒட்சிசனின் செறிவைக் குறைக்கும். இதனால் நீர் வாழ் உயிரினங்களிற்கு ஆபத்தினை ஏற்படுத்தும். இவற்றின் குறைந்த pH இன் காரணமாக பயிர்களிற்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
பாற் தொழிற்சாலைகளினால் நீர் மாசடைதல்
85 பிராந்திய பால் சேகரிப்பு நிலையங்களிலிருந்து வருடாந்தம் மொத்தமாக 81 மில்லியன் லீற்றர் பால் சேகரிக்கப்பட்டு, பால் பதனிடும் தொழிற்சாலைகளிற்கு விநியோகிக்கப்படுகின்றன.விநியோகிக்கப்பட்ட பால் கிருமியழிக்கப்பட்ட பால்,தொற்றுநீக்கம் செய்யபப்ட்ட பால், ஐஸ்கிறீம், யோகட், தயிர், வெண்ணெய், சீஸ்,கட்டிப்பல், பால்மா, ஏனைய பொருட்கள் என்பனவாகத் தயாரிக்கப்படுகின்றன. தாங்கிகளையும், கொள்கலன்களையும் கழுவுதல், துளைகளிலிருந்து வெளியே சிந்துதல், கையாளல், பழுதடைந்த பொருட்களை அகற்றல், சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட தூய்மைப்படுத்திகள் என்பனவற்றிலிருந்தே பிரதானமாக கழிவு நீர் உருவாகின்றது. ஒட்சிசன் குறைவாக உள்ள போது பால் வெல்லம், விரைவாக லக்றிக் அமிலமாக மாறுவதனால் கழிவு நீர் அமிலத்தன்மையானதாகக் காணப்படும். இதனால் கேசின் வீழ்படிவாகி உயர்ந்தளவான உயிரியல் ஒட்சிசன் தேவையுடன் கரிய நிறமான கழிவை உருவாக்கும். இலங்கையிலுள்ள பெரும்பாலான பால் பதனிடும் தொழிற்சாலைகள் தமது கழிவுப் பொருட்களை எவ்விதமான பரிகரணங்களையும் மேற்கொள்ளாது அருவிகளிலும்,ஆறுகளிலும் விடுவிக்கின்றன. இதனால் கழிவு நீர் சென்றடையும் நீர்நிலையிலுள்ள நீரில் ஒட்சிசனின் செறிவு குறைகின்றது. அத்துடன் அந்நீரில் துர்மணம் வீசுவதோடு, நீர் வாழ் உயிரினங்களிற்கும் ஆபத்தானதாக மாறும். இந்நீரை மனிதர்கள் குடிப்பதற்கோ அல்லது குளிப்பதற்கோ பயன்படுத்த முடியாது.
புடவைகளைப்பதனிடும் தொழிற்சாலைகளினால் நீர் மாசடைதல்
பருத்தி,செயற்கைப் பொருட்கள் என்பனவற்றிலிருந்து இறுதிவிளைபொருளாக துணிகளை உற்பத்தி செய்வதில் புடவைக் கைத்தொழில் ஈடுபட்டுள்ளது. துணிகளைத் தயாரிப்பதிலுள்ள மூன்று முக்கியமான படிகள் நூலைத்திரித்தல் (Spinning) நெய்தல் (Weaving) முடிவுறுத்தல்(Finishing) ஆகியனவாகும். நூலைத்திரித்தல் நெய்தல் என்பன அடிப்படையில் உலர் படிமுறைகள் ஆகும். இவை அரிதாகவே கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. மறுபுறம் இறுதி பொருளைத் தயாரிக்கும் படிமுறையில் பல சேதன, அசேதன இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதோடு, கழிவுநீர் ஏராளமான மாசுபடுத்திகளைக் கொண்டிருக்கும்.
ஆராய்வோம்……………