அமெரிக்காவில் வள்ளுவர் தெரு
- அமெரிக்காவில் முதல் முறையாக சாலை ஒன்றுக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் `வள்ளுவர் வே` எனவும் தமிழில் `வள்ளுவர் தெரு` எனவும் இந்த தெரு அழைக்கப்படவுள்ளது.
சீயஸாக அர்னால்ட்
- BMW மின்சார கார் விளம்பரத்தில், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் கிரேக்க கடவுள் சீயஸாக நடித்துள்ளார்.
மெட்டவின் பங்குகள் பாரிய சரிவு
- மெட்டா நிறுவன பங்குகளின் விலை 26% வீழ்ச்சியடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலிலில் 13 வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
முகக்கவசத்திற்கு மாற்றாக மூக்கு கவசம்
- முககவசத்துக்கு பதிலாக மூக்கை மட்டும் மறைக்கும் மூக்கு கவசத்தை தென்கொரியாவைச் சேர்ந்த அட்மன் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதற்கு கோஸ்க் என பெயரிடப்பட்டுள்ளது.
864 பூச்சிகளை பச்சை குத்தி சாதனை
- அமெரிக்காவைச் சேர்ந்த மைக் அமோயா கின்னஸ் சாதனை படைக்கும் முகமாக சிலந்தி, தேள், கரப்பான் உள்ளிட்ட 864 பூச்சிகளை உடலில் பச்சை குத்தியுள்ளார். இது குறித்து அமோயா குறிப்பிடுகையில், நான் பூச்சிகளை விரும்புகிறேன் என பலர் நினைக்கிறார்கள் – உண்மையில் இது முற்றிலும் எதிர்மாறானது. நான் பூச்சிகளுக்கு பயப்படுகிறேன், நான் பூச்சிகளை வெறுக்கிறேன். அதனால்தான் நான் அவற்றை என் உடல் முழுவதும் வைத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.