இதழ் 46

ஈழச்சூழலியல் 32

நற்போசணையாக்கம் – பின்னணி

நற்போசணையை அசேதன தாவரப்போசணைச் சத்துக்களினால் நீர் வளமூட்டப்படல் என வரைவிலக்கணம் செய்யலாம். எனினும், அதிகளவான நீர் வாழ் தாவரங்களைக் கொண்ட அல்லது அல்காக்களினால் மூடப்பட்டுள்ள ஒரு நீர்நிலையை அதன் நீரிலுள்ள போசணைச்சத்துக்களை பரிசோதிக்காமலே நற்போசணையடைந்துள்ளது எனப் பொதுவாகக் குறிப்பிடலாம்.இயற்கையான பல நீர்நிலைகளில் தாவரப்போசனைப்பதார்த்தம் குறைந்தளவிலேயே பொதுவாகக் காணப்படும். இந்த நிலை ஒலிகோடொருபிக் (Oligotrophic) எனப்படும். இந்த நிலையிலிருந்து யுடொருபிக் நிலையை அடைய மிக நீண்ட காலம் எடுக்கும். ஆனால், மனிதர்களின் நடவடிக்கைகளால் தாவரப்போசனைப்பதார்த்தங்கள் அதிகளவு நீர்நிலையை வந்தடைவதால் குறுகிய காலத்திலேயே ஒலிகோடொருபிக் நிலையிலிருந்து யுடொருபிக் நிலையை அடைகிறது. மனித கழிவுகள், மிருகங்களின் கழிவுகள், சலவைப் பொருட்கள், செயற்கையான பசளைகள் காரணமாக இந்நிலைமாற்றம் ஏற்படுகிறது. இச்செயற்பாடு கலாச்சார நற்போசணை என அழைக்கப்படுகின்றது. நீர்நிலைகளின் போசனை மட்டம் கூடும் போது அதன் உற்பத்தித்திறன் அதிகரித்து உற்பத்தியாகும் தாவரப்பகுதிகள் குளத்தில் நிறைநது படிப்படியாக அவை புவிப்பரவாக மாறுகின்றன.

Plants for Ponds and Water Gardens | HGTV

அதிகளவிலான விஞ்ஞானிகளின் பல வருட கால அயரா முயற்சியின் பயனாக தாவரங்களிற்கு பதினேழு வகையான போசணைச்சத்துக்கள் தேவை எனக் காட்டியுள்ளனர். இவை தாவர வளர்ச்சிக்கு அத்தியாவசியமான மூலகங்கள் என அழைக்கப்படுவதோடு, அவை ஒவ்வொன்றும் தமக்கேயுரிய பங்கினை வகிக்கின்றன. அத்தியாவசியமான மூலகங்களாவன:காபன், ஐதரசன், ஒட்சிசன், நைதரசன், பொசுபரசு, பொட்டாசியம், கல்சியம், மக்னீசியம், கந்தகம், செப்பு, இரும்பு, மங்கனீசு, நாகம், போரோன், மொலிப்டினம், குளோரின், நிக்கல் என்பனவாகும். இந்த அனைத்து பதினேழு மூலகங்களும் தாவர வளர்ச்சியில் ஒரே மாதிரியான முக்கியத்துவத்தினை கொண்டுள்ளன. இதில் ஒரு மூலகம் இல்லாவிட்டாலும் தாவரம் வளர்ச்சியடையாது. நைதரசன்,பொசுபரசு ஆகிய இரண்டுமே நீர் ஊடகங்களில் உள்ள தாவரங்களின் உற்பத்தித்திறனைப் பாதிக்கும் பொதுவான இரு மூலகங்களாகும். எனவேதான் நீரில் இவ்விரண்டு போசணைச் சத்துக்களின் செறிவும் அதிகரிக்கும் போது நீர் வாழ் தாவரங்களின் வளர்ச்சி அதிகரிக்கின்றது. கனடாவில் ஒன்டாரியோவில் மேற்கொள்ளப்பட்ட பல முழு ஏரி (Whole lake) பரிசோதனைகளில் இந்நீர்நிலைகளில் அல்காக்களின் வளர்ச்சியைத் தூண்டுவதில் பொசுபரசுவே எல்லைப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.கடந்த சில சகாப்தங்களில் உலகளாவியரீதியில் நடை பெறும் மாற்றங்களைப் பரந்த கண்ணணுடன் நோக்கும் போது, ஏனைய மூலகங்களை விட, பொசுபரசு நீர்நிலைகளுடன் சேருவதே அல்காக்களின் சடுதியான மற்றும் விரைவான அதிகூடிய வளர்ச்சிக்குக் காரணம் என அறியப்பட்டுள்ளது.

