இதழ் 50

ஒரு நடுவரின் வாக்குமூலம் -2

//பாரம்பரியமாக பெயில்கள் (Bails) உள்ளன, ஏனென்றால் ஸ்டம்ப் (Stumps) தாக்கப்படும் போது, அதைக் குறிக்கவும் மற்றும் நடுவருக்கு உதவவும் பெயில்கள் இருந்தன. வெள்ளைப்பந்து (மட்டுப்படுத்தப்பட்ட) கிரிக்கெட்டில், LED தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், பந்து ஸ்டம்பை தாக்கும் போது, (Bowled, Run-out, Stumping and Hit-wicket dismissals போன்ற ஆட்டமிப்புக்களுக்கு), பெயில்கள் மட்டும் ஒளிருதல் (விழத் தேவையில்லை) சரியா? யுவேந்திர சாஹல்-டேவிட் வார்னர் சம்பவத்தை நீங்கள் பார்த்தீர்களா என்று எனக்குத் தெரியவில்லை?//

நான் அதைப் பார்க்கவில்லை, ஆனால் எனக்குத் தெரியும். நீங்கள் இதை எங்கே கொண்டு போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். எனவே, உயர்ந்த மட்டத்தில் எவ்வளவுக்கு விக்கெட்டை தாக்குவது என்று ஒரு விதியை நாங்கள் கொண்டிருக்கப் போகிறோம், அத்துடன் அதற்குக்கு கீழே மற்றைய எல்லா வகையான கிரிக்கெட்டிற்கும் மற்றொரு விதியை கொண்டிருக்கப் போகிறோம். இது விளையாட்டுக்கு சரியாக இருக்குமா? நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் போட்டிகளைத் தவிர, கிரிக்கெட்டின் மற்ற எல்லா வகையான போட்டிகளிலும் ஏன் ஒரு பந்து வீச்சாளர் பெயில்களை வீழ்த்த நிர்ப்பந்திக்கப் படவேண்டும்? மேலும் இது பலருக்கு குழப்பமாக இருக்கலாம்.


எனவே முதல்தர கிரிக்கெட்டை எடுத்துக் கொள்வோம், அங்கு பெயில்கள் மற்றும் ஸ்டம்புகளில் LED தொழில்நுட்பம் இல்லை – கீப்பர் பந்தை எடுத்து,
கையுறைகளை ஸ்டம்புகளின் மேல் அடிக்கிறார், பெயில்கள் அசைக்கப்படுகின்றன, ஆனால் அவை விழவில்லை, அப்போது மட்டையாளர் கோட்டுக்கு வெளியே (கிறிஸ்) உள்ளார். கீப்பர் மீண்டும் ஸ்டம்பை அடிக்கிறார் , மட்டையாளர் இப்போது அவரின் கோட்டினுள் உள்ளார். மற்றும்
கீப்பர் கூறுவார், முதல் தடவை நான் ஸ்டம்புகளை என் கையுறைகளால் தொட்டேன் இது ரன்-அவுட். அப்படியானால் நீங்கள் ஏன் இதற்கு அவுட் கொடுக்கவில்லை?
அதனால் திடீரென்று, நடுவர் முரண்படுகிறார், ஏனென்றால் கையில் பந்துடன் கையுறை ஸ்டம்பைத் தொட்டது, ஆனால் பெயில்கள் விழவில்லை – அவை அடைக்கப் பட்டிருக்கலாம். எனவே நீங்கள் ரன்-அவுட்கள் மற்றும் பிறவகையான ஆட்டமிழப்புக்களின் முடிவை நடுவருக்கு மிகவும் கடினமாக்குகிறீர்கள். LED தொழிற்நுட்பம் மூலமாக நீங்கள் ஒரு பிரச்சனையை உயர்ந்த மட்டத்தில் தீர்க்கலாம், ஆனால் மற்றைய ஒவ்வொரு விதமான கிரிக்கெட்டிற்க்கும் புதிய சிக்கல்களை உருவாக்குகிறீர்கள். இந்த விடயங்களை நீங்கள் தனியாக பார்க்கும் போது, அவை சரியாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் வேறுவழிகளில் கிரிக்கெட்டிற்கா ன எண்ணற்ற முரண்பாடுகளை உருவாக்குகிறீர்கள்.

