இதழ் 49

கனகராயன் ஆறே பாய்ந்திடு

மருங்கி வளர்ந்த மதுரை மர
நிழல்களின் கீழே ஓடுகிற ஈழநதி
வன்னிக்குள்ளே மகாவலி
கங்கை போல -மண்ணுக்குள்ளே
நம் நிலத்தின் சாட்சி

கூச்சல் போட்டுத் தாவும் குரங்குகள்
வரால் கெழுத்தி பெட்டியன்
செறிந்த ஆற்றுக்குள்
குஞ்சுகள் பொரிக்க ,வற்றுக்கு
செல்கோதுகள் வாழிடம் வகுத்தன

பல ஊர்கள் கடந்து
காடுகள் கடந்து முட்டி மோதி
,ரத்தக்கறை கழுவிய புண்ணிய நதியே
பண்டார வன்னியனார் காலத்து
நம் நாகரிகத் தடயமும் – நின்
கொண்டு ,ரணைமடு வரை நீள்கிறது

போர் ஓய்ந்த தாய்நிலத்தில்
அழுகை தீர்ந்த நிமிர்ந்த பாய்ச்சலாய்
சல சல வென்று ஓசையும்
பாடிக் கொண்டு ஓடிடும்
நாணம் செறிந்த பெண்களும் நதியில்
சென்று குளித்திட
காற்றாய் நெஞ்சில் ,ன்புறும்
கீற்றாய் கனதிப் பொழுதுகள்

யாரோ உன்னை கிளருவார்
கொடுங் கோள்கள் நிறைந்து
புடைசூழ்ந்திடும் ஞானும் எந்தை நிலங்களும்
சாபம் கொண்டு வருகிறோம்
சாட்சி சொல்ல மீத்திரு
கனகராயன் ஆறே பாய்ந்திடு!!

Related posts

முகக்கவசம் அணிந்த மோனாலிசா

Thumi202121

ஈழச்சூழலியல் 35

Thumi202121

சங்கமம்

Thumi202121

1 comment

Leave a Comment