இதழ் 44

வினோத உலகம் – 10

ஐரோப்பியாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் 90 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஆர்ட்வார்ட் குட்டி பிறந்துள்ளது. இது ஹரிப்பொட்டர் திரைப்படத்தில் வரும் `டோபி` கதாபாத்திரத்தை ஒத்திருப்பதால் இவ்வுயிரினத்துக்கு `டோபி` எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தொழிலதிபரும் அமெரிக்காவின் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் “Truth Social” என்ற புதிய செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் தொடங்கி வைத்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலின்போதும் அதிபர் ஜோ பைடனின் வெற்றியை அடுத்தும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரியக் கருத்துகளைப் பதிவிட்டு வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரின் ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் உலகிற்கு உண்மையைத் தெரிவிப்பதற்காகத் தானே சொந்தமாக ஒரு செயலியை உருவாக்குவேன் என சவால் விட்டிருந்தார். அந்த சவாலுக்கேற்பத் தற்போது தனது சொந்த நிறுவனமான டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி மூலம் “Truth Social” என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளார்.

மெய்நிகர் தொழில்நுட்பத்தில் உருவாகும் மெட்டாவெர்ஸில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுவதற்கு அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய மொழி பெயர்ப்பு அம்சம் ஒன்றை உருவாக்கி வருவதாக மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். பல்வேறு பின்னணியில் இருந்து வரும் மக்கள் மெட்டாவெர்ஸ் மெய்நிகர் உலகத்தில் பங்கேற்கும் போது எந்த மொழியில் பேசினாலும், எழுதினாலும் அதை உடனுக்குடன் மொழிபெயர்த்து சம்பந்தப்பட்ட நபர் புரிந்து கொள்ளும் வகையில் மெட்டாவெர்ஸ் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

துபாயில் மிகப் பிரமாண்டமான ‘எதிர்கால அருங்காட்சியகம்’ திறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த துபாயில், ‘புர்ஜ் கலிபா’ என்ற உலகின் மிக உயரமான வர்த்தக கட்டடம் உள்ளது. இதையடுத்து, உலகிலேயே மிக அழகான கட்டடம் என்ற சிறப்பை எதிர்கால அருங்காட்சியகம் பெற்றுள்ளது. இந்த கட்டடம், ‘ரோபோ’ க்கள் வாயிலாக, உருக்கில் செய்த 1,024 கலை வடிவங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் எதிர்கால வாழ்க்கை குறித்த புதிய சிந்தனைகளுடன் எண்ணற்ற புதுமைப் பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 40

Thumi202122

ஈழச்சூழலியல் 30

Thumi202122

சிவராத்திரி விரத மகிமை

Thumi202122

1 comment

Leave a Comment