//தொலைக்காட்சி நடுவர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டுமா?//

2014ல் இருந்து நான் அதை வாதிட்டு வருகிறேன். நடுவர் குழுவில் இது கடினமான பாத்திரம். நீங்கள் ஒரு சிறந்த கள (On-field) நடுவராக இருப்பதால், நீங்கள் திறமையான மூன்றாவது நடுவராக இருக்க முடியாது. மூன்றாவது நடுவருக்குத் தேவைப்படும் இரண்டு பெரிய திறன்கள் – அமைதி மற்றும் தொடர்பாடல். இது நிறைய நடுவர்களுக்கு இயல்பாக வராது. மேலும் தொழில்நுட்பத்தை கையாள்வது மற்றும் திறம்பட தொடர்புகொள்வது; கள நடுவர், போட்டி மத்தியஸ்தர், தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஒளிபரப்பு இயக்குனர் உடன் தெளிவாகவும் சுருக்கமாகவும் இருப்பது மிகவும் கடினம்.


துபாயில் நடந்த இந்த FairBreak தொடரில், நான் முதன்முறையாகச் மூன்றாம் நடுவர்களாக செயல்பட்டவர்களை கொண்டிருந்தேன், இது மிகப்பெரிய, மிகப்பெரிய தாண்டல். எங்களிடம் நிபுணத்துவம் வாய்ந்த மூன்றாம் நடுவர்கள் இருந்தால், நாம் அதிக நேரத்தை மீதப்படுத்த முடியும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதத்தில் நாம் மிகவும் துல்லியமாக மாற முடியும் என்று நான் நம்புகிறேன்.


நான் ஏன் அப்படிச் சொல்கிறே ன் என்றால், நாம் நெறிமுறையை (Protocol) வகுக்கும் போது, அதை மிகக் குறைந்த பொதுவான வழியில் வகுக்கிறோம். எனவே நாம் ஒரு எல்பி டபிள் யூ ஆட்டமிழப்புக்கு: முன்-கால் நோ-பா ல் சோதனை, அது மட்டையைத் தாக்கியதா?, பின்னர் தொடுகை நடந்த புள்ளி, பின்னர், அது ஸ்டம்பைத் தாக்கியதா? இப்போது இருக்கும் சர்ச்சைக்குரிய ஒரே பிரச்சினை: அது லெக் ஸ்டம்ப் கோட்டில் அல்லது வெளியே பிட்ச் செய்யப்பட்டதா?, ஆனால் நெறிமுறை காரணமா க, அது எங்கு பிட்ச் செய்தது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு முதலில் வேறு பல விடயங்களுக்கு செல்கிறோம். எங்களி டம்
நிபுணர்களான தொலைக்காட்சி நடுவர்கள் இருந்தால்,
பந்தை பிட்ச் செய்வதை நேரடி ஒளிபரப்பு
மூலம் சரி பார்த்து, செயல்முறையை விளக்கி,
முதலில் ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பார்த்து
அதை கவனிக்கலாம், பின் தேவைப்பட்டால் திரும்பிச் சென்று
மதிப்பாய்வு செய்ய முடியும் அத்துடன், நிறைய நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.
ஆனால் இந்த வேலைக்கு மிகவும்
பொருத்தமான மூன்றாம் நடுவர்கள் நிறைய பேர்
இருக்கிறார்கள் என்று நான் நி னைக்கவில்லை.

சிலர் உண்மையில் போராடுகிறார்கள். நீங்கள்
ஒரு சிறந்த மூன்றா ம் நடுவராக இருப்பதால்,
நீங்கள் சிறந்த நடுவர் குழாமிற்கு
தேர்ந்தெடுக்கப்படவில்லை. நீங்கள் ஒரு சிறந்த
மூன்றா ம் நடுவராக இருப்பதால், நீங்கள்
முதல்தர நடுவராகத்
தேர்ந்தெடுக்கப்படவில்லை. அது வேறு வழி.
என்னைப் பொறுத்தவரை, இது ஒரு சிறப்பு
வேலை; இது தனித்துவமானது. சிறிய குழு,
அதிக தரம், சிறந்த விளைவு.
உலகம் முழுவதும் சென்று சர்வதேச
கிரிக்கெட்டை நடாத்த உங்களுக்கு ஏழு
முழுநேர ஐசிசி போட்டி மத்தியஸ்தர்கள் உள்ளனர்.
நீங்கள் விரும்பினால், ஒவ்வொரு தொடருக்கும்
இதே எண்ணிக்கையிலான நிபுணத்துவ மூன்றாம்
நடுவர்களை பயன்படுத்தலாம்.

