இதழ் 48

வினோத உலகம் – 13

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உலகின் விலை உயர்ந்த காரை விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது. தனியார் ஏலத்தில் மெர்சிடிஸ் 1955 300 SLR Uhlenhaut மாடல் 135 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த கூப் ப்ரோடோடைப் மாடலின் பெயர், இதனை உருவாக்கியவரும், மூத்த பொறியாளருமான Rudolf Uhlenhaut-ஐ கௌரவிக்கும் வகையில் சூட்டப்பட்டு இருக்கிறது.

முன்னதாக உலகின் விலை உயர்ந்த கார் என்ற பெருமையை 1962 இல் பெராரி 250 GTO மாடல் பெற்று இருந்தது. இந்த கார் 48.4 மில்லியன் டாலர்களுக்கு 2018 இல் விற்பனை செய்யப்பட்டது..

பிரிட்டன் ராணியாக எலிசபெத் முடிசூடப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு 15 கிலோ எடையும் 8.7 அங்குலமும் கொண்ட மிகப்பெரிய தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்ற பாதிப்பு இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது. இதன் விளைவாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மனிதர்கள் தூங்கும் நேரம் குறைவடையும் என டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒன் ஏர்த் இதழில் வெளியாகிய இவ் ஆய்வு முடிவுகள் மொத்தம் 68 நாடுகளில் 47 ஆயிரத்திற்கு அதிகமான வயது வந்தவர்களிடமிருந்து பெறப்பட் 70 லட்சம் தரவுகளை அடிப்படையாக கொண்டவையாகும். அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 50 முதல் 58 மணி நேர தூக்கத்தை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்புக்கு  தொடர்ந்து 2வது முறையாக எத்தியோப்பியாவை சேர்ந்த டெட்ரோஸ் அதனோம் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தைச் சேர்ந்த டோர் பகதூர் கபாங்கி என்ற 73 செ.மீ (2.5 அடி) உயரம் கொண்ட 18 வயதான இளைஞர் உலகின் மிக குள்ளமான மனிதர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

ஜமைக்காவில் வனவிலங்கு பூங்கா ஒன்றில் சிங்கத்திடம் சேட்டை செய்த ஊழியர் ஒருவர் பரிதாபமாக விரலை இழந்துள்ளார்.  பார்வையாளர்களை கவர்வதற்காக சிங்கத்தை சீண்டிய போது ஆத்திரமடைந்த சிங்கம் அவரது வலது கையை கடித்துள்ளது. மிரண்டு போன பணியாளர் கையை பின்னால் இழுக்க முற்பட்ட போது அவரது மோதிர விரலை சிங்கம் பறித்துவிட்டது. ஆரம்பத்தில் வேடிக்கை என நினைத்த பார்வையாளர்களுக்கு இந்த சம்பவம் இறுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஈழச்சூழலியல் 34

Thumi202121

பூப்பந்தாட்ட போட்டித் தொடர்
Thomas cup

Thumi202121

காத்திருக்குமாம் கொக்கு!

Thumi202121

Leave a Comment