உலோகங்கள் பதனிடும் கைத்தொழிற்சாலைகளினால் நீர் மாசடைதல்
உலோகப் பதனிடும் தொழிற்சாலையுடன் சம்பந்தப்பட்டுள்ள செயன்முறைகளாவன: மின்முலாமிடல், கல்யாணசுந்தரத்தின், விசிறல்,பொலிவூட்டல் (Polishong) வன்மைப்படுத்தல்,அனோடைசிங், குரோமேற்றிங் என்பனவாகும். ஈயம், நிக்கல், நாகம், குரோமியம், செப்பு என்பனவற்றைப் பயன்படுத்தி மின்முலாமிடல், கல்வனைசுப்படுத்தல் என்பனவே இலங்கையில் மேற்கொள்ளப்படும் மிகப் பொதுவான இரண்டு செயற்பாடுகள் ஆகும்.இத்தொழிலிருந்து வெளியேறும் கழிவுநீரில் பல மாசுபடுத்திகள் காணப்படுகின்றன. இவை சோடியம் காபனேற்று, சோடியம்ஹைட்ரொக்சைட், சோடியம் பொஸ்பேற், சோடியம் சிலிக்கேற்று, சோடியம் சயனைட், போரெக்ஸ், ஐதரோகுளோரிக் அமிலம், சல்பூரிக் அமிலம், நைட்றிக் அமிலம், இரும்பு, செப்பு, நாகம்,நிக்கல்,கட்மியம்,குரோமியம்,ஈயம், பீனோலிக் பொருட்கள்,சேதனக் கரைப்பாபொருட்கள்,நீர் – எண்ணைய் குழம்புகள் என்பனவற்றைக் கொண்டுள்ளன.
கதிரியக்கப் பொருட்களினால் நீர் மாசடைதல்
தற்பொழுது 150 அணு ஆலைகள் இயங்குதின்றன. சுமார் 70 அணு ஆலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அணு ஆலைகள் அமைக்கப்படும்போது அதற்கு சார்பாகவும் எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு முக்கியமாக விபத்து ஏற்பட்டு கதிரியக்கப் பொருட்கள் சூழலுக்குள் தள்ளப்டும் என்ற அச்சமே அணு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கபடுவதற்கான காரணமாகும். கதிரியகக்ப் பொருட்களின் கழிவுகளின் அதிகளவானசெறிவு மனிதர்களை கொல்லும். குறைந்த அளவான செறிவு பல நோய்களை உண்டாக்கும்.அணுக்களை பிளப்பதனால் வெளியிடப்படும் சக்தியை மின்சக்தியாக அணு ஆலை மாற்றுகிறது. அணு ஆலையிலிருந்து மின்சாரம் உற்பத்தியாகும் முறை அடிப்படையில் பாரம்பரிய மின் வலு உற்பத்தி இயந்திரத்தை ஒத்தது. நிலக்கரி மற்றும் எண்ணெய் மூலம் இயங்கும் கொதி கலனது (Boiler) வகிபாகத்தையும் அணு ஆலை பிடித்துள்ளது.அணுசக்தி கைத்தொழிலில் பொதுவாக பயன்படுத்தப்படும் கதிரியக்கப் பொருள் யுலுரேனியம் டைஒக்சைட் ஆகும். இயற்கையாக யுலுரேனியம் அணுக்கள் பிளவடைந்து பெருமளவானவெப்பத்தை வெளிவிடுகிறது. இந்த நிகழ்வு பிளப்பு (Fission) என அழைக்கப்படும். நீராவி மற்றும் விசையாழி (Turbine) மூலம் இந்த வெப்ப சக்தி மின்சார சக்தி ஆக மாற்றபடும்.
அணு பிளப்பின் போது உருவாக்கப்படும் சிறிய அணுக்கள் ஆனது பிளப்பு உற்பத்திகள் (Fission products) என அழைக்கப்படும். இவை அயடின், சீசியம் மற்றும் ஷரோந்தியம் ஆகிய அணுக்களை கொண்டுள்ளன. இவை அதிகளவான கதிரியக்கத்தை கொண்டவை. நீராவியை உற்பத்தி செய்வதற்கும், இந்த முறைமையை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கும், பெருமளவிலான நீர் அணு ஆலையை இயக்குவதற்காக தேவைப்படுகிறது. இக் காரணத்திற்காகவே அணு ஆலைகள் ஏரி, ஆறு மற்றும் சமுத்திரங்கள் அருகே அமைக்கப்படுகின்றன. கதிரியக்கப் பொருட்கள் சுற்று சூழலுக்கு வெளியேறாமல் இருப்பதை உறுதிப்படுத்த, கடுமையான பாதுகாப்பு நிபந்தனைகள் அணு ஆலைகளை வடிவமைத்தல், நிர்மாணித்தல் மற்றும் அவற்றின் முகாமைத்துவம் என்பவற்றின் போதும் பின்பற்றப்படுகின்றன.
