இதழ் 43

வினோத உலகம் – 09

அமெரிக்காவில் வள்ளுவர் தெரு

  • அமெரிக்காவில் முதல் முறையாக சாலை ஒன்றுக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் `வள்ளுவர் வே` எனவும் தமிழில் `வள்ளுவர் தெரு` எனவும் இந்த தெரு அழைக்கப்படவுள்ளது.

சீயஸாக அர்னால்ட்

  • BMW மின்சார கார் விளம்பரத்தில், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் கிரேக்க கடவுள் சீயஸாக நடித்துள்ளார்.

மெட்டவின் பங்குகள் பாரிய சரிவு

  • மெட்டா நிறுவன பங்குகளின் விலை 26% வீழ்ச்சியடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலிலில் 13 வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். 

முகக்கவசத்திற்கு மாற்றாக மூக்கு கவசம்

  • முககவசத்துக்கு பதிலாக மூக்கை மட்டும் மறைக்கும் மூக்கு கவசத்தை தென்கொரியாவைச் சேர்ந்த அட்மன்  நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதற்கு கோஸ்க் என பெயரிடப்பட்டுள்ளது.

864 பூச்சிகளை பச்சை குத்தி சாதனை

  • அமெரிக்காவைச் சேர்ந்த மைக் அமோயா கின்னஸ் சாதனை படைக்கும் முகமாக சிலந்தி, தேள், கரப்பான் உள்ளிட்ட 864 பூச்சிகளை உடலில் பச்சை குத்தியுள்ளார். இது குறித்து அமோயா குறிப்பிடுகையில், நான் பூச்சிகளை விரும்புகிறேன் என பலர் நினைக்கிறார்கள் – உண்மையில் இது முற்றிலும் எதிர்மாறானது. நான் பூச்சிகளுக்கு பயப்படுகிறேன், நான் பூச்சிகளை வெறுக்கிறேன். அதனால்தான் நான் அவற்றை என் உடல் முழுவதும் வைத்தேன்  என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஈழச்சூழலியல் 29

Thumi202121

மகோன்னதமிக்க மாசிமகத் திருநாள்

Thumi202121

ஏற்றமா ஏமாற்றமா ஏலம் – விரிவான அலசல்

Thumi202122

Leave a Comment