சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து உருவான காலத்திலிருந்து ஊழல் அரசியல்வாதிகளை பார்த்து அலுத்துப் போயிருந்த மக்களுக்கு ஜெலன்ஸ்கி வித்தியாசமானவராக தெரிந்தார். எந்த அரசியல் அனுபவமும் இல்லாத ஒரு நடிகர் இன்றைய போர் காலத்தில் உறுதியான தலைவராக நின்று போர்க்களத்திலேயே உக்ரைனுக்காக போராடி வரும் உயர்ந்த தலைவராக காணப்படுகின்றார். இத்தகைய உயரிய குணமே இன்றைய உலகம் திரும்பிப் பார்க்க வைத்தது எனக் கூற வேண்டும். எங்கள் நாட்டிலும் இத்தகைய ஒரு வீரன் இருந்தார் என்பது இத்தருணத்தில் ஒரு தமிழன் என்ற வகையில் நான் நினைவு கூற வேண்டியது அவசியம் அதோடு ஒரு கடமையும் ஆகும். இன்று உலகமே திரும்பிப் பார்த்து வியக்கும் இவர் யார் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஏற்பட்டு வருகின்றது. இக்கட்டுரை அதற்கு விடையளிப்பதாக அமையப் பெற்றுள்ளது. காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறுவதை தமிழ் சினிமாவில் நிறைய பார்த்திருக்கிறோம். உக்ரைனில் ஒருவர் நிஜ ஹீரோ ஆகிவிட்டார் அவர்தான் விளாதிமிர் ஜெலன்ஸ்கி.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. பல திசைகளிலிருந்தும் தாக்குதல் தொடரும் போது ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் நாட்டை காப்போம் என்று தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஜெலன்ஸ்கியைக் கொல்வதற்கு ரஷ்யா தனியாக 400 பேர் கொண்ட கூலி ராணுவப்படை ஒன்றை அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில், ‘பாதுகாப்பாக வெளியேறி எங்களிடம் வந்துவிடுங்கள்” என்று அமெரிக்கா கூப்பிட்டபோதும் அவர் போக மறுத்தார். ‘இந்த நேரத்தில் எங்களுக்கு உதவி செய்ய வராவிட்டால், அடுத்து போர் உங்கள் வாசலை நோக்கி வரும்” என்று ஐரோப்பிய நாடுகளுக்கு அறைகூவல் விடுத்தார். இப்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அவருக்குத் துணையாக நிற்கின்றன.
1978ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் ஒரு ரஷ்யா மொழி பேசும் யூதர். அடிப்படையில் ஒரு காமெடியாளர். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு வரை பெருமளவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் பரிட்சயமான நகைச்சுவையாளராக மட்டுமே இருந்தார். 17 வயது முதலே டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரையுலகில் முக்கிய இடத்தைப் பிடித்தார். இவர் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். ஆனால் அவர் அந்தத் துறையில் பணியாற்றவில்லை. 2003ஆம் ஆண்டு அவரது பள்ளித் தோழியான ஒலெனாவை திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் வெளியான ளநசஎயவெ ழக வாந pநழிடந என்ற தொலைக்காட்சித் தொடர் மிகவும் பிரபலமானது. அதில் பள்ளி ஆசிரியராக நடித்திருந்தார். அந்த தொடரில் அவருடைய கருத்துக்களை மாணவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட அது வைரலாகி எதிர்பார்க்காத விதமாக அவர் நாட்டின் அதிபர் ஆனார். அதே தான் அவரது நிஜ வாழ்விலும் நடந்தது. தற்செயலான நிகழ்வாக இவருடைய காமெடி மக்களிடத்தில் பிரபலமாக அதை வைத்து 2012ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கினார். ஜெலன்ஸ்கி கட்சிக்கு தனது நிகழ்ச்சியின் பெயரையே வைத்தார். தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் அரசாங்கத்தை கிண்டலடித்து நகைச்சுவையாகப் பேசினார்.
தேர்தல் பரப்புரையில் நாட்டுக்குள் ஆக்கிரமிக்க நடக்கும் எந்த ஒரு முயற்சிகளையும் உறுதியான முடிவுக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். மக்களை கவர்ந்த அவரது பேச்சுக்களால் 73 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை ஆக்சிடென்ட் பிரசிடன்ற் என்றும் அழைப்பதுண்டு. பெரிதாக அரசியல் தெரியாதவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டபோது சில உக்ரைன் மக்களிடையே அச்சமும் மேலோங்கி காணப்பட்டது. முன்னாள் அமெரிக்க அதிபர் ட்றம் மற்றும் இத்தாலி முன்னாள் அதிபர் ஆகியோரிடம் கூட அரசியல் நிபுணர்கள் ஒப்பிட்டுப் பேசினார்கள்.