//நடுநிலை நடுவர்கள் – கிரிக்கெட்டுக்கு
இன்னும் தேவையா ?//


இது மிகவும் சுவாரஸ்யமான கேள்வி. பல
ஆண்டுகளாக ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில்
அங்கம் வகித்த போது, நாங்கள் நடுநிலையை விலக்கும் போது,
விளையாட்டு எதிர்கொள்ளும் ஒரு
பிரச்சனை குறைகிறது என்ற எண்ணம் எங்களுக்கு
எப்போதும் இருந்தது. புதிய நடுவர்களுக்கான
வாய்ப்புகளை நாங்கள் வழங்க வேண்டும், அது
முக்கியமானது. ஆனால் நடுநிலைமை
பிரச்சினை இனி ஒரு சார்பு நிலை பற்றியதில்லை . ஐ.சி.சியின்
மதிப்பீடு போதுமான அளவு வலுவாக இருந்தால், அது போதுமான அளவு சுயாதீனமாக
இருந்தால், மேலும் தீர்ப்பு மறுபரிசீலனை முறைமை இருந்தால்,
நடுநிலைமை தொடர்பான கட்டுப்பாடுகளை
தளர்த்தலாம் மற்றும் நியமன விருப்பத்திற்காகவும் அதைத் திறந்து விடலாம்.
என்னைப் பொறுத்தவரை , நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கக்கூடிய
ஒரு கட்டமைப்பை வழங்குவது பற்றியது.


எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு நாட்டில் இரண்டு
நடுவர்களைப் கொண்டுள்ளீர்கள், அவர்கள் சிறந்தவர்கள், பின்னர்
அவர்களை [எலைட் பேனலுக்கு] நியமிக்கவும்.
அதே போன்று ஒரு குறிப்பிட்ட நாட்டில் ஒரு
டெஸ்ட் தொடருக்கு போதுமான நல்ல உள்ளூர்
சர்வதேச நடுவர் உங்களி டம் இல்லாமல்
இருக்கலாம், எனவே நீங்கள் இரண்டு நடுநிலை நடுவர்கள் என்று
அழைக்கப்படுபவர்களை டெஸ்ட் போட்டியில் பயன்படுத்த வேண்டியிருக்கும். இது தொடரின் சூழ்நிலைகளைப் பார்த்து, கிடைக்கக்கூடிய
போட்டி நடுவர்களைப் பார்த்து மற்றும்
கிடைக்கக்கூடிய சிறந்தவர்களை பார்த்து நியமிப்பது என் நினைக்கின்றேன்.
கோவிட் மூலம் நாம் பார்த்த ஒரு விடயம்,
டெஸ்ட் மட்டத்தில் 14 அல்லது 15
நடுவர்கள் இதே காலப்பகுதியில் அறிமுகமானதையும் ஐசிசி நடுவர் பயிற்சியாளர்கள்
கடந்த பத்து ஆண்டுகளில் செய்த வளர்ச்சிப்
பணிகள் அனைத்தையும் பார்த்தது.
அவர்கள் உண்மையில்
எலைட் பேனலின் தரத்திற்கு நிகராக மிகவும்
சிறப்பா க செயல்பட்டனர். சில சமயங்களில்
அவர்கள் சில எலைட் பேனல் உறுப்பினர்களை
விட சிறப்பாக செயல்பட்டனர். கிரிக்கெட்டுக்கு
இது ஒரு நல்ல பெறுபேறு.
நாங்கள் நடுவர்களை உருவாக்குவதில் தொடர்ந்து முதலீடு செய்
வதை உறுதி செய்ய வேண்டும். பெரும்பான்மையான
முழு உறுப்பு நாடுகளில் இன்னும்
அர்ப்பணிப்புள்ள நடுவர்களின் மேலாளர்
இல்லை, தேசிய நடுவர்களின் கல்வி மேலாளர்
இல்லை, தேசிய நடுவர்களின் பயிற்சியாளர்
இல்லை, வலுவான மதிப்பீடு மற்றும் அங்கீகார
அமைப்பு இல்லை. தேசிய பயிற்சியாளர் அல்லது ஆய்வாளர்
இல்லாமல் ஒரு தேசிய அணி செயல்படுவதை
உங்களால் கற்பனை செய்ய முடியுமா? ஆனால்
நடுவர்களுக்கு இது பரவாயில்லை.
அதனால் தான் நடுநிலைமை என்று வரும்போது,
நாம் அனைவரும் நடுநிலை அல்லது சொந்த நாட்டு
மற்றும் வெளி நாட்டு நடுவராக இருக்க
வேண்டும் என்று சொல்வதை விடுத்து,
சூழ்நிலைகள் மற்றும் வாய்ப்புகளின்
அடிப்படை யில் கிடைக்கக்கூடிய சிறந்தவர்களை
நியமிப்பதற்கான நெகிழ்வுத்தன்மையை கொண்டிருப்பது பற்றியது.

