ர~;சிய-உக்ரைன் மோதலும் ஐரோப்பிய நாடுகளின் எதிர் வினைகளும் சர்வதேச அரசியலிலில் ஐரோப்பிய நாடுகள் மீது அதிக கவனத்தை திருப்பியுள்ளது. ர~;சிய – உக்ரைன் போரை அமைதிக்கு நகர்த்த கூடிய ஆற்றலும் வாய்ப்பும் ஐரோப்பிய நாடுகளின் முடிவுகளிலும் செயற்பாடு களிலுமேயே தங்கியுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் நகர்வுகள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களாலும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப் படுகின்றது.
இந்நிலையிலேயே பிரான்சில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இரண்டாம் முறையும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தீர்மானமெடுக்கும் சக்தியாக காணப் படுவதனால் பிரான்ஸின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் முழு உலகினதும் கவனத்தையும் பெற்றுள்ளதுடன், சர்வதேச அரசியலில் பிரதான ஆய்வுப்பொருளாகவும் உருவாகி யுள்ளது. இக்கட்டுரையும் மக்ரோனின் இரண்டாம் கட்டத்தின் அரசியல் நகர்வுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் வாக்காளர்கள் ஏப்ரல்-24அன்று ஜனாதிபதித் தேர்தலின் போது தங்கள் நாட்டிற்கான இரண்டு வித்தியாசமான தரிசன ங்களுக்குள் தங்கள் தெரிவை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் நடந்த வாக்கெடுப்பின் முதல் சுற்றில் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்த, மக்ரோன் மற்றும் லு பென் ஆகியோர் ஏப்ரல்-24அன்று நடைபெற்ற இரண்டாம் நிலை போட்டிக்கு முன்னேறினர். மையவாத ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது தீவிர வலதுசாரி எதிரியான மரைன் லு பென்னின் சவாலைத் தடுக்கும் போட்டிக்களத்தை தேர்தலில் எதிர்கொண்டார்.
53 வயதான லு பென், இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து பிரான்ஸ் எடுத்துள்ள திசையில் இருந்து ஒரு அடிப்படை மாற்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பொருளாதார தேசியவாத, மிகவும் உள்நோக்கிய தளத்தை முன்வைத்துள்ளார். எனினும் மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பினூடாக பிரான்ஸை உயர்த்தும் உலகமயமாக்கப்பட்ட பிரான்சில் ஒரு தசைநாராக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டார்.
பிரான்ஸ் வாக்காளர்களின் எண்ணங்களை லு பென்னின் தேசியவாத கருத்துக்களை தாண்டி மக்ரோனின் பிரான்ஸை நெறிப்படுத்தும் ஆளுமை கவர்ந்துள்ளது. ஆதலாலேயே இரு தசாப்தங்களுக்கு பின்னர் பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி ஒருவர் இரண்டாவது தடவையாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைமையாக மக்ரோன் உயர்ந்துள்ளார். இரண்டாவது சுற்றில் மக்ரோன் 57.6 சதவீத வாக்குகளால் வென்றிருக்கிறார். மரின் லூ பென்னுக்கு 42.4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
பிரான்சின் எதிர்கால திசை ஆபத்தில் உள்ளதாகவே சர்வதேச அரசியல் அவதானிகளின் கருத்துக்கள் அமைகிறது. ஏப்ரல்-24அன்று, இம்மானுவேல் மக்ரோன் பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் ஐரோப்பாவிற்கான தனது நன்கு அறியப்பட்ட அபிலாi~களை நிறைவேற்றுவதற்கு முன்னோக்கி செல்லும் பாதை அகலமாகத் திறக்கப்படலாம் என்ற எண்ணங்களுடன் அனைத்து ஐரோப்பிய தலைநகரங்களிலும் நிம்மதிப் பெருமூச்சு இருந்தது.