1945 ஆம் ஆண்டில், ஹிறோசிமாவில் நிகழ்ந்த அணுகுண்டு வெடிப்பானது கதிரியக்க சம்மந்தமான சூழல் பேராபத்தாகும். கதிரியக்கம் சம்மந்தமான மற்றோரு துன்பகரமான நிகழ்வு ஆனது முன்னைய சோவியத் யூனியனிலுள்ள யுக்ரயின் பிராந்திய சேனோபோபில் நகரில் வெப்பம் கூடியதால் நாலு அணு ஆலைகளில் ஒன்று இரசாயன வெடிப்பினால் பாதிப்புக்குள்ளானது. பத்து நாட்களாக அதிக அணு கதிரியக்க பொருட்களான அயடின்-131 மற்றும் செசியம்-137 என்பன சூழலுக்கு வெளியேறியது. கதிரியக்க முகில்கள் மேற்கு ஜரோப்பா வரையும் பரவியது. இது வளி, நீர் மற்றும் உயிர் வாழினங்களை பாதித்தது. இந்த நிகழ்வு 31 பேருக்கு உடனடி மரணத்தை ஏற்படுத்தியது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தைரோயிட், அனேமியா, புற்று நோய், கண்பார்வை இழப்பு மற்றும் பசியின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் ஏற்பட்ட நிதி இழப்பு 350,000 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
மார்ச் 11, 2011 இல் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து ஏற்பட்ட சுனாமி ஜப்பானின் புகுசிமா டாஇச்சியில் உள்ள அணு ஆலையில் பாரிய விபத்தை ஏற்படுத்தியது. இந்த எதிர்பாராத நிகழ்வு கடல் மட்டத்தை 14 மீற்றருக்கு உயர்த்தியது.பூகம்பம் நிகழ்ந்த 45 நிமிடங்களின் பின்னர் சுனாமி அலைகள் இந்த அணு இயந்திரத்தை அடைந்தது. துரதிஷ்டவசமாக 5.7 மீ;ற்றர் கடல் நீர் மட்ட உயர்வை தாக்குபிடிக்கும் அளவுக்கே இந்த ஆலை வடிவமைக்கபட்டு இருந்தது. இதனால் கடல் நீர் இயந்திரத்தினுள் புகுந்து நகரம் இருளில் மூழ்கியது. அவசர டீசல் மூலம் இயங்கும் ஒரு மின்பிறப்பாக்கியை விட மற்றைய எல்லா மின்பிறப்பாக்கிகளும் பாதிக்கப்பட்டன. குளிராக்கும் முறைமை தொழிற்படுவது நின்றது. அணு ஆலைகள் அதிக வெப்பமடைந்தன. இதனால் தொடர்ச்சியான வெடிப்புகள் நிகழ்ந்தன. அணுகதிர் பொருட்கள் மற்றும் பாதிக்கபட்ட நீர் என்பன சூழலுக்கு சென்றன.இந்த விபத்து 02 மனித உயிர்களை காவு கொண்ட போதிலும், நீண்ட கால இடைவெளியின் பின்னர், இறந்தவர்களின் எண்ணிக்கை 1500 ஆகும் என பிரபல அணு சக்தி நிபுணர், கலாநிதி.றிச்சட் கார்வின் மதிப்பிட்டுள்ளார். இந்த விபத்து நடந்த ஒரு வருடத்தின் பின்னால், புக்கிசிமா இலிருந்து 8300 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கலிபோர்னியா பிராத்தியத்தின் சான்டியாகோ கடலில் நீல ருனா (Bluefin tuna) பிடிக்கப்பட்டது. புக்கிசிமா விபத்தின் போது வெளியேறிய கதிரியக்கப் பொருளான செசியம் 137 இந்த மீனில் காணப்பட்டது. ஒரு நாட்டில் நிகழும் அணு விபத்து மிகவும் தொலைவிலுள்ள நாட்டிலுள்ள உயிரனங்களுக்கு மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. இது பல நாடுகளுக்கிடையே சர்வதேச மோதல்களை ஏற்படுத்தக்கூடும்.
ஆராய்வோம்………..