இதழ் 46

வீண் செலவுகளை தவிர்ப்போமேன்!

கொரோனா எனும் கொடும் நோயின் வீரியம் குறையும் முன்பாகவே, வரலாறு காணாத பெரும் பொருளாதார நெருக்கடி ஒன்றை எதிர்நோக்கியிருக்கிறது எமது தேசம்! பணத்தை சேமித்து வைத்திருந்தவர்கள் ஓரளவு தப்பிக் கொள்கிறார்கள். தினக் கூலிகளை நம்பி வாழ்பவர்கள் நிலை கவலைக்கிடமாகி இருக்கிறது.

அதிலும் தலைநகரை அண்டி வாழும் தினக்கூலிகளின் நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. உணவுப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி அவற்றை வாங்கினாலும் சமைப்பதற்கு எரிவாயு இல்லை அல்லது அதனை வாங்க வரிசையில் நின்றால் அன்றைய ஊதியம் இல்லை.

விரலுக்கேற்றளவே வீக்கம் என்பது தனிமனிதனுக்காக மட்டும் சொல்லப்படவில்லை. கடன் வாங்கி ஆடம்பரங்களை செய்பவர்களை ஊருக்குள் ஊதாரி என்பார்கள். எங்கள் தேசத்தின் இன்றைய பிரதான வருமான மார்க்கம் கடன். இதையெல்லாம் எப்படி திருப்ப செலுத்தப்போகிறோம் என்ற நீண்ட கால திட்டம் எதுவும் இல்லாமல் சமகாலத்தை சமாளித்தால் போதுமென்கிற மனநிலையில் தலைவர்கள் இருப்பது மிகப்பெரிய ஆபத்துக்களை தரவல்லது.

தலைமைகள் மட்டுமல்ல, இந்த காலத்தில் ஓரளவு வசதி படைத்தவர்கள் கூட ஆடம்பரமாக செலவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது. எனவே அரசாங்கத்தை மட்டும் குறை கூறுவது அர்த்தமற்றது. நாட்டின் ஒரு பகுதி பசியால் வாட மற்ற பகுதி கும்மாளமடிப்பது அரக்கத்தனம்.

வீட்டிலாகட்டும், வீதியிலாகட்டும், கோயிலிலாகட்டும் கொண்டாட் டங்களை எளிமையாக கடந்து செல்வோம். எஞ்சும் பணத்தில் பசித்தோருக்கு உணவளிப்போம். அந்த புண்ணியம் தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்து வரும்.

மக்கள் தொண்டு தானே
மகேசன் தொண்டு…!

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 42

Thumi202121

யார் இந்த இராவணன்?

Thumi202121

ஈழச்சூழலியல் 32

Thumi202121

Leave a Comment