இதழ் 50

நெல்சன் மண்டேலா
ஒரு சகாப்தம்

தென்னாபிரிக்காவினுடைய மீசோ கிராமத்தில்  18 ஜூலை மாதம்  1918ல்  நெல்சன் மண்டேலா பிறந்தார.; நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் ரோலிக்லகலா.   இதன் பொருள் மரக்கிளை  அல்லது பிரச்சினையை உருவாக்குபவர் என்பதாகும். மிகச்சிறந்த அரசியல் கைதி என்று அறியப்படுபவர். தென்ஆப்பிரிக்காவின் கறுப்பினத்தவர்களின்  சிறந்த நம்பிக்கையாளராகவும்  அறியப் படுகின்றார். மகாத்மா காந்தியின் இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் காந்தி என்றும் அழைக்கப்படுகின்றார்.

நெல்சன் மண்டேலா முதன்முதலாக அவருடைய  குடும்பத்தில் கல்வியை கற்ற நபராக காணப்படுகின்றார்; இவர் தனது கல்வியினை மிசனரி ஒன்றிலேயே ஆரம்பித்தார.; 1039 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா  பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார.; இது அந்த காலகட்டத்தில் மேலைநாட்டு உயர் கல்வியை தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களுக்கு அளிக்கும் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. தொடர்ந்து 1944 ஆம் ஆண்டு மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்தார்.

ஆபிரிக்காவின்  நிறவெறிக்கு எதிராக வெள்ளையர்கள் மேற்கொண்டிருந்த அடக்குமுறைகளுக்கு எதிராக போராடியவர்களில் மிகவும் பிரதானமான ஒருவராக இவர் காணப்பட்டார்.  ஆரம்பத்தில் இவர் அகிம்சை வழியில் போராடினாலும் பிற்பட்ட காலம் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் நாட்டம் கொண்டவராக காணப்பட்டார.;  அதாவது 1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் புதிய ஆயுத  பிரிவான யும்கோன்டோவை  நிறுவியவர் நெல்சன் மண்டேலா தான்;.  அரசிற்கு எதிராகப் போராடியமைக்காக நெல்சன் மண்டேலா 1962ஆம் ஆண்டு முதல்  27 ஆண்டுகள் சிறையில் இருந்தார் அவற்றில் முதல் பதினெட்டு வருடங்கள் டிராகன் சிறையில் இருந்தார.; 1982 ஆம் ஆண்டு மண்டேலா மெயின் ஸ்டேண்டில் அமைந்துள்ள போல்ஸ்மோர்  சிறைக்கு மாற்றப்பட்டார்.

1888ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார.; அதன்பின் 11 பெப்ரவரி  1990 ஆண்டு மண்டேலா அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.  1994 ஆம் ஆண்டு வரலாற்றில் முதல் தடவையாக பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களின் பங்களிப்புடன்  பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.  தென் ஆப்பிரிக்க நாட்டின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக நெல்சன் மண்டேலா பொறுப்பேற்றார். அத்துடன் தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவின் தலைமையிலான அரசு 1995ம் ஆண்டு உலகக் கோப்பையை நடாத்தியது.

அத்துடன் தென் ஆப்பிரிக்காவின்  நிறவெறிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்த அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சியினை மேற்கொண்டார்.  1996ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவின் புதிய அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நெல்சன் மண்டேலா தலைமை தாங்கினார்  இந்த அரசியலமைப்புச் சட்டமானது பெரும்பான்மை  மக்களின் விருப்புடன்  அடிப்படையிலான எளிமையான மத்திய அரசு உருவாக்கியதுடன் வெள்ளையர்கள் உட்பட சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகளை தடை செய்த ஓர் அரசியல் யாப்பாகவும்  காணப்படுகின்றது.  அத்துடன் 1999ஆம் ஆண்டு தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார.; அதனைத் தொடர்ந்து நெல்சன் மண்டேலா பவுண்டேனை தொடங்கி ஏழை மக்களின் கல்விக்காகவும் கருப்பின மக்களின் நல்வாழ்விற்காக குரல் கொடுத்து வருகின்றார்.

 அத்துடன் 1993ம் ஆண்டு நெல்சன் மண்டேலாவின் சமாதான  நடவடிக்கைக்காக நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு நோபல் பரிசினைப் பெற்ற போது அதனை இந்தியாவினுடைய அகிம்சை நாயகன் மகாத்மா காந்திக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார.; 1990ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றவராக காணப்பட்டார். ‘சுதந்திரத்தை நோக்கிய நீண்ட பயணம்”  ‘என்னுடன் உரையாடல்” ஆகிய நூல்களை நெல்சன் மண்டேலா எழுதியுள்ளார். நெல்சன் மண்டேலா தன்னுடைய இறுதி காலத்தின் போதும் உரையாற்றுகையில் குறிப்பிட்ட விடயம் யாதெனில் ஒரு சிறந்த மனிதனாக நான் இறப்பதற்கு தயாராக இருக்கின்றேன். ஏன்பதாகும்.  இவரது  வாழ்க்கை வரலாறானது  A LONG WALK TO FREEDOM படமாக எடுக்கப்பட்டுள்ளது. 

2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி தனது 95வது வயதில் இவர் காலமானார். 

நெல்சன் மண்டேலா தினமானது ஜூலை மாதம் 18ஆம் திகதி ஒவ்வொரு வருடமும் உலகம் பூராகவும் அனுஸ்டிக்கப்படுகின்றது.  உலகில் தனக்காக வாழாது பிறருக்காக வாழ்ந்த உத்தமர்களுள்  ஆப்பிரிக்க கண்டம் வியந்து பார்க்கின்ற தலைவர்களில் ஒருவராக நெல்சன் மண்டேலா திகழ்கின்றார்.  இவர் தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக  கால் நூற்றாண்டிற்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த ஒரு அளப்பரிய தலைவராக விளங்குகின்றார். நெல்சன் மண்டேலாவை கௌரவப் படுத்தும் முகமாக நெல்சன் மண்டேலா தினமானது சர்வதேச ரீதியாக ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 18ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது.  ஐக்கிய நாடுகள் சபையினால் 2009-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த தினமானது பிரகடனம் செய்யப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும்  வலியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காகவும் தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு மனிதனாக நெல்சன் மண்டேலா காணப்படுகின்றார்.  இவ்வாறு அர்ப்பணித்த இந்த நெல்சன் மண்டேலாவின் நிம்மதியான வாழ்க்கை ஒருபோதும் அமையவில்லை. ஆனால் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் தன்னம்பிக்கையுடனும் அமைதியுடனும் வாழ்வதற்கு இவருடைய போராட்டம் வழிவகுத்துள்ளது என்றால் மிகையில்லை.

Related posts

ஆய்வின் அரசர்கள்

Thumi202121

இலக்கங்ளை அடைகிறோம்! இலக்குகளை அடைவோம்!

Thumi202121

அரங்கு மறுக்கப்பட்டவள் துமியில் காவியமானாள்

Thumi202121

Leave a Comment