ஆயினும்கூட, மக்ரோன் இரண்டாவது காலம், 2017இல் அவர் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதை விட மிகவும் சிக்கலான அரசியல் நிலப்பரப்பை எதிர்கொள்ளும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதைச் சுற்றியுள்ள உலகின் புவிசார் அரசியல் யதார்த்தங்கள் ஒரு முழுமையான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன. இந்த அடிப்படை மாற்றங்கள் பிரெஞ்சு ஜனாதிபதியின் அபிலாi~களை சிக்கலாக்கக்கூடும். மக்ரோன் 2.0இல் உள்ள பிரான்ஸ் களநிலவரங்களை உன்னிப்பாக அவதானிப்பதும் அவசியமாகிறது.
ஒன்று, பிரான்ஸ் கொள்கையளவில் இருதுருவ தோற்றப்பாட்டை இம்முறை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் மதிப்பாய்வில், அமெரிக்காவைப் போலவே பிரான்ஸ{ம் இரு வேறு துருவ அரசியல் பாதைகளில் பிளவுண்டு உள்ளது. மக்ரோன் தலைநகர் பாரிஸிலும் நாட்டின் மேற்கு, தென்மேற்கு, மத்திய பகுதிகளிலும் ஆதரவைப் பெற்றிருக்கிறார். மரின் லூ பென் நாட்டின் வடக்கே கைத்தொழில் மையப் பிராந்தியங்களிலும் தெற்கு மத்தியதரைக்கடல் பகுதிகளிலும் கடல் கடந்த நிர்வாகப் பிராந்தியங்களிலும் அமோக ஆதரவைப் பெற்றிருக்கிறார். பெரு நகரங்களின் மையப் பகுதி வாக்காளர்கள் மற்றும் உயர்-நடுத்தர வர்க்கத்தினர், வயோதிபர்கள் மத்தியில் மக்ரோன் மிகுந்த செல்வாக்கைப் பெற, கிராமப்புற வாக்காளர்களும் குறைந்த வருமானம் பெறுகின்ற வர்க்கத்தினரும் மரின் லூ பென்னுக்கு வாக்குகளை வழங்கியுள்ளனர்.
‘நாட்டின் மிகப் பெரிய பிளவை கிராமங்கள், நகரங்கள் என இரண்டு வகைக்குள் கற்பனை செய்வது தவறாகும். உண்மையில் பிளவு சமூகங்களுக்குள்ளும் தலைமுறைகளுக்கு இடையிலேயுமே ஏற்பட்டுள்ளது.”
என்று பிரான்ஸின் ஐPழுளுழுளு தேர்தல் மதிப்பாய்வு மையத்தின் பணிப்பாளர், பிரான்ஸ்-24 செய்திச் சேவைக்குத் தெரிவித்திருக்கிறார்.
இரண்டு, மக்ரோன் 2017 தேர்தலில் பெற்ற 66.10 சதவீத வாக்குகளை விட 8.5 வீதம் குறைவான வாக்குகளையே வென்றிருக்கிறார். மக்ரோன் இளம் வாக்காளர்களது ஆதரவைப் பெற்றுக் கொள்ளவும் தவறியுள்ளார். ஐPளுழுளு பகுப்பாய்வுத் தரவுகளின் படி, 18-24 வயதுக்கு இடைப்பட்ட வாக்காளர்களில் 61 வீதமானோர் லூ பென்னுக்கே வாக்களித்துள்ளனர். அதே வயதுப் பிரிவினரில் 41 வீதம் பேர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்கவில்லை. மரின் லூ பென்னின் வாக்கு அதிகரிப்பு மக்ரோனின் வெற்றியை விடவும் லூபென்னின் தோல்வி மீதே கவனத்தை குவித்துள்ளது. பிரபல லூ மொன்ட் (டுநஆழனெந) பத்திரிகை மக்ரோனின் வெற்றியை ‘உகவை இல்லாத வெற்றி” என்றே குறிப்பிட்டுள்ளது.