அதிபரான பிறகு மருத்துவத்திற்காக கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வ மாற்றினார். சட்டபூர்வ கருக் கலைப்பை இலவசம் ஆக்கினார். மேலும் பாலியல் தொழில்இ சூதாட்டம் ஆகியவற்றிற்கும் சட்டபூர்வ அனுமதி வழங்கினார். மக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் உக்ரைனின் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தார்.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது ரஷ்யாவுடனான மோதல் போக்கு தொடர்வதையடுத்து உக்ரைன் அதிபர் உதவியை நாடினார். ராணுவ உதவி கேட்டார். அப்போது அவருடன் தொலைபேசியில் பேசிய ட்ரம்ப் அதற்கு கைமாறாக தனது அரசியல் எதிரியான பைடனின் மகன் உக்ரைன் எரிவாயு நிறுவனம் ஒன்றில் இயக்குனராக இருக்கும் கன்டர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு நெருக்கடி கொடுத்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் சர்ச்சை கிளம்பியது. ஆனால் அதற்கு உதவி செய்ய மறுத்துவிட்டார் ஜெலன்ஸ்கி. இதனால் ரஷ்யா விவகாரத்தில் உக்ரைனுக்கு ட்ரம்ப்உதவி செய்ய மறுத்துவிட்டார். உக்ரைனுக்கு வழங்கிவந்த 391 மில்லியன் டொலர் ராணுவ உதவி தொகை நிறுத்தப்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்ப் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது வேறு கதை.
ஜெலன்ஸ்கி ஆட்சியின் மீது ஊழல் மற்றும் பல பொதுவான புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றது. வரியெய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு ரகசிய நிறுவனங்களில் இவர் முதலீடு செய்திருப்பதாக இவர் மீது புகார்கள் எழுந்தன. பண்டூறாப் பத்திரிகை ஆவணக் கசிவில் இவரின் பெயரும் இவருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றது. இந்த சூழலில்தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்நிலையில் 18 வயது முதல் 60 வயது வரையான நாட்டைச் சேர்ந்த ஆண்கள் வெளியேறுவதற்கு தடை விதித்துள்ளார். ஆயுதங்கள் வைத்திருக்க கூடாது எனக் கூறிய அவர் ர;யாவை எதிர்த்து போர்களில் ஈடுபட்ட மக்களிடம் ஆயுதங்களைக் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் புரொடக்ஷன் நிறுவனத்தில் பணிபுரிந்த பலரும் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டனர். ஜெலன்ஸ்கியின் பால்ய நண்பர் ஒருவர், உக்ரைன் உளவுத் துறை பொறுப்புக்கு வந்தார். அனுபவம் இல்லாத இவர்கள் பலரும் நிர்வாகத்தை கேலிக்கூத்தாக மாற்றினர். வெளிநாட்டுத் தலைவர்கள், தூதர்கள் பலர் ஜெலன்ஸ்கியிடம் உரையாடிவிட்டு, ‘நிஜமாகவே ஒரு அதிபரிடம்தான் பேசினோமா” என்ற குழப்பத்துடன் வெளியில் வந்த வரலாறும் உண்டு. மக்கள் எதிர்பார்த்தது போல ஊழலும் ஒழியவில்லை. நாம் தப்பாக ஒரு காமெடியனைத் தேர்வு செய்துவிட்டோமோ என்று மக்கள் சந்தேகப்பட்ட நேரத்தில்தான் இந்தப் போர் வந்திருக்கிறது
என்னதான் ரஷ்யா உக்ரைன் போரில் ஜெலன்ஸ்கி ஓர் உன்னத தலைவராக மக்களோடு போர்வீரர்களோடும் போர்க்களத்தில் நின்றாலும் அவருடைய ஆளுமையின்மை அரசியல் அனுபவமின்மை அரசியல் திறமையின்மை இராஜதந்திர நுட்பம் தெரியாமை போன்றன யுக்ரேனிய மக்களை நரகப் பாதையில் தள்ளவே வழிவிடுகின்றது.
