இதழ் 46

பெண்ணே…….!

நிலை மாறும்…
நிகழ்காலம் நிழலாகி…
நிலாக்காலம் நிதமாகி…
நினையாளும் கனவு நிஜமாகும்!
விதிமாற்றி சதி நீக்கி…
கலிகாலக் கிலி போக்கி…
பகையாகும் பயம் தீர்ப்பாய்!
தாழ்வெண்ணம் தடையாகும்……
தன்மானம் தலைகாக்கும்……
துணிவே உன் துயர் போக்கும்….
நம்பிக்கை வை உன்னில்….
நல்வாழ்வு வரவாகும்….
குலம் கோத்திரம் என்று
குறைகூறும் கும்பலினை
கறையாகத் துடைத்திட்டு
நிறையாக உந்தன்
திறமைகள் வளர்த்திடு…
திறமான எதிர்காலம்
தீர்வாகும் உனக்கு!
வரவாகும் வறுமை
செலவாகும் காலம்
கண்டும் நீ கலங்காதே!
இன்னலும் இடுக்கணும்
இல்லாத வாழ்வா?
உன்னை நீ அறிந்து
உள்ளம் தெளிந்திடு!
தன்கையே என்றும்
தனக்குதவி ஆகிநிற்கும்
தத்துவம் புரிந்து
தடுமாற்றம் அகற்றிடு!
முடியும் என்று முனைப்புடன் பயணி!
ஏற்றிட இங்கு ஏணிகள் குறைவுதான்
தூற்றிடும் சமூகம்
போற்றிடும் நாள் வரும்..
உன்கையே என்றும்
உன் துணையாகிடும்…
உண்மையை நம்பி
உயர்ந்திடு உலகில்…

Related posts

வீண் செலவுகளை தவிர்ப்போமேன்!

Thumi202121

குறுக்கெழுத்துப்போட்டி – 42

Thumi202121

இரும்பு மனிதன் புடின்

Thumi202121

Leave a Comment