இதழ் 48

மனப்பசி

ஆத்மா வரைந்த கோடுகள்
சிறு பிள்ளை, கிறுக்கல் போல்
அன்பு விளையாட்டு நீளுகிறது.
அடுக்கி சேர்த்த தூரிகையெல்லாம்
உடைபட்டு சிதறுகிறது.

தேடாத தெருவெங்கும்
தினமும் நட்ச்சத்திரம்
ஆய்ந்து
அளக்காமல்
அணைக்காத உளமெங்கும்
கொட்டி தீர்த்திட
அழகு மானோ
அதிசய மயிலோ
அன்பது பாய்ச்சுகையில்
நொடிப்பொழுதில்
பறந்தலைகிறாய்.

ஆம்பலையும்
அழகு நதியையும்
ஆதவ கதிர்களையும்
ஆழத்தில் முத்தையும்
அற்புத வரையையும்
நீ இசைவாயா
உனக்காய் பரிசளிப்பதற்கு!!!
தனிமைத் தீவில்
கொடியது எண்ணம்
நெடியது எண்ணம்
மடியது உன் வண்ணம்
தேடியது உன் வதனம்
கூடியது உன்னால் சோகம்
பாடியது புலம்பல் கீதம்
வாடியது அழகு புருவம்
நாடியது கரத்தின் நிலை
கூட்டிவருவேனா கடந்த காலத்தை
தேற்ற வருவரோ
மனத்தின் கோலத்தை
வண்ணம் இறைத்திட
தரிசணம் தருவாயோ

தேடல் மனமே
தேடும் பூ
பூத்திடுமா

வாடல் மனமே
வாட்டிடும் தென்றல்
வருடிடுமா

மனப்பசியில்
காத்திருக்கிறது…….

Related posts

பூப்பந்தாட்ட போட்டித் தொடர்
Thomas cup

Thumi202121

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது — 2022

Thumi202121

சித்திராங்கதா – 46

Thumi202121

Leave a Comment