//நடுவர் விதிகள் மற்றும் அது போன்ற
விஷயங்களைப் பற்றி வீரர்கள் மற்றும்
பயிற்சியாளர்கள் அறிந்த இருக்க வேண்டிய தேவை இருக்கிறதா? //

இது ஒரு சிறந்த கூற்று. எனவே, நீங்கள் எனக்கு ஒரு
நாட்டைச் சொல்லுங்கள், இந்த நாடு உண்மையில்
அவர்களின் வீரர்களுக்கான உயர் செயல்திறன்
திட்டத்தின் ஒரு பகுதியாக நடுவர் தீர்ப்பு
கூறுகளைக் கொண்டுள்ளது என்று?. கிரிக்கெட்
வரலாற்றில் சேர் டான் பிராட்மேன் மற்றும்
பிரையன் பூத் ஆகிய இரண்டு ஆஸ்திரேலிய
கேப்டன்கள் மட்டுமே தகுதியான நடுவர்களாக
இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
வீரர்களின் மேம்பாட்டிற்கான உயர்-
செயல்திறன் பாதையில் ஒரு அதிகாரப்பூர்வ தீர்ப்பு வழங்கும்
கூறுகளை வைப்பதன் தீங்கு என்ன? நிறைய
நல்லது இருக்கிறது: அவர்கள் நடுவர்களின் வேலையைப் புரிந்து கொள்வார்கள், அது எவ்வளவு
கடினமானது என்பதைப் புரிந்து கொள்வார்கள்,
விளையாட்டின் விதிகள் அல்லது சட்டங்களைப்
புரிந்து கொள்வார்கள் மற்றும் அதைத்
தங்களுக்கும் சாதகமாகப்
பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தப்
பகுதியில் தலைமை , வழிகாட்டுதல் மற்றும்
வழி ஆகியவற்றைக் காட்டுவது
உண்மையில் கிரிக்கெட் சபைகளின் பொறுப்பாகும். நிச்சயமாக, வீரர்களின் டிஆர்எஸ்
சதவீதத்தை மேம்படுத்த இந்த அறிவு உண்மையில்
உதவும்.

//மேலும் அவர்கள் விவாதத்திற்கு
ஆக்கப்பூர்வமாக பங்களிக்க முடியும்.//

பட் கம்மின்ஸின் மேலாளர் மூலம் கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு இந்த வாய்ப்பை
வழங்கினேன். நான் சொன்னேன், டிஆர்எஸ்
மதிப்பாய்விற்கு வரும்போது நீங்கள்
நடுவராகவும், ஒரு வீரரைப் போல குறைவாகவும்
சிந்திக்கத் தொடங்கினால், டிஆர்எஸ் மூலம்
உங்களுக்கும் உங்கள் அணிக்கும் அதிக வெற்றி
விகிதத்தை அடைய என்னால் உதவ முடியும் என்று
எண்ணுகிறேன்.
சில விஷயங்களை நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட
வழியில் செய்கிறோ ம் என்பது பற்றிய புரிதலும்
அறிவும் நமது விளையாட்டில் இல்லை.
பார்வையாளர்களின் கண்ணோட்டத்தில் ஏதோ
சரியா க இல்லாததால், நாங்கள் அதைப் பற்றி
சி ந்திக்கவில்லை, நாங்கள் தவறவிட்ட ஒரு மாய
தீர்வு இருக்கிறது என்று ஒரு பார்வை உள்ளது.
பார்வையாளர்களும் உங்கள் வாசகர்களும்
நாங்கள் விஷயங்களை மட்டும்
உருவாக்கவில்லை, உண்மையில் அதைச் சிந்தித்துப் பார்க்கிறோ ம் என்பதைப் புரிந்து
கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மேலும் எங்கள் விளையாட்டு சரியாக இல்லை. எங்கள்
விளையாட்டில் சரியான தீர்வு இல்லாத நிறைய
விஷயங்கள் உள்ளன.

Related posts

சித்திராங்கதா – 48

Thumi202121

நெல்சன் மண்டேலா
ஒரு சகாப்தம்

Thumi202121

வர்ணப் படைப்புகளின் சங்கமம் துமி!

Thumi202121

Leave a Comment