ஜூனில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் மக்ரோனுக்கு அதிபர் தேர்தலின் மூன்றாவது சுற்றுப் போன்றது என்று எதிரணியினர் விமர்சிக்கின்றனர். மரின் லூ பென்னைத் தோற்கடிப்பதற்காக மக்ரோனுக்குச் செலுத்தப்பட்ட வாக்குகள் தவிர்க்கமுடியாத தெரிவிற்கு உட்பட்டவை. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் அவ்வாறான நிலைமை இருக்கப்போவதில்லை. மக்ரோனின் கட்சி பெரும்பான்மை இழக்கவும், தீவிர வலதுசாரிகளும் இடது சாரிகளும் சபையின் பெரும்பான்மையாக நிறைப்பதற்கும் இம்முறை வாய்ப்பிருக்கிறது என்ற உரையாடல் தேர்தல் முடிவுகளின் பின்னர் சிலாகிக்கப்படுகிறது.
மூன்று, உக்ரைனில் ர~;சியாவின் படையெடுப்பின் விளைவாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிர்வகிப்பதில் மக்ரோனுக்கு சிறப்பு கவனம் தேவைப்படும். ஏனெனில் மோதலின் முதல் மாதங்களில் ஐரோப்பிய நாடுகளால் நிரூபிக்கப்பட்ட நோக்கத்தின் ஒற்றுமை மற்றும் செயல்பாட்டின் வேகம் ர~;சியாவிற்கு எதிரான எரிசக்தி தடைகள் பிரச்சினையில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஜேர்மனி, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் புடினின் எச்சரிக்கைக்கு பணிந்து ர~;சிய நாணயமான ருபீளில் எரிவாயுவை கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ளதாக செய்திகள் உலாவுகிறது.
அதுமட்டுமன்றி ர~;சிய-உக்ரைன் மோதல் ஆரம்பிக்கப்பட்டதற்கு பிற்பட்ட மூன்று மாத காலப்பகுதிக்குள் ர~;சியாவிலிருந்து அதிக எரிபொருள்களை கொள்வனவு செய்த நாடாக ஜேர்மனியே காணப்படுகின்றது. இவ்முரண்பாட்டு நிலைகள் மக்ரோனின் ஐரோப்பிய எழுச்சி என்ற எண்ணங்களுக்கு பெரும் சவாலான விடயமாக காணப்படுகிறது. ர~;சியா-உக்ரைன் மோதல் வியத்தகு முறையில் ஐரோப்பிய சிந்தனையையும் செயல் முறையையும் மாற்றுகிறது.
எனவே, மக்ரோனின் இரண்டாம் பயணம் மிகவும் நெருக்கடிக்குள்ளேயே ஆரம்பமாகிறது. தேர்தல் வெற்றிக்கு பின்னரான ஈபுள் கோபுர உரையில், ‘நாம் ஒன்றாக இணைந்து பிரான்ஸை மேலும் சுதந்திரமானதாகவும் ஐரோப்பாவை மிகவும் வலிமையானதாகவும் மாற்ற முடியும்” என மக்ரோன் தெரிவித்திருந்தார். எனினும் மக்ரோனின் எண்ணங்கள் ஈடேறுவதில் அதிக சிக்கல்கள் காணப்படுகிறது. மக்ரோன் வலியுறுத்தும் ஒற்றுமை என்பது பிரான்ஸிலும், ஐரோப்பிய நாடுகளிடையேயும் அதிக அச்சுறுத்தலுக்குள்ளாகியே காணப்படுகிறது. இவ்வாறான சூழலில் பிரான்ஸின் சுதந்திரத்தையும், ஐரோப்பாவின் வலிமையையும் பேணுவது மக்ரோனின் இரண்டாவது ஆட்சி பருவத்தில் சவாலானது என்பதுவே அரசியல் ஆய்வாளர்களின் எண்ணங்களாக உள்ளது.