இதழ் 48

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது — 2022

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் செஞ்சொற்செல்வர். கலாநிதி. ஆறு. திருமுருகன் அவர்களைக் கெளரவித்து பிறந்தநாள் அறநிதியச் சபையை உருவாக்கியுள்ளது. ஆண்டுதோறும் எம் மண்ணில் இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஆற்றலாளர் இருவரைத் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவித்தல் என்ற திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். 2022ம் ஆண்டுக்கான இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது பெறுபவர்களாக பின்வரும் இருவரை அறநிதியச்சபை தெரிவு செய்துள்ளனர்.

கலாநிதி.சி.க.நவரட்ணராஜா
சிரேஷ்ட விரிவுரையாளர்,
பொறியியல் பீடம்
பேராதனைப் பல்கலைக்கழகம்

திரு.இராமச்சந்திரன் இரமணன்
ஆசிரியர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

கலாநிதி.சி.க. நவரட்ணராஜா,
B.Sc. (Eng), M.Sc. (Eng), PhD in Engneering.

கலாநிதி. சின்னையா கருப்பையா நவரட்ணராஜா அவர்கள் 27.09.1976 மலையக சமூகத்தின் டிக்கோயா போர்டைஸ் கொணக் கொல்லை தோட்டத்தில் பிறந்தார். தந்தை பெயர் சின்னையா கருப்பையா, தாயாரின் பெயர் சுந்தரம் சரோஜினி. இவர் தமது ஆரம்பக் கல்வியை டிக்கோயா புளியாவத்தை தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை டிக்கோயா புளியாவத்தை தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியிலும் (Haton Highlands College) பெற்றுக் கொண்டார்.

இவர் பேராதனை வீதி, கண்டியில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். மனைவி திருமதி பிரஷாதினி குமாரசாமி. இவர் சென்னை கலாஷேத்ரா நுண்கலைக் கல்லூரியில் பரதநாட்டியத்தில் பட்டம் பெற்றவர். தற்போது கண்டி நகரில் பிரபல்யமான கலாசமர்ப்பணா ந்ருத்யாஷேத்ரா எனும் நடனக் கல்லூரியின் நிறுவுனராகவும் கண்டி கச்சேரியின் சந்தச கலாபீடத்தில் பரதநாட்டிய ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார். இவரது மகன் சாய்அக்சத் கண்டி திருத்துவ கல்லூரியில் தரம் 04ல் கல்வி கற்கின்றார்.

1994/ 1995 ஆண்டு காலப் பகுதியில் உயர்தர, கணிதப் பிரிவில் அமரர் ஆசிரியர் ஜீவராஜன் அவர்களுடைய பெருமைக்குரிய முதலாவது தொகுதி மாணவராக ஹைலன்ட்ஸ் கல்லூரியிலிருந்து பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி பொறியியல் பீடத்தின் இளமானி பட்டத்தை (BSc in Engineering -Hons First class) பெற்றுக் கொண்டார்.

பட்டப் பின் மேற்படிப்புக்களின் விபரம்

  1. M.Sc in Engineering, University of Oklahoma. USA (GPA4.0/4.0)
  2. PhD in Engineering, University of Wollongong. Australia (With Examiner’s, Commendation for outstanding PhD Thesis)

இளமானி பட்டம் பெற்றதுடன் கட்டடப் பொறியியல் பிரிவில் சிறந்த பெறுபேற்றுடன் முதலாம் தர சித்தியைப் பெற்று புலமைப் பரிசில் மூலம் அமெரிக்காவின் ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவில் முதுமானிப் பட்டத்தையும் அவுஸ்ரேலியாவின் வொலாங்கொங் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் தனது கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

கடமையாற்றிய/ கடமையாற்றுகின்ற இடங்கள்/ பல்கலைக்கழகங்கள்

2007 இல் இளமையாக இருக்கும் போதே தனிப்பட்ட பகுதி நேர கணித ஆசிரியராக கடமையாற்றிய இவர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதற்கு முன் அப்கொட் பெயார்லோன் த.வி.ன் அரசாங்க நியமன ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் 2001 இல் இளமானிப் பட்டப்படிப்பை முடித்த பின் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற்பீடத்தில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.

அமெரிக்காவில் முதுமானிப் பட்டத்தை நிறைவு செய்த பின் கலிபோர்ணியா மாகாணத்தில் Group Delta Consultants Inc எனும் ஒரு தனியார் பொறியியல் நிறுவனத்தின் திட்டப் பொறியியலாளராகவும் கலிபோர்ணியா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட தொழில் முறை பொறியியலாளராகவும் 2006 -2011 வரை கடமையாற்றியுள்ளார்.

2012ம் ஆண்டு தொடக்கம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றுகிறார்.

புவி தொழில்நுட்பப் பிரிவில் முதுமானிப் பட்டம் வழங்கும் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் போன்றவற்றின் பொறியியல் பீடத்தின் புவித் தொழில்நுட்பவியல் பிரிவில் வருகைதரு விரிவுரையாளராக கடமையாற்றுகின்றார்.

