Uncategorized இதழ் 48

ஈழச்சூழலியல் 34

உழவியல் மற்றும் சூழலுக்கான மண் பொசுபரசின் மாறுநிலை (Critical) அளவு (தொடர்ச்சி)

அனேகமான அபிவிருத்தியடைந்த நாடுகளில், பெரும்பாலான விவசாயிகள் கட்டணம் செலுத்தி அங்கீகாரம் பெற்ற ஆய்வு கூடங்களில், தங்களது மண்ணின் தாவரப் போசனைப் பதார்த்தங்களை பரசோதித்துக் கொள்கின்றனர். இலங்கையிலும் விவசாயத் திணைக்களம் மண் பரிசோதனை செய்து பயிர்களுக்கேற்ற உரம் சிபாரிசு செய்யும் அத்தகைய சேவையை விவசாயிகளுக்கு வழங்குகின்றது. மண்ணில் கிடைக்கக் கூடிய பொசுபரசின் அளவு அதிகரிக்கும் போது, மண்ணரிப்பு, மேற்பரப்பு நீரோட்டம், மண்ணுடாக நீர் வடிதல் மூலம் மண்ணிலிருந்து இழக்கப்படும் பொசுபரசு வீதமும் அதிகரிப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர். உண்மையில் மண்ணில் பொசுபரசை வைத்துக் கொள்ளும் நிலைகள் நிரம்பலடையும் மட்டத்தை விட மேலதிக பொசுபரசு உரம் இடல், மழை மேற்பரப்பு நீரோட்டம் மூலம் பொசுபரசு இழத்தலை பொதுவாக அதிகரிக்கச் செய்கிறது.

1960 தசாப்த நடுப்பகுதி அளவில் பொசுபரசு உரங்களின் காரணமாக நீர்நிலைகளில் பொசுபரசின் செறிவு கூடுவது சர்வதேச நிலையில் பாரிய சூழல் பிரச்சினையாக ஆரம்பமானது. சூழலுக்கான மண்ணின் மாறுநிலை பொசுபரசின் உயர்மட்ட அளவு நிர்ணயம் செய்யப்பட வேண்டிய தேவையை பல நாடுகள் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளன. சில நாடுகள் ஏற்கனவே இவ் உயர்மட்ட அளவை Olsen P50 – 60 ppm ஆக நிர்ணயித்துள்ளன. உழவியல் மண்ணின் உயர் மட்ட பொசுபரசு அளவு என்பது அதனைவிட கூடுதலாக பசளை இடப்படும் போது மேலதிக இலாபம் எதனையும் தராத நிலையாகும். சூழல் தொடர்பான உயர்மட்ட அளவு என்பது அதனை விட கூடுதலாக இருக்கும் போது அது நீர் நிலைகளின் பொசுபரசு செறிவினைக் கூட்டி நற்போசனை நிலையை தோற்றுவிப்பதாகும். சூழல் தொடர்பான உயர்மட்ட அளவினைத் தீர்மானிக்கும் யோசனை விவேகமுள்ளதும் தேவையானதுமாயினும் மண் வகை, நில அமைப்பு, விவசாயக் கால நிலை மற்றும் சமூக, அரசியல், கலாசார நிலமைகள் வேறுபடுவதால் எல்லா நிலங்களுக்கும் பொதுவான ஒரு அளவு மட்டத்தினைத் தீர்மானிப்பது சாத்தியமற்றதாகும்.

