இதழ் 47

வினோத உலகம் – 12

மெக்சிகோ உயிரியல் பூங்காவில் சுமார் 38°C வரையான கடும் வெப்பத்தில் வாடும் விலங்குகளுக்கு பணியாளர்களால் ஐஸ்கிரீம்கள் தயார் செய்து வழங்கப்பட்டுள்ளன.

சிறுத்தைப்புலிகளுக்கு மாமிசத்தால் ஆன ஐஸ்கிரீமும் குரங்குகளுக்கு பழங்களால் ஆன ஐஸ்கிரீம்களும் வழங்கப்பட்ட அதேவளை விலங்குகள் குளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

ஜப்பானில் குழந்தைகளுக்கான பல் மருத்துவர்கள் பயிற்சி பெறுவதற்காக ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கண்களை உருட்டிக்கொண்டு குழந்தைகளை போலவே அழும் இந்த ரோபோவிற்கு Pedia Roid என பெயரிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பல் சிகிச்சை அளிக்கப்படும்போது, அவர்களிடம் ஏற்படும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர்.

பிரேசிலை சேர்ந்த 100 வயதான வால்டர் ஆர்த்மான் என்ற முதியவர் 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

துணி உற்பத்தி நிறுவனத்தில் சாதாரண ஊழியராக வேலையில் சேர்ந்த ஆர்த்மேன் படிப்படியாக உயர்ந்து நிர்வாக பதவிக்கு வந்து, இறுதியில் விற்பனை மேலாளராக ஆகியுள்ளார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிய சில நாட்களிலேயே ஷட் டவுன் ஆனதை அடுத்து, அந்நிறுவனம் கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை என கூறி மகாராஷ்டிரா மாநிலத்தில் வாடிக்கையாளர் வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தை சேர்ந்த சச்சின் கீட் என்ற நபர் தனது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழுதையை கட்டி இழுத்து சென்றுள்ளார். மேலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை நம்ப வேண்டாம் என்று கூறும் பதாகைகளையும் வைத்திருந்தார். ஸ்கூட்டரை கழுதை இழுத்து செல்லும் காட்சிகள் அடங்கிய புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யமஹா நிறுவனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான பவர் ஸ்டீரிங்கை உருவாக்கி வருகிறது.

இன்று வரை இந்த தொழில்நுட்பம் கார்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்த தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களிலும் பயன்படுத்த யமஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி எலெக்ட்ரிக் பவர் ஸ்டீரிங் தொழில்நுட்பத்திற்கான ப்ரோடோடைப் இந்த ஆண்டே மோட்டார்சைக்கிள் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது.

Related posts

வற்றிக்கொண்டிருக்கிறது தேசம்

Thumi202121

சித்திராங்கதா – 45

Thumi202121

விண்ணதிர் பரணி

Thumi202121

Leave a Comment