போசணைச் சத்துக்கள் பல வழிகளில் நீர் நிலைகளைச் சென்றடைகின்றன. மழை வீழ்ச்சியும் நைதரசனையும் பொசுபரசையும் கொண்டு வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மழை நீர் மண் மீது விழுந்த பின்னர் மேற்பரப்பு நீரோட்டத்தின் மூலமும் நீர்நிலைகளிற்கு போசணைச் சத்துக்களைக் கொண்டு வரும். ஏனைய வழிகளாவன. வானிலையாலழிதல், மண்கனிப்பொருட்கள்,வானிலையாலழிதல்,நிலமேற்பரப்பிலிருந்து வரும் அடையல்கள், களி, விவசாய நடவடிக்கைகளின் போது குழப்பப்படும் மண், இரசாயனப்பசளைகள், சேதனப் பசளைகள் என்பனவாகும். விரைவான இடைத்தாக்கத்தின் மூலம் பொசுபேற்று பசளைகள் மண்ணுடன் சேர்ந்து மெதுவாகக் கரையும் பொருட்களை உருவாக்கினாலும்,அது இறுதியாக நீரில் இரு வழிகளில் கரைகின்றது. நீர்நிலைகளை தாவரப் போசணைச்சத்துக்கள் அடையும் இன்னொரு வழி விலங்குகளும், தாவரங்களும் இறந்து சிதைவடையும் போது அவற்றிலுள்ள போசணைச்சத்துக்கள் நீர்நிலைகளை அடைவதாகும். வீடுகளிலிருந்து வரும் திண்மக் கழிவுகள், சாக்கடைகளை சுத்திகரிக்கும் தொகுதிகள், நகரக் கழிவுகள் என்பனவற்றின் மூலமும் நீர்நிலைகளை போசணைச்சத்துக்கள் அடைகின்றன. உலர் வலயத்தில் புல் வெளிகளில் பெரியளவிலான கால்நடைகள் உள்ளன. அவை நிலைகளிற்கருகே காணப்படுவதோடு அங்கு சாமியாரின். அங்கு மழை நீர் நேரடியாக விழுந்து அதில் அடங்கியுள்ள தாவரப் போசணைச்சத்துக்கள் நீர் நிலைகளிற்குக் கழுவிச் செல்வதோடு, அவற்றன் நீரின் மட்டத்தையும் உயர்த்துகின்றன.

தூய்மைபடுத்திகளில் பொஸ்பரஸ்

கி.மு 1500 ம் ஆண்டளவில் எகிப்தியர்கள் நீரில் கரையக்கூடிய சவர்க்காரம் போன்ற பதார்த்தத்தை சுத்தம் செய்ய உபயோகித்தனர் என வரலாறு கூறுகிறது. இதனை மிருக, தாவர கொழுப்பு மற்றும் எண்ணெயை காரமான உப்புகளுடன் கலந்து தயாரித்தனர். Nicholas leblanc என்ற பிரான்ஸ் நாட்டு இரசாயனவியலாளர் 1701 இல் சாதாரண உப்பிலிருந்து சோடியம் காபனேற்று உருவாக்கப்படும் செய்முறையை உலகுக்கு அறிவித்து அதற்கான காப்புரிமையை பெற்றதுடன் பெரியளவில் வர்த்தகத் துறையில் சவர்க்கார உற்பத்தி ஆரம்பமானது. சோடியம் ஐதரெக்சயிட் (கோஸ்டிக் சோடா), பொற்றாசியம் ஐதரெக்சயிட் (கோஸ்ட்டிக் பொற்றாசு) ஆகியன சவர்க்கார உற்பத்தியில் அதிகளவு பயன்படுத்தப்படும் பதார்த்தங்களாகும். முதலாம் உலக மகா யுத்தகாலத்தில் சவர்க்காரம் தயாரிக்கும் கொழுப்புக்கான தட்டுப்பாடு காரணமாக, சவர்க்காரம் தயாரிக்க தாவர விலங்கு கொழுப்புக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய பிரதியீட்டைக் கண்டுபிடிக்க ஐரோப்பிய விஞ்ஞானிகள் நிர்ப்பந்திக்கப் பட்டனர். இதன் காரணமாக 1916 இல் ஜேர்மனியில் செயற்கையான சலவைப் பதார்தத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும் இவ்வாறு தயாரிக்கத் தொடங்கின. 1930 இல் அமெரிக்காவே செயற்கை தூய்மையாக்கிகள் உற்பத்தியில் முதலிடம் வகித்தது. 1953 இல் அமெரிக்காவில் சவர்க்காரத்தை விட செயற்கை தூய்மையாக்கிகளே அதிகம் உற்பத்தி செய்யப்பட்டன. ஒரு பொதுவான செயற்கைத் தூய்மையாக்கி, ஊடுருவிப் பரப்பிகள் (Surfactants) மென்மையாக்கிகள் (builders) பளபளப்பாக்கிகள் (Brighteners) வாசனைப் பொருட்கள் (Perfumes) அழுக்கு மீள்படிவுத் தடுக்ககிள் (Anti dirt re-deposition agents) நொதிகள் (enzymes)கொண்ட ஓர் கலவையாகும்.

நீரின் கூடிய மேற்பரப்பிழுவிசை காரணமாக துணிகளில் நீர் குறைவாக சென்றடைவதை தவிர்ப்பதற்காக ஊடுருவிப் பரப்பிகள் (Surfactants சேர்க்கப்படுகின்றன. ஊடுருவிப் பரப்பிகளின் மூலக்கூறானது அதன் ஒருபக்கத்தில் எண்ணெய் மற்றும் மசகுகளையும் மறுபக்கத்தில் நீரையும் கவர்ந்திழுக்கக் கூடிய தனித்துவமான இரசாயனப் பண்பின் காரணமாக துணிகளில் உள்ள கறைகள், அழுக்குகள் என்பவற்றை அகற்றி நீரில் மிதக்கச் செய்கின்றன. ஒரு தூய்மையாக்கி  பல ஊடுருவிப் பரப்பிககளைக் கொண்டுள்ளது. தூய்மையாக்கிகளில் காணப்படும் பொஸ்பேட்ஸ் மென்மையாக்கிகள் (builders) எனக்கூறப்படுவதுடன் அவை ஊடுருவிப் பரப்பிகளின் (Surfactants) துய்மையாக்கும் வினைத்திறனை மேம்படுத்துகிறது.

Related posts

வெருளிகள் ஜாக்கிரதை

Thumi202121

பெண்ணே…….!

Thumi202121

இரும்பு மனிதன் புடின்

Thumi202121

Leave a Comment