இதழ் 47

சாதல் தூது…!

ஒரு மனம் பல பசி
பசி வெளி தனை நிழல்

நிழல் நிஐம் வரம் அவள்
அவள் எனை ஆழ் கடல்

கடல் நிறம் நீல வானம்
வானம் வளம் பறக்கும் றெக்கை

றெக்கை எனும் சுகந்திர தாகம்
தாகம் தீரா மந்திரக் காதல்

காதல் எனும் மனிதனின் கடவுள்
கடவுள் அழியும் அறியாமைச் சாத்தான்

சாத்தான் பாடும் இனிய இசை
இசை எனல் அன்பில் கிறக்கம்

கிறக்கம் தோய்ந்த கண்ணில் முத்தம்
முத்தம் செய்யும் ஈரம் மழை

மழையில் நனையும் இதழ்கள் நீவீர்
நீவீர் நீங்கி மருங்கும் இதயம்

இதயம் இணைந்த இரவில் உருவம்
உருவம் மறைந்து மகிழும் யாவர்

யாவர் உரைக்கும் பயணச் சாதல்
சாதல் தூது நானும் நீயும்

நீயும் அகலல் அல்லல் தீது
தீதும் திரியும் ஒருநாள் அணைப்பில்

Related posts

என்னவன் அவன் – 2

Thumi202121

வினோத உலகம் – 12

Thumi202121

மெகா ஸ்டார் மெக் லேனிங் – 02

Thumi202121

1 comment

Leave a Comment