மேற்கத்திய நாடுகளின் உண்மையான உருவம் விளங்காமல் தனது தாய் போன்ற நாடான ரஷ்யாவுடன் போர் புரிந்து வருகின்றார் ஜெலன்ஸ்கி. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவினை பலவீனப்படுத்துவதற்கு உக்ரேனிய மக்களினை பகடைக்காயாக பயன்படுத்துவது முட்டாள் உக்ரைன் ஜனாதிபதிக்கு விளங்கவில்லை. இதனைவிட அமெரிக்கா உக்ரைனுக்காக போர் புரியும் என ஆரம்பத்தில் ஜெலன்ஸ்கி எதிர்பார்த்து ர;யாவோடு சண்டை போட்டது மாபெரும் தவறு என்பதை அவர் இன்னும் உணரவில்லை என்றே குறிப்பிட வேண்டும். அத்தோடு நேட்டோவில் இணைவதற்கான உக்ரேனின் திட்டமிடலே இப் போருக்கான அடிப்படைக் காரணமாகும். ஆனால் நேட்டோவோ அமெரிக்காவோ உக்ரைனை நேட்டோவில் இணைப்பதாக குறிப்பிடவில்லை. நேட்டோவில் ஒரு உறுப்புரையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெறும் எந்த ஒரு நாடும் நேட்டோவில் இணைய முடியாது எனக்கூறப்பட்டு இருக்கின்றது. இதை நன்கு அறிந்த ரஷ்யா இப்போது போரினை நடாத்துகிறது. இந்த விடயத்தினையே உக்ரைன் அதிபர் அறியாதவரா? என்பது எனது கேள்வியே.
முதல் உள்நாட்டுப் போரினை முடிவு கட்டிவிட்டு அல்லது அதனை நிறுத்தி விட்டு நேட்டோவில் இணைந்து கொள்ள முயற்சித்திருக்க வேண்டும் ஆனால் அதனை விளங்கிக் கொள்ளாமல் தவற விட்டுவிட்டார்.மேலும் இப்போருக்காக பல உதவிகளை வேண்டி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அளவுக்கு மீறிய உதவிகளைப் பெற்று வருகின்றார். இது தனது நாட்டின் சுயத்தினையோ அல்லது நாட்டினுடைய இருப்பினையோ பிற்காலத்தில் அசைபோட வைப்பதற்கான சாத்தியக் கூறு உண்டு என்பதை அவர் விளங்காத முட்டாளாக காணப்படுகின்றார்.
ரஷ்யாவுடனான போரை நிறுத்துவது மேற்குலக நாடுகளின் நோக்கமல்ல. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதும் தமது அரசியல் அதிகாரத்திற்கான இருப்பினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இதனை உக்ரேன் அதிபரால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை என்பதே உண்மை. அவ்வாறு விளங்கியிருந்தால் தனது மக்களின் பாதுகாப்பு நிமித்தம் இப் போரினை முடிவுக்கு கொண்டு வந்து ஒரு சுயாதீன அரசாகவே இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு ர;யா உடனான நட்பு ஒப்பந்தங்களில்; கைச்சாத்து இட்டிருப்பார் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
ஆனால் இதில் யார் வெற்றி பெற்றாலும் பெரும் பாதிப்பை சந்திக்கப்போவது உக்ரைன் மக்கள் மட்டுமே. உக்ரைனை ஆளும் அமெரிக்க அடிமை தன்னாட்டு மக்களை பெரும் போரில் தள்ளியாவது தனது எஜமான விசுவாசத்தை நிரூபித்துக் கொள்ள தயாராக உள்ள போது போர் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி இன்று நீள்ச்சியடைகிறது.
எனினும் பார்க்கும் உலகிற்கு, அவர் தனது மக்களின் துன்பம் மற்றும் ஆவிக்கு ஒரு அரணாக நிற்கிறார். தனது தேசத்தை மூழ்கடிக்காமல் பாதுகாத்து வரும் ஒரு உன்னத தலைவராக காணப்படுகிறார் என்பதை மறுக்க முடியாது என்பதே உண்மை. இரண்டு சக்திகளுக்கும் இடையிலான இராணுவ இடைவெளியின் அளவைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நாளும் ஜெலென்ஸ்கியின் கடைசி நாளாக இருக்கலாம். அவரது தனிப்பட்ட விதி எதுவாக இருந்தாலும், அவர் ஹீரோவின் பாத்திரத்தை கொண்டுள்ளார். மேலும் பெரிய, நச்சு ஆளுமைகளின் கட்டளைகளுக்கும் மிகவும் நியாயமான மனிதர்களின் தலைமைக்கும் உள்ள வித்தியாசத்தை உலகுக்குக் காட்டியுள்ளார்.
அவர் மகத்தான உடல் தைரியத்தை கொண்டவர், ஒரு பதுங்கு குழியில் உட்காராமல், மாறாக சிப்பாய்களுடன் பகிரங்கமாக பயணம் செய்கின்றார். உக்ரைனில் அசைக்க முடியாத தேசபக்தி கொண்டு காணப்படுகின்றார் ஜெலன்ஸ்கி. மேற்குலகத்தில் மட்டுமன்றி உலகத்திலேயே ஒரு நல்ல மனிதனாக எல்லோர் மனதிலும் வலம் வருகின்றார் ஜெலன்ஸ்கி. ஆனால் முட்டாள்த்தனமான சில அணுகுமுறைகளால் பல அழிவுகளுக்கு காரணமாகிவிட்ட ஒரு மோசமான தலைவரும் ஜெலன்ஸ்கிதான்!