ஹொங்கொங்கின் பெருமைக்குரிய அடையாளமாக திகழ்ந்த சீன அரண்மனை வடிவிலான ஜம்போ கிங்டம் ஹோட்டல் கடலில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த கப்பல் பராமரிப்பு செலவு காரணமாக துறைமுகத்திலிருந்த அகற்றப்பட்டு இழுவைப் படகுகளால் இழுத்துச் செல்லப்பட்ட போது கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய ஆற்று மீன் கம்போடியாவில் சிக்கியுள்ளது. ஸ்டிங்ரே எனும் பிரமாண்ட திருக்கை மீனான இது 13 அடி நீளமும் 300 கிலோ எடையும் கொண்டதாக உள்ளது. இதற்கு முன் 2005 இல் தாய்லாந்தில் கிடைத்த 293 கிலோ எடை கொண்ட கெழுத்தி மீனே இந்த சாதனையை கொண்டிருந்தது.
நியூயோர்க் நகரில் முதல் முறையாக நாய்கள் முழு சுதந்திரத்துடன் பொழுது போக்கும் தேநீர் விடுதி திறக்கப்பட்டுள்ளது. வழக்கமான தேநீர் விடுதிகளில் நாய்கள் அழைத்து வருபவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும் நிலையில் இங்கு அது போன்ற எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.