நுவெரெலியாவிலிருந்து பெறப்பட்ட 1600 மண் மாதிரிகளில், 50%க்கும் அதிகமானவை 60 ppm விட அதிக பொசுபரசைக் கொண்டிருந்தன. சில மாதிரிகள் 300 ppm விட அதிகமாகவும், ஒரே ஒரு மாதிரி 400 ppm விட அதிக பொசுபரசைக் கொண்டிருந்தது. இவ்வாறான அதிகரித்தளவான பொசுபரசு ஏனைய நாடுகளில் காணப்படுவது மிகவும் அரிதே.அதிக பொசுபரசைக் கொண்ட மண் நுவரெலிய விவசாயிகளுக்கு சுற்றாடல் ரீதியாக எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாவிடினும் 100 –200 மைல்களுக்கு அப்பால் வாழும் மக்களின் குடிநீரின் பாதுகாப்புக்கு அது ஒரு பெரும் அச்சுறுத்தலாகலாம். பசளை இடுவதனால் மண்ணில் பொசுபரசு அதிகரிப்பு ஏற்படுவதனை உணர்ந்த சில நாடுகள் இந்த நிலமையை கட்டுப்படுத்த சட்ட விதிகள்மற்றும், வரையறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் இடகோ (Idaho) மாநிலம் அவைகளது விவசாய நிலங்களில் Oslen P இன் அளவை 40 ppm ஆக மட்டுப் படுத்தியுள்ளது. மண் பரிசோதனை அளவு 40 ppm P ஐ விட அதிகரிப்பின் பயிரினால் உறிஞ்சி அகற்றப்படும் உயர் பொசுபரசின் அளவையே விவசாயிகளால் இடுவதற்கு அனுமதிக்கப்படும். இதே மாதிரியான சட்டம் கனடாவின் மனிடோபாவில் 2007(41) இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டம் இலங்கையில் நநடைமுறைப்படுத்தம் நிலை ஏற்பட்டால் தற்போது மரக்கறித் தோட்டங்களில் பொசுபரசு பசளைகள் இடும் வீதம் சட்டவிரோதமானதாகக் கருதப்படலாம். உரத்தை தடை செய்வதல்ல அதற்கு மாற்றீடு,பயிர் உற்பத்தி குறைவடையாமல் மண் பொசுபரசை சூழல் சார்ந்த பாதுகாப்பான அளவு மட்டத்துக்குக் குறைப்பதற்கு போசனை முகாமைத்துவத்துக்கான திட்டம், மண் பரிசோதனை என்பன வெற்றிகரமாக பல அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நற்போசணைக்குள்ளாகிய நீர் நிலைகளை வகைப்படுத்தல்

இயற்கை நிகழ்வுகளான மண் கனியுப்புக்கள் சிதைவடைதல், மண்சரிவு, நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பு போன்றவை, மனித நடவடிக்கைகளின் காரணமாக நீர் நிலைகள் வித்தியாசமான அளவில் தாவரப் போசனைகளைக் கொண்டுள்ளன. மண் போசனை அளவைப் பற்றி விளக்கமளிக்கவும், பொருத்தமான முகாமைத்துவ நடைமுறைளை எடுக்கவும்  நீர்நிலைகளைப் வகைப்படுத்துதல் முக்கியமானதாகும். தாவர உயிர்த்திணிவு, தெளிவான நீரின் ஆழம், குளோரபில் அளவு, நைதரசன், பொசுபரசின் செறிவு போன்றவற்றை அடிப்படையாக வைத்து குளத்தை அல்லது நீர்த்தேக்கங்களை வகைப்படுத்தும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எவ்வாராயினும் வகைப்படுத்தல்களுக்கிடையே எல்லைகளை நிரணயிப்பதில் பல கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. நீரில் காணப்படும் பொசுபரசின் அளவை மையப்படுத்தி ஐரோப்பாவின் இணைந்த ஆராய்ச்சி நிலையம் 2012 இல் முன்வைத்த வகைப்படுத்தலின் படி Oligotrophy, Oligo-mesotrophy, mesotroohy, Eutrophy, Hypereutrophy என்றவாறாக வகைப்படுத்த்தப்பட்டுள்ளது.நீரின் பொசுபரசு அளவு 20 – 30 ppm விட அதிகரிக்குமாயின் சில குளங்களில் அல்காக்களின் உயிர்த்திணிவு அதிகரிப்பதாக ஆராய்ச்சித் தகவல்கள் காட்டுகின்றன.

Algae overtakes a lake in Iowa.