க.பொ.த உயர்தர பொறியியல் தொழில்நுட்ப பாட பிரிவின் தமிழ் மொழி மூலமான பிரதம பரீட்சகராக தொழிற்படுகின்றார்.

சேவை அடிப்படையிலான கடமைகள்

e- kalvi தொண்டு நிறுவனத்தின் மூலம் இலங்கையில் நடத்தப்படும் e- kalvi செயற்பாடுகளுக்கான மலையக ஒருங்கிணைப்பாளராக மற்றும் மலையக பல்கலைக்கழக மாணவர்களையும் பல்கலைக்கழக பட்டதாரிகளையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ஸ்டெம் (STEM Team Halton) அமைப்பினுடைய நிறுவுனராகவும் தலைவராகவும் மற்றும் ஆசிரியர் ஜீவராஜன் ஞாபகார்த்த மாணவர் அமைப்பினுடைய தற்போதைய தலைவராகவும் சேவையாற்றி வருகின்றார். இதன் மூலம் 42 பின் தங்கிய தோட்டப் பாடசாலைகளுக்கு e- kalvi நிகழ்ச்சிகளினால் கல்வியில் அனுசரணை வழங்கப்படுகிறது.

பொருளாளர், பேராதனை பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம்.

தமிழ் பொறியியலாளர்கள் ஒன்றியத்தையும் (TEF – Tamil Engineers Foundation) அவுஸ்ரேலியா பல்கலைக்கழக புலமைப்பரிசில் திட்டத்தில் ஒருங்கிணைத்து பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களுக்கான கல்வி மானிய உதவியை பெற்றுக் கொடுக்க இணைப்பாளராக தொழிற்படுகின்றார்.

இதுவரை பெற்ற விருதுகள்

புவித் தொழில்நுட்பவியல் பிரிவில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் 50ற்கு அதிகமான ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

அமெரிக்க ஆய்வு சஞ்சிகை ஒன்றில் சமர்ப்பித்து வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றிற்காக 2021ம் வருடம் ஏப்பிரல் மாதம் இலங்கையின் தேசிய ஆய்வு சபையின் (NRC) விஞ்ஞான ஆய்வுகளுக்கான உயரிய விருதினைப்பெற்று தனது பல்கலைக்கழகத்திற்கும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக சமூகத்திற்கும் மிகப்பெரிய பெருமையைச் சேர்த்துள்ளார்.

2021 ற்கான பேராதனை பல்கலைக்கழக பொறியியற் பீடத்தின் ஆராய்ச்சி சிறப்பு விருது பெற்றுள்ளார்.

ரயில் போக்குவரத்து தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக திட்ட முன் மொழிவு ஒன்றை சமர்பித்து 2019ம் ஆண்டு உலக வங்கியின் ஆய்வுகளுக்காக 40 மில்லியன் ரூபா நிதி ஒன்றைப் பெற்று ஏறக்குறைய 12 மாணவர்களைக் கொண்டு அத்திட்டத்தை ஆய்வு செய்து வருகிறார்.

மலையக சமூகத்தில் டிக்கோயா போர்டைஸ் கொணக்கொல்லை தோட்டத்தில் சாதாரண தோட்டத் தொழிலாளிகளான சின்னையா கருப்பையா தம்பதிகளுக்கு முதற் பிள்ளையாக பிறந்து கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியில் தனது இரு சகோதரர்களுடன் தனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கள் மூலம் சிரத்தையான முயற்சிகளின் ஊடாக இவ் உயரிய பெருமைக்குரிய இடத்தை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் தனது வாழ்வின் இரண்டு மிகப் பெரிய தூண்களாக 2010ம் ஆண்டில் அமரரான ஆசிரியர் மு. ஜீவராஜனையும் 2013இல் அமரரான தனது தந்தையையும் குறிப்பிட்டு அவர்களை இழந்தது தனது வாழ்க்கையில் மிகப் பெரும் சோகமான நிகழ்வுகள் எனக் குறிப்பிடுகின்றார்.

வாழ்க்கையில் பொருளாதாரதார ரீதியாக எந்த நிலையிலிருந்தாலும், அர்ப்பணிப்புக்கள் மூலமும் முயற்சிகளின் மூலமும் உயரிய நிலைக்கு வர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கலாநிதி சி.க நவரட்ணராஜா அவர்களை வாழ்த்துகிறோம்.

இவர் மென்மேலும் பல விருதுகள் பெற்று சமூகத்திற்கும் கல்விக்கும் சேவையாற்ற எல்லாம் வல்ல ஸ்ரீ துர்க்காதேவியை வணங்கி வாழ்த்துகின்றோம்.

செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் பிறந்தநாள் அறநிதியச்சபை,
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.

அடுத்த மாத இதழில் இவ்வருடத்துக்கான மற்றைய இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது பெற்ற யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியர் திரு.இ. இரமணன் அவர்களைப் பற்றி பார்ப்போம்.

Related posts

பூப்பந்தாட்ட போட்டித் தொடர்
Thomas cup

Thumi202121

குறுக்கெழுத்துப்போட்டி – 44

Thumi202121

மனப்பசி

Thumi202121

1 comment

Leave a Comment