இதழ் 44

அதிகாரம் ஆண்வடிவம் என்பது களைதல் வேண்டும்!

2021ஆம் ஆண்டு சர்வதேச புள்ளிவிபரங்களின் படி உலக சனத்தொகையில் 49.58சதவீதமாக பெண்கள் காணப்படுகிறார்கள். அதுமட்டுமன்றி ஆண்களின் வடிவமாக கருதப்படும் அதிகார கட்டமைப்புக்களிலும் இன்று பெண்களின் வகிபாகம் அதிகரித்து கொண்டே வருகின்றது. வகிபாகங்கள் சாதரணமாக கடந்து செல்லாது வினைத்திறனான தன்மையுடன் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பெருந்தொற்று உலகை உலுக்கி கொண்டிருந்த ஆரம்ப காலப்பபகுதியில் விரைவாகவும் வினைத்திறனாகவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய தலைவர்களில் முதன்மையான தலைவர்களாக பெண் தலைமைகளே காணப்படுகிறார்கள். குறிப்பாக ஜேர்னியின் முன்னாள் சான்சலர் ஏஞ்சலா மேர்கல், தைவானில் சாய் இங்-வென், நியூஸிலாந்தில் ஜசிந்தா ஆர்டெர்ன், டென்மார்க்கில் மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோரின் தலைமைகள் வெகுவாக புகழப்பட்டது. அத்துடன் தற்போது ஐரோப்பா உலகப்போர் ஒன்றுக்கான களமாக சர்வதேச அரசியலில் ஆராயப்படுகின்றது. போர் ஒன்று வருமாயின் அதில் பிரதான நிலை பெறவுள்ள ஐரோப்பா நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள் ஆவார்.

தமிழ் கவிஞன் பாரதி கூறும், ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;’ என்பது ஐரோப்பா அரசியல் அதிகாரத்தில் சாட்சியமுமாகிறது. இவ்வாறான வீரிய வரலாற்றை மங்கையர் ஒரு முனையில் சாதிக்கும் அதேசமயத்தில் இன்றும் இன்னொரு முனையில் பெண்கள் சில அடக்குமுறைகளால் தங்கள் ஆளுமைகளை வெளிப்படுத்த முடியாதவர்களாய் வலுவிழந்து செல்லும் சூழல்களும் பூமிப்பந்தில் நடந்தேறியே வருகிறது. தொழில்நிறுவனங்களில் மேலதிகாரிகளின் பாலியல் சேட்டைகள், பெண்கள் என்று இழிநிலை பார்வைகளால் பெண்கள் தங்கள் நிலைகளை இழக்கும் செய்திகள் தினசரி ஏதொவொரு மூலையில் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளது.

தவிர்க்க முடியாதவகையில் பெண்களின் எழுச்சி நிகழ்ந்தேறி வருகின்ற சூழலில், பெண்கள் சில அடக்குமுறைகளால் வலுவிழந்து செல்வார்களாயின் அது ஒட்டுமொத்த சமூக இருப்பை கேள்விக்குட்படுத்தக்கூடியது. அதிகாரம் ஆண் வடிவம் என்ற நிலை மாற்ப்பட வேண்டும். அது பாலற்ற வடிவமாக பெண்களும் அதிகாரத்தின் வடிவமாக மாற வேண்டும். அதுவே சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு இன்றைய தேவையாகும்.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்.”

Related posts

ஏற்றமா? ஏமாற்றமா? ஏலம் | விரிவான அலசல் – 02

Thumi202121

குறுக்கெழுத்துப்போட்டி – 40

Thumi202122

சித்திராங்கதா – 43

Thumi202122

Leave a Comment