கனடாவின் அனேகமான குளங்கள் குறைவான போசனை நிலையைக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் குறைவான சனத்தொகையும் அதன் காரணமாக நீர் நிலைக்குச் குறைவான போசணை சென்றடைவதுமாகும். இதற்கு மாறாக சிறிய நீர்நிலைகள் அதிக சனத்தொகை மற்றும் நீரேந்தும் பிரதேசத்தில் இயங்கும் செறிவான விவசாயப் பண்ணைகள் காரணமாக அமெரிக்காவில் அதிக சதவீதத்தில் நற்போசனைக்குள்ளான நீர்நிலைகள் காணப்படுகின்றன.நற்போசனைக்குள்ளான அனேகமான நீர் நிலைகள் சில தசாப்தங்களுக்கு முன் குறைபோசனை கொண்டனவாக இருந்தன. குறைபோசனை நிலையிலிருந்து அதி போசணைக்கு மாறுவதற்கான காரணம் மனிதநடவடிக்கைகளேயாகும். குறைபோசணையுடைய குளங்கள் அனேகமாக மிகவும் தெளிவான நீரைக் கொண்டிருக்கும். அதிபோசணைக்குள்ளான குளங்கள் கலங்களுடையதாகவும், அதிகளவு அல்காக்களின் மற்றும் தாவரங்களின் வளர்ச்சியையும் கொண்டிருக்கும் நீரில் குறைந்த அல்லது அதிகரித்த பொசுபரசு ஆனது முறையே, “நல்லதும் விரும்பத்தக்கதும்”;, “கூடாததும் விரும்பத்தகாததும்”; என கண்டவாறு சுயமாக பொதுமைப்படுத்திக் கூற முடியாது. ஏனெனில் எதிர்பார்த்த நோக்கத்துக்கேற்ப இது பொருந்தக்கூடியதாக அல்லது பொருத்தமற்றதாக அமையலாம். உதாரணமாக மீன்பிடித்துறையானது, மீனுக்கு உணவாகக்கூடிய நீர்த்தாவரங்களின் வளர்ச்சியைத் தூண்டும். மிதமான அளவு தாவரப் போசனைகளை நீர்நிலைகள் கொண்டிருப்பதனை விரும்பலாம். அதே வேளை பொதுமக்களுக்கு குடிநீரை வழங்கும் நிறுவனம் அல்காக்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யாத குறைவான போசனை நிலையை நீர்நிலைகள் கொண்டிருப்பதனை விரும்புவார்கள். உண்மையில் உயிரியல் தொகுதியின் சிறந்த வளர்ச்சிக்கு உதவும் பொருத்தமான பொசுபரசின் அளவைத் தீர்மானிக்கலாம்.Erie குள முகாமைத்துவத் திட்டம் அல்காக்களின் வளர்சிக்கு உதவும் ஆனால் அல்காக்களின் மலர்ச்சிக்கு இட்டுச் செல்லாத மொத்தமான பொசுபரசின் அளவை 20 – 30 மைக்ரோகிராம்/லீட்டர் என சிபாரிசு செய்கிறது. ஐக்கிய அமெரிக்காவின் சூழல் பாதுகாப்பு நிறுவனம் 1976 இல் நற்போசனையாவதைத் தடுப்பதற்கு பொசுபரசின் உயர் மட்டத்தை 25 மைக்ரோ கிராம்/லீட்டர் எனப் பரிந்துரைத்தது.

இலங்கையில் நெற்செய்கை, சிறுகாலப்பயிர்களுக்கு 50 வருடங்களுக்கு முன்பு இடப்பட்ட பொசுபரசு பசளைகளின் அளவு,தற்போது இடப்படும் அளவுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக இருந்தது. முந்திய நிலமைகளை விட தற்போது நீர் நிலைகளில் பொசுபரசின் செறிவானது அதிகளவில் காணப்படுகிறதா என்பதே அடிக்கடிக் கேட்கப்படும் கேள்வியாகும். கலாவெவா, மின்னேரியா குளம், நுவரவெவா, பராக்கிரம சமுத்திரம் ஆகியன வடமத்திய மாகாணத்தில் உள்ள நீர்த்தேக்கங்களாகும். இவற்றில் பொசுபரசின் அளவு 1960 இல் இருந்து பல மடங்காக அதிகரித்துள்ளது. மிதமான போசனை நிலையிலிருந்து அதி போசணை நிலைக்கு மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆராய்வோம்…………….

Related posts

Immediate Advice For italian mail order brides – What’s Needed

Thumi2021

Clear-Cut Literary Analysis Conclusion Example Methods Around The Usa

Thumi2021

French Brides Online Discover Single French Girls For Marriage & Dating Now

Thumi2021

Leave a Comment