இதழ் 43

முன்பள்ளிப்பருவ மாணவர்களது மொழித்தேட்டம்-04

தற்போதய ஆண்டில் கொரோனா பரவலின் காரணமாக முன்பள்ளிகள் சில மாதங்கள் இடைநிறுத்தப்பட்டு தொடங்கப்பட்டன. இதனால் சில பெற்றோர் தமது பிள்ளைகளை சில நாட்கள் கழித்து முன்பள்ளிளுக்கு அனுப்பினர். ஆயினும் மாணவர்களது வரவு திருப்தி அளித்தது. மாணவர்களது மொழித்தேட்டத்தில் பெற்றோர் பல மனப்பாங்குகளைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலான பெற்றோர் அக்கறை செலுத்து கின்றனர். மேலும் மொழி விருத்தியில் சிரமப்படும் மாணவர்கள் உள்ளனர். இவர்கள் உச்சரிப்புஇ பேசுதலில் சிரமம் கொள்கின்றனர்.

Sujatha Vidyalaya Nugegoda

வலிகாமப் பிரதேசம் தமிழ் மொழியை பேச்சு மொழியாகக் கொண்டுள்ள மையால் இங்குள்ள மாணவர்களால் தாய் மொழியாகத் தமிழ் மொழியைப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. ஆங்கில மொழியானது முன்பள்ளிகளில் ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது. அத்துடன் வீட்டுச் சூழலில் தமிழ்மொழியுடன் கலந்து (மொழிக்கலப்பு) பேசப்படுகிறது. மாணவர்களின் மொழி வெளிப்பாட்டில் ஆங்கில மொழிப்பிரயோகம் சொற்கள் ரீதியாக செல்வாக்குச் செலுத்துகின்றது. இதனால் மாணவர்கள் ஓரளவு ஆங்கிலமொழி பற்றிய அறிவைத் தெரிந்து கொள்கிறார்கள்.

Sri Lanka can Boost its Development by Investing in Early Childhood  Education - Modern Diplomacy

மாணவர்களது மொழித்திறன்களது வெளிப்பாட்டிலே வாசித்தல் திறன் கூடுதலாகப் பின்னடைவாக உள்ளது.
முன்பள்ளிகளில் பாடத்திட்டத்திற்கு அமைவாக அடிப்படை மொழித்திறன்கள் மற்றும் முன்மொழித் திறன்களை மாணவர்களுக்கு விளையாட்டு ஊடாக செயற்படுத்தி மொழித்தேட்டம் அடைவதற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆயினும் முன்பள்ளிப் பருவம் முடிவடைந்து தரம் ஒன்றிற்கு செல்லும் போது அங்குள்ள பாடப்புத்தகங்களில் உள்ள ஒலிகளை உச்சரிக்கவும்இ பார்த்து வாசிக்கவும்இ ஒலிகளை இனங்காணவும் மிகவும் சிரமப்படுகின்றனர். தரம் ஒன்றிற்கு கல்வியைத் தொடர்வதற்கு மொழிகளில் முக்கியமாக வாசித்தல்இ எழுதுதல் திறன்கள்; அவசியம் என்பதால் இவ்விடயங்களில் பெற்றோர்களும் முன்பள்ளி ஆசிரியர்;களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கின்றார்கள். இவற்றில் தனியார் முன்பள்ளிகளின் பங்களிப்புக்கள் கூடுதலாக இருப்பதால் அதிகமான பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இங்கு சேர்க்கின்றமையைக் காணமுடிகிறது.
இவ்வகையில் வலிகாமத்தில் உள்ள அரச மற்றும் தனியார் முன்பள்ளிகளில் அடிப்படை மொழித் தேட்டத்திற்குரிய தூண்டல் பூரணமாக அளிக்கப்படுகின்றது.

இப்பருவத்தில் ஒரு முன்பள்ளி மாணவனுக்கு இருக்க வேண்டிய அனைத்து விருத்திகளிலும் கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில் முன்பள்ளிகளுக்கும் பாடசாலைகளுக்கும் இணைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் பெருமளவு நடைபெறுகின்றன. எனினும் வலிகாமத்தில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆரம்பக் கல்வியை மேற்கொள்ளுவதற்குரிய மொழித்திறன்களில் வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன்கள் பின்னடைவாக உள்ளதால் மொழி மூலமாக ஆரம்பக் கல்வியைத் தொடர்வதற்கு உரிய முன்தேவையானது முன்பள்ளிகளில் முழுமையாக அடையப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

  1. உசாத்துணைகள்

இராசநாயகம் ,ஜெ.(2009),
‘யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்பள்ளிகளின்தற்போதைய நிலை”, அகவிழி.

சிவகுமார்,அ.(2004),
‘வடகிழக்கு மாகாண மட்டத்தில் முன்பள்ளி செயற்பரிமாணம்”, கல்வியியலாளன்

சித்திராதேவி,ஞா.(2000),
‘ஆரம்பக்கல்விக்கு முன்பள்ளிகளின் பொருத்தப்பாடு”,
கல்வி முதுதத்துவமாணி ஆய்வுக் கட்டுரை, யாழ் பல்கலைக்கழகம்.

நவீனா, தே. (1992),
‘யாழ் மாவட்டத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர் கல்விக்குரிய கலைத் திட்டமொன்றை உருவாக்குதல்”,
யாழ் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.

யோகேஸ்வரி,க.(1991),
‘யாழ் குடாநாட்டிலுள்ள முன்பள்ளிக் கல்வியின் தற்போதைய நிலை”,
யாழ் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.

‘பாடத்திட்டமும் ஆசிரியர் வழிகாட்டியும்”, (2016),
முன்பள்ளிப்பருவ விருத்தி மற்றும் ஆரம்பக்கல்வித்துறை, தேசிய கல்வி நிறுவகம,; இலங்கை.

Homel, P. palij, M. aaroson, D. (1982) ,
“childhood bilingualism”,new york university.
John, M.C. (1970),
“pre – school education objectives andtechniques”, educational series.

Related posts

ஈழச்சூழலியல் 29

Thumi202121

சிங்ககிரித்தலைவன்-38

Thumi202121

வினோத உலகம் – 09

Thumi202122